ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “தினசரி”

ஸ்ரீகாந்த்- சிந்தியா லெளர் டே ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் ” தினசரி “. மேலும் இதில் எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, இன்னும் பலர் நடிக்கின்றனர். இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் இதற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஜான் பிரிட்டோ கலையையும், சாம் சண்டை பயிற்சியையும், தினேஷ் நடன பயிற்சியையும் , பாலமுருகன்– சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல் படமாக இயக்கி வரும் சங்கர் பாரதி படத்தை பற்றி கூறியதாவது, ” மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன்…

Read More

‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்பட ஆஃபர் “’ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’”

இயக்குநர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஆயிரம் பொற்காசுகள்”. சிறிய படங்கள் வெளியீட்டின் போது மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வருவதில்லை, அதனால் பல காட்சிகள் திரையரங்கில் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் நல்லபடம் என்று கேள்விப்பட்டு மக்கள் அந்த திரைப்படத்தைக் காண வந்தால் அதற்கும் அப்படங்கள் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டுவிடுகின்றன, என்பதான பிரச்சனைகள் நெடுங்காலமாக தமிழ்சினிமாவில் இருந்து வருகின்றது. இதை மனதில் கொண்டு “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர் அவர்கள் ஒரு அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் கே ஆர் அவர்களின் கடிதம்: உயர்திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு…. வணக்கம்… வருகிற 22 ஆம் தேதி “ஆயிரம் பொற்காசுகள்” என்ற…

Read More

53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் “ஏழு கடல், ஏழு மழை”

படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது. வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம். இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர்…

Read More

ஹீரோ யார் வில்லன் யார் என்று தெரியாத கதை: ‘தரைப்படை’ திரைப்படம்!

ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும் .அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக்கதைகளும் அமைக்கப்படுகின்றன.படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ , இவர் வில்லன் என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும். ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டுகின்றன . ரசிகர்களுக்கு யார் நேர்நிலை நாயகன்? யார் எதிர்மறை நாயகன் ? என்று புரியாது. அப்படி ஒரு கதையாக எடுத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘தரைப்படை’ . இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை…

Read More

சரத்குமார் வழியில் ஜெய் ஆகாஷ்…. அஜீத் தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் கே. ராஜன் பேச்சு

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக தயாரிக்கும் படம் “ஜெய் விஜயம்”, இப்படத்தை ஜெய்தீஸன் நாகேஸ்வரன் (ஜெய் ஆகாஷ் ) இயக்கி உள்ளார். இதில் அக் ஷயா கண்டமுத்தன் (விஜய் டி வி ஆஹா கல்யாணம் சீரியல் ஹீரோயின்) கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா. சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதன் இசை யமைப்பாளர் சதீஷ் குமார். சன் டி வி, விஜய் டி வியில் பல முறை சேம்பியனாக கலக்கின மைக்கேல் அகஸ்டின் காமெடி வேடத்தில். முதன்முறை இதில் நடிக்கிறார். விழாவில் ஹீரோ ஜெய் ஆகாஷ் பேசியதாவது: இப்படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்த எல்லோருமே பாராட்டினார்கள். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தின் எடிட்டர் ஏ.சி.மணி கண்டன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோல் ஒளிப்பதிவாளர் பால்பாண்டி இடைவிடாமல்…

Read More

வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா

  ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு “இந்திரா” என்று பெயரிட்டுள்ளனர். நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர்…

Read More

மற்றுமொரு எளிமையான யதார்த்த கதையில் நாயகனாக “மணிகண்டன்”

மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும்போது பொழுதுபோக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. வாழ்வின் சாகசங்களைச் சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள் ! சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S. வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் (ஜெய் பீம், குட் நைட் ), சான்வே மேகனா, குரு சோமசுந்தரம் (ஜோக்கர் , ஜிகர்தண்டா) இயக்குனர் சுந்தர்ராஜன், தனம் (சிவப்பு மஞ்சள் பச்சை ) பிரசன்னா பாலச்சந்திரன் (மண்டேலா, சேத்துமான்) ஜென்சன் (அயலி ) இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில்…

Read More

18ஆம் வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி

நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்து திரையுலகில் நிலைத்து நின்று பயணிக்க வேண்டும் என்றால், ரசிகர்கள் மனதில் தங்கள் உருவத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டும். அது நிச்சயமாக ஒரு ஆக்சன் படம் மூலமாக தான் அமையும். நடிகர் விஷாலுக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக இயக்குநர் லிங்குசாமி மூலமாக கிடைத்த அப்படி ஒரு திருப்புமுனை தான் சண்டக்கோழி திரைப்படம். அந்த படம் அவருக்கு அழகான ஒரு ஆக்சன் பாதையை போட்டுக் கொடுத்தது.. இன்றுவரை அவர் அதில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். இன்றும் தொலைக்காட்சிகளில் ‘சண்டக்கோழி’…

Read More

பிக்பாஸ் “ஷாரிக் ஹாசன்” நடிப்பில் உருவாகி இருக்கும் நேற்று இந்த நேரம்

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.என் மேற்கொண்டுள்ளனர். ”நேற்று இந்த நேரம்” படத்தின்…

Read More

சபாநாயகன் விமர்சனம்

ஒரு ஜாலியான பையனின் காதல் அனுபவங்கள் தான் இந்த சபாநாயகன் திரைப்படம். ச.பா.அரவிந்த் ஆன நாயகன் அசோக் செல்வனுக்கு பள்ளிகாலத்தில் ஒரு காதல், கல்லூரி காலத்தில் ஒரு காதல், சிங்கப்பூரிலிருக்கும் பெறோரைப் பார்க்கச் செல்லும் போது ஒரு காதல், எம்.பி.ஏ படிக்கும் போது ஒரு காதல் என தடுக்கி விழும் இடத்திலெல்லாம் ஒரு காதல் செய்கிறார்.  பார்க்கும் பெண்கள் எல்லோர் மீதும் காதலில் விழும் 2கே கிட்ஸ் கதாபாத்திரம்.  சிரித்துக் கொண்டே ஜாலியாக செய்திருக்கிறார். ஹீரோயின்களாக வரும் கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் ஆகிய மூவரில் முதல் இடம் மேகாவிற்கு. வந்து செல்வது சில காட்சிகள் மட்டும் தான் என்றாலும் கூட அவர் வந்து செல்லும் காட்சிகள் க்யூட்டான கவிதைகள் போல இருப்பதால் காட்சிகளையும் அந்தக் காதலையும், அதனோடு மேகாவின் அழகையும் ரசிக்க முடிகிறது. செகண்ட்…

Read More