ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே…
Read MorePVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “!!
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio ) என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு ” தில் ராஜா ” என்று பெயரிட்டுள்ளார். சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி…
Read Moreதமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது . தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது. வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் ,…
Read Moreநடிகர் ஷபீர் கல்லரக்கல் பகிர்ந்த அனுபவம் -நடுக்கடலில் படமாக்கப்பட்ட ‘கொண்டல்’!
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸா’க பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். அதன்பிறகு துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோத்தா’ மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும் ஷபீர் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தென்னிந்தியாவின் மிக முக்கிய நட்சத்திர நடிகர்களான பெப்பே, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘கொண்டல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் ஷபீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 80% நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷபீர், “இந்தப் படம் சவாலாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. தினமும் காலையில், நாங்கள் நடுக்கடலுக்குப் புறப்படுவோம். அது கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் எடுக்கும். படகில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மதிய…
Read Moreமெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.-சீமான்
அன்புத்தம்பி சூர்யா – ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி-இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் #மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ‘மெய்யழகன்’ என்று திரைப்படத்திற்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டியதற்கும், அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் (TEASER) என்று கூறிக்கொண்டிருக்க அதனை ‘கிளர்வோட்டம்’ என்று அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும்! படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு. #கிளர்வோட்டம் என்ற சொல்லாக்கம் எந்த அளவிற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன். தமிழில்…
Read More‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ” வெளியானது!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘வேட்டையன்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. “மனசிலாயோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின் கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது. சமகால மற்றும் பாரம்பரிய தமிழ் மற்றும் மலையாள இசையில் வேரூன்றிய ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத், மேலும் இது இளைய தலைமுறை மற்றும் பாரம்பரிய இசை பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமைகிறது. இந்தப் பாடலானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற பாடகர் ‘மலேசியா’ வாசுதேவனின் சக்திவாய்ந்த குரலால் உருவாக்கப் பட்டுள்ளது, மேலும் அவரது குரலுடன் யுகேந்திரன் மற்றும் தீப்தி…
Read Moreகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது!!
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ~ ~ ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று செப்டம்பர் 13, 2024 அன்று பிளாக்பஸ்டர் தமிழ் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்கு டிராமா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சமூகப்…
Read Moreதளபதி விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!!
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படத்தை, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள, தளபதி விஜய்யின் “கோட்” படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் உடன், படக்குழுவினர் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கா முட்டை, விசாரணை முதலாக பல வெற்றிப்படங்களை வழங்கிய வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விமல், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில்,…
Read Moreநடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான ‘காந்தா’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது, “’காந்தா’வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக…
Read Moreஆந்திர வெள்ளம்: ரூ.1 கோடி நன்கொடை கொடுத்த நடிகர் அல்லு அர்ஜூன்!
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உடைமகளை இழந்தவர்களுக்கு உதவ ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள துயரங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றார். ”ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் துன்பம் குறித்து நான் வருத்தமடைகிறேன். இந்த சவாலான நேரத்தில், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இரு மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்குகிறேன். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் நான் இறைவனிடம் வேண்டுக் கொள்கிறேன்” என்று அல்லு அர்ஜுன்…
Read More