மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபுடேஜ்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அற்புதமான அதிரடி திரைப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகை மஞ்சு வாரியர் முதன்மைப் பாத்திரத்தில் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார். அஞ்சாம் பாதிரா, கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் என பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற எடிட்டரான சைஜு ஸ்ரீதரன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். எடிட்டிங்கில் இருந்து டைரக்டராக சைஜு மாறுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவரது பன்முகக் கதை சொல்லும் திறமைக்கு சான்றாக ‘ஃபுட்டேஜ்’ அமைந்திருக்கிறது. மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின்…
Read More‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தில் நானியின் இரண்டாவது தோற்றம் வெளியீடு
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது. ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர். ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்…
Read Moreஉலகளவில் 700 கோடி தமிழில் 28 கோடி வசூல் சாதனையில் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’
பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சயின்ஸ் ஃபிக்சன் வித் ஃபேண்டஸி ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரிலான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத்- ஸ்வப்னா தத் -பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம்…
Read Moreஇந்தியன் 2 ஊழலின் முகத்தை உண்மையாகப் பேசும் ஒரு முழுமையான படம்” – நடிகர் சித்தார்த்
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்… நடிகர் சித்தார்த் பேசியதாவது… ‘இது மிகப்பெரிய மேடை, கமல்ஹாசன் சார், ஷங்கர் சார் இருவரும் அவர்களின் உழைப்பால் இந்த மேடையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மேடையில் நானும் இருப்பது பெருமை, 25 வருடம் கழித்து இரண்டாவது வாய்ப்பாக, என் குருவுடன் நடிக்கும், இந்த வாய்ப்பை ஷங்கர் சார் தந்துள்ளார். அவருக்கு நன்றி. கமல்…
Read Moreசிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக கேப்டன் மில்லர் தேர்வு
சத்ய ஜோதி பிலிம்ஸின் “கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது! 10வது லண்டன் நேஷனல் ஃபிலிம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்” படம், உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன்…
Read Moreஇளையராஜா அவதாரம் பட பாணியில் பின்னணி இசை அமைத்த “ஜமா” திரைப்படம்
இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் ‘கூழாங்கல்’ தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ‘ஜமா’! பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக, இதுபோன்ற திரைப்படங்கள் நாடு மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டு வருகின்றன. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions, தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். ‘ஜமா’ என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக்…
Read Moreஷாங்காய் ஃபிலிம் ஆர்ட் சென்டரில் ரசிகர்களை சந்தித்த ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி
மார்வெல் ஸ்டுடியோஸ் ‘டெட்பூல் & வால்வரின்’ குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது! ரியான் ரெனால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் ஷாங்காயில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸ், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ‘டெட்பூல் & வால்வரின்’ நிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிட்டது. நடிகர்கள் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் பண்ட் மாவட்டத்தில், ஷாங்காய் ஃபிலிம் ஆர்ட் சென்டரில் ரசிகர்களை உற்சாகமாக சந்தித்துள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது
Read Moreஉலகம் புகழும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து கொண்டிருக்கும் நடிகர் பிரபாஸ்
இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..? பிரபாஸின் திரை தோன்றல் மற்றும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் துடிப்பான இளமையுடன் ஏற்று நடித்து, ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் உள்ள அவரது தெளிவான பார்வை… அவரை இந்த தேசத்தின் இதயத் துடிப்பாகவும், வெகுஜன மக்களின் அன்புக்குரியராகவும் மாற்றி இருக்கிறது. நேர்மை, உறுதி தன்மை, பேரார்வம்… ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற பிரபாஸ்.. திரையில் தோன்றும் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக, அனைத்து நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அளித்து , உலகளாவிய அளவில் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்திருக்கிறார். பிரபாஸின் தீவிர ரசிகர் குழு அண்மையில் ஜப்பான் நாட்டிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகை தந்து அவரது சமீபத்திய திரைப்படமான ‘கல்கி 2898 கிபி’ படத்தை கண்டு களித்தனர். இது அனைவரின் மனதையும் கவர்ந்தது. எளிதில் யாராலும் நம்ப இயலாத இந்த…
Read Moreதுவங்கியது ப்ருத்வி அம்பர் சந்திரசேகர் பாண்டியப்பாவுடன் இணையும் புதிய படம்
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகவுள்ள, பான் இந்திய திரைப்படமான ‘சௌகிதார்’ படத்தின் படப்பிடிப்பு, பெரும் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது. பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில், இப்படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் கிளாப் அடிக்க, சாய்குமார் ஒளிப்பதிவு செய்து, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். ‘ரதவரா’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ‘சௌகிதார்’ படத்தினை இயக்குகிறார். ‘டயலாக் கிங்’ என்று அழைக்கப்படும் சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தொட்மனே குடி தன்யாராம் குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து படக்குழு படத்தை அறிமுகம் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது. படம் குறித்து இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறுகையில், “பல மொழிகளில் வெளியாகும் எனது ஆறாவது படம் இதுவாகும். கல்லஹள்ளி சந்திரசேகர் ஒரு…
Read Moreப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ வெளியிட்டது
5 மொழிகளில், ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறது. ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வரவுள்ள பிரைம் டே 2024க்கு முன்னதாகவே, புதிய சேனல்கள், பிரைம் வீடியோ சேனல்களின் பார்ட்னர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாக்களில் சிறப்பான தள்ளுபடிகள் இவற்றிற்கு மேலாக, சமீபத்திய மற்றும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அனுபவிக்க முடியும். மும்பை—ஜூலை 3, 2024— இந்தியாவில் பெரும் ஆதரவுடன் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான ப்ரைம் வீடியோ, ஜூலை 20 மற்றும் 21 பிரைம் டே -2024ஐ முன்னிட்டு தனது பிரைம் உறுப்பினர்களுக்காக 5 மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 14 இந்திய மற்றும் சர்வதேச தொடர்கள் மற்றும்…
Read More