கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. இன்றைய விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது… கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால்…
Read Moreசசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத,…
Read Moreதலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி
தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது. யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது. தலை வெட்டியான் பாளையம் – ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை கவரும் இந்த இணைய தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை கண்டு…
Read Moreதேவரா விமர்சனம்.. கடல் கொள்ளை
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சையப் அலி கான், பிரகாஷ்ராஜ், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் ’தேவரா’ படம் பான் இந்தியா வெளியீடு.. கதை… நம் நாட்டிற்கு சட்ட விரோதமாக வரும் ஆயுதங்களை தொழில் அதிபர் கட்டளைக்காக செங்கடலுக்கே சென்று கொள்ளையடித்து கொடுப்பது ஜூனியர் என்டிஆர் இன் தொழில்.. இவருக்கு உடந்தையாக சைப் அலிகான் கலையரசன் உள்ளிட்ட நண்பர்கள் உண்டு. ஒரு கட்டத்தில் இவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கடற்படை அதிகாரி நரேன்.. நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்கிறீர்கள் என சொல்கிறார். இதனையடுத்து என்டிஆர் திருந்துகிறார்.. ஆனால் இவரது நண்பர்களோ எங்களது தொழில் இதுதான்.. நாங்கள் விட முடியாது என பிரச்சனை செய்யவே மோதல் வெடிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? நாட்டிற்கு துரோகம் செய்த நண்பர்களை இவர் தீர்த்து…
Read Moreசெஸ் ஒலிம்பியாட் தங்கவீரர்களை கெளரவிக்கும் வேலம்மாள் நெக்ஸஸ்
வேலம்மாள்நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது மற்றும் எதிர்காலதிறமைகளை வளர்க்கிறது 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024ல் தங்கப் பதக்கம் வென்ற ஐந்துசதுரங்க வீரர்களான கிராண்ட் மாஸ்டர் D குகேஷ், கிராண்ட் மாஸ்டர் ர வைஷாலி, கிராண்ட் மாஸ்டர் R பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன், கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் கல்யாண் ஆகியோரை வேலம்மாள் நெக்ஸஸ் பெருமையுடன்கெளரவித்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு, நாட்டிற்கும் நிறுவனத்திற்கும்பெருமை சேர்த்த இந்த சாம்பியன்களின் சிறப்பான சாதனைகளை எடுத்துரைத்தது. ஒவ்வொரு செஸ்மேஸ்ட்ரோவிற்கும் ஈர்க்கக்கூடிய தொகையாக ரூ.40 லட்சம் அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கானபாராட்டும் வண்ணம் அளிக்கப்படுகிறது.. அவர்களின் மணிமுடியில் மற்றொரு மாணிக்கம் சேர்த்து, ஹங்கேரியில் மதிப்புமிக்க “சிறந்தபள்ளி விருது” வேலம்மாள் நெக்ஸஸுக்கு வழங்கப்பட்டது, இது துணை நிருபர் திரு. ஸ்ரீராம்வேல்மோகன் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகத்தான…
Read MoreHitler ஹிட்லர் விமர்சனம்.. கொள்ளையன்
கதை… தன் நண்பன் ரெட்டின் கிங்சிலியை தேடி சென்னைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி.. அங்கு ஒரு வேலையாக தங்குகிறார்.. அப்போது நாயகி ரியாவை அடிக்கடி டிரெயினில் சந்திக்க சந்திக்க காதலும் கொள்கிறார். இதனிடையில் தேர்தல் நேரத்தில் ட்ரெயினில் அடிக்கடி அரசியல்வாதியின் கோடிக்கணக்கான கருப்பு பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொள்ளையனை தேடி போலீஸ் விசாரித்து வருகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளையனை போலீஸ் நெருங்கி துப்பாக்கி சூடு நடத்த முயலும் போது ஒருவன் விஜய் ஆண்டனி சுட்டு விடுகிறான்.. அப்பொழுது அவனை பிடித்து மிரட்டி கௌதம் மேனன் விசாரிக்கும் போது விஜய் ஆண்டனி தான் கொள்ளையன் என அந்த நபர் சொல்கிறார். அப்படி என்றால் விஜய் ஆண்டனி உண்மையில் யார்.? அவருக்கு கொள்ளை அடிப்பது நோக்கம் என்ன?என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர் – நடிகையர் : சமூக…
Read Moreதில்ராஜா விமர்சனம்.. செம தில்லு
கதை… நாயகன் விஜய் சத்யா.. தன் மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.. ஒருநாள் ஷாப்பிங் சென்று விட்டு இவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு அமைச்சரின் மகன் இவரிடம் பிரச்சனை செய்கிறார்.. மனைவி மகளைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்தும் சென்று விடுகிறார்.. ஆனால் மந்திரி மகன் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது.. இதனை எடுத்து போலீசின் கவனம் இவர் பக்கம் திரும்பி விடுகிறது… அதன் பிறகு என்ன நடந்தது? அமைச்சரிடம் இருந்து தப்பித்தாரா.? போலீஸிடம் இருந்து தப்பித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர் – நடிகையர் : பாட்டு ஃபைட் என இரண்டிலும் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் சத்யா.. கிளைமாக்ஸ் சீனில் சட்டையை கழட்டி விட்டு அவர் மோதும் சண்டை காட்சி வேற லெவல் ரகம்.. ஸ்மார்ட்டான இவருக்கு…
Read Moreகாம்தார் நகருக்கு எஸ். பி பாலசுப்பிரமணியன் சாலை என்று பெயரிட அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றிகள் – இயக்குநர் பாரதிராஜா
வணக்கம், காம்தார் நகருக்கு காந்தக் குரலோனின் பெயர் வைத்தது ஆகப் பொருத்தமான செயல். நாம் கடந்து வரும் நண்பர்கள் பிரிந்து போனதும் அவர்களைச் சுற்றிய நினைவுகளையும் சேர்ந்து கடந்துவிடுகிறோம். அப்படியில்லாமல் கடந்துபோன நிகழ்வுகளை மீட்டுத் திரும்பவும் வைத்துக்கொள்வதில் இருக்கிறது நம் பேரன்பு. அப்படி நம்மிடையேயும், காற்றோடும் இவ்வுலகின் அலையோடும் கலந்து நிற்பவர் இசைக் குரலோன் பத்மஸ்ரீ பத்ம விபூஷன் எஸ். பி. பி . அவர் வாழ்ந்த காம்தார் நகருக்கு எஸ். பி பாலசுப்பிரமணியன் சாலை என்று பெயரிட. அறிவித்துள்ள தமிழக அரசுக்கும்…மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றிகள். தமிழ்த் திரையுலகிற்கு முதல்வர் அவர்கள் செய்துவரும் நலன்களும்… திரைத்துறையினரின் மீது கொண்டுள்ள அன்பும்… அவர்களுக்காக முன்னின்று செய்யும் ஆக்கமிகு செயல்களும் மிக மிக நன்றிக்குரியவை. மிகப்பெரும் நன்றிக்…
Read Moreமெய்யழகன் விமர்சனம்.. உறங்காத உறவுகள் 4.5/5
கதை.. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் அரவிந்த்சாமி.. சொத்து பிரச்சனை காரணமாக இவரது குடும்பம் தனித்துவிடப்பட பெற்றோருடன் சென்னையில் குடியேறுகிறார். திருமணம் ஆகி மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமி ஒரு கட்டத்தில் தன் சித்தி மகள் திருமணத்திற்காக தன் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்தசாமி அங்கு கார்த்தியை சந்திக்கிறார். சிறு வயது முதலே அரவிந்த்சாமி மீது அதீத பாசம் கொண்ட கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார்.. ஆனால் கார்த்தி யார் என்று கூட தெரியாமல் வேறு வழி இல்லாமல் அவருடன் கொஞ்சமாக பேசுகிறார்.. போன் நம்பர் கொடுப்பதை கூட தவிர்க்கிறார். இவர் யார்.. இவர் நமக்கு எதற்காக செய்ய வேண்டும்.. அத்தான் அத்தான் என்று…
Read Moreநடுக்கடலில் சொகுசுக் கப்பலில் வெளியான “பன் பட்டர் ஜாம்” படத்தின் செகண்ட் லுக் !!
Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது லுக், நடுக்கடலில் கோர்டிலியா குரூஸ் சொகுசுக்கப்பலில், வெளியிடப்பட்டது. தமிழ் திரை வரலாற்றில் முதல் முறை, ஒரு சொகுசுகப்பலில் ஒரு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் படக்குழுவினர் அங்குள்ள பயணிகளுடன் உரையாடி, படத்தினைப்பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். படக்குழுவினர் இந்நிகழ்வின் கிளிம்ப்ஸே வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவ்வீடியோ தற்போது இணையமெங்கும் வைரலாக பரவி…
Read More