ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ வெளியிட்டது

5 மொழிகளில், ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறது. ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வரவுள்ள பிரைம் டே 2024க்கு முன்னதாகவே, புதிய சேனல்கள், பிரைம் வீடியோ சேனல்களின் பார்ட்னர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாக்களில் சிறப்பான தள்ளுபடிகள் இவற்றிற்கு மேலாக, சமீபத்திய மற்றும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அனுபவிக்க முடியும். மும்பை—ஜூலை 3, 2024— இந்தியாவில் பெரும் ஆதரவுடன் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான ப்ரைம் வீடியோ, ஜூலை 20 மற்றும் 21 பிரைம் டே -2024ஐ முன்னிட்டு தனது பிரைம் உறுப்பினர்களுக்காக 5 மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 14 இந்திய மற்றும் சர்வதேச தொடர்கள் மற்றும்…

Read More

சட்னி சாம்பார் வெஃப் சீரிஸின் டீஸர் வெளியானது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் அசத்தலான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் கலக்கலான காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் கதை, இரண்டு உணவகங்களைச் சுற்றி நகர்கிறது. முதலாவது நிழல்கள் ரவியின் குடும்பத்திற்குச் சொந்தமான “அமுதா கஃபே” என்ற பாரம்பரிய ஹோட்டல். ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் சுவையான சாம்பாருக்காகவே திரும்பத் திரும்ப ஹோட்டலுக்கு வருகை தருகிறார்கள். அடுத்ததாக யோகி…

Read More

கள்ளக்குறிச்சி சம்பத்தை நினைவூட்டும் அப்புக்குட்டி பட டீஸர்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய “பிறந்தநாள் வாழ்த்துகள்” தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது! தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளதில் ‘ஐயெம் ஏ பாதர்’, ‘ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாளியான ஐஸ்வர்யா அனில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு. இன்னொரு முக்கிய வேடத்தில் ரோஜி மேத்யூ நடிக்கிறார். மற்றும் சந்தோஷ் சுவாமிநாதன், ராகந்த், மிமிக்ரி பாபு,…

Read More

ஜூலை 26ல் டெட்பூல் & வால்வரின் சாகசங்களை திரையில் காணத் தயாராகுங்கள்

டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது! டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது!   சமீபத்திய புரோமோ, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் அதிரடி சண்டையை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது. சூப்பர் வில்லன் சப்ரெடூத் மீண்டும் வால்வரினை எதிர்கொள்ளும்படி இந்த ஆக்‌ஷன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. டெட்பூல் கூறியது போல், நாங்களும் மிகப்பெரிய ரசிகர்கள்! புரோமோவை விட பல மடங்கு பிரம்மாண்டமாக நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26…

Read More

கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ஹாரர் ”திரைப்படம் U R NEXT”

அறிமுக இயக்குநர் ஷரீஃப் இயக்கத்தில் தயாராகும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. U R NEXT இதில், கே.எஸ்.ரவிக்குமார், டிவி நடிகை ரக்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் திரைப்படமாக உருவாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சியையும், ‘கலைமாமணி’ ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள். ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இதில் பணியாற்றுகின்றனர். ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட்…

Read More

கெட்டவன் அழியக்கூடாது; கெட்டதுதான் அழிய வேண்டும் என்று இயக்குநர் சொன்னது பிடித்திருந்தது – விஜய் ஆண்டனி

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்”. இயக்குநர் விஜய் மில்டன், ” இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘கருடன்’, ‘மகாராஜா’ என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த…

Read More

”தல “அஜீத்குமாரின் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி, இணையற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கியவர் மற்றும் தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றவர். ‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் – த்ரிஷா – ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆரவ், ரெஜினா…

Read More

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சீரன் திரைப்படம்

ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும்  சீரன் திரைப்படம்  விரைவில் வெளியாகிறது !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை K முருகன் இப்படத்தை  இயக்கியுள்ளார். நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் மையம் தான் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன்…

Read More

’சிங்காநல்லூர் சிக்னல்’ மூலம் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இணையும் பிரபுதேவா – யுவன் கூட்டணி

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர்  AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் “சிங்காநல்லூர்  சிக்னல்” படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது. ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன்  சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம்…

Read More

நாயகனாக பிக்பாஸ் ராஜு அறிமுகமாகும் Gen Z தலைமுறை படம் ‘பன் பட்டர் ஜாம்’

இப்படத்தை Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். ‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார். ராஜூ நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு வசனமும், தேசியவிருது வென்ற ‘பாரம்’ படத்தில் திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி வரும் திரைப்படம் ”பன் பட்டர் ஜாம்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும்…

Read More