”நான் எப்போதும் ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் இருந்து தான் கதைக் கேட்பேன்” – அருண் விஜய்

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது… இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது… ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் படமாக என் படம் செய்கிறார்கள் எனும் போது பயம் இருந்தது. ஆனால் அவர்கள் திரைப்படங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இன்னும் நிறையப்படங்கள் செய்து பலருக்கு வாழ்க்கைத் தர வேண்டும் என்பதே என் ஆசை. திருக்குமரன் அண்ணாவிற்கு இந்தப்படம் கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. ஏ…

Read More

“ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம்” – BTG Universal பாபி பாலசந்திரன்

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது.. இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர்ச் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து…

Read More

உழைப்பாளர்களின் வாழ்வியலைப் பேசும் “உழைப்பாளர் தினம்”

சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்க கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள். குறிப்பாக உழைப்பாளர்கள் தினம், உழைப்பாளர்கள் பற்றி, உழைக்கும் மக்கள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது என்றாலும், 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிக்காகோ நகரத்தில், மிகப்பெரிய அளவிலான எழுச்சியை தொடர்ந்து மே மாதம் 1 ஆம் உலக பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரும் உழைப்பாளர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று…

Read More

மலைவாழ் மக்களின் கஷ்டத்தையும் காதலையும் பேசும் “வேட்டைக்காரி”

படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, ‘படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்’ என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினார் கவிப்பேரரசு வைரமுத்து! ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர். வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் தெளிவாக படமாக்கி உள்ளார் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து! ராகுல் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சனா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு மற்றும் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, காளிமுத்து காத்தமுத்து இயக்கி உள்ளார்.…

Read More

ரசிகர் மரணம் ; வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ஜெயம் ரவி

  சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

Read More

பெண்களின் பிரச்சனையைப் பேச வரும் “தீட்டு” ஆல்பம் பாடல்

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார். மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா? இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் ‘தீட்டு’ என்கிற பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. ‘தீட்டு’ ஆல்பத்தின் பாடலைப் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் கூறியதாவது, “நமது அறிவார்ந்த முன்னோர்கள் இயற்கையான பெண்களின் உடலியல் மாற்றமான மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கும் விதத்தில் அவர்களது அவஸ்தையைப் புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும்…

Read More

டிராகனுடன் காட்சியளிக்கும் ஹனுமன் போஸ்டர்

ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது! இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம் !! பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ஹனுமான் படத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் வர்மா அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு சாகச காவியத்தை ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் ப்ரீக்வுலாக உருவாகவுள்ளது. , ஹனுமான் படத்தின் முடிவில் இப்படம் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதை ஏற்கனவே முழுமையாக தயாராகிவிட்டது. இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர் மற்றும் பிரபலமான தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு…

Read More

அமீரின் “உயிர் தமிழுக்கு” மே 10ல் வெளியாகிறது

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ‘உயிர் தமிழுக்கு’ பட வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது, “ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த வரவேற்பால்…

Read More

”மண்டைக்கு குரு ஏறுதே” சூது கவ்வும் 2வின் முதல் சிங்கிள்

ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர் தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து ‘மண்டைக்கு சூரு ஏறுதே’ எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏ ஆர் ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும்…

Read More

இனிமேல் ஆல்பத்தை 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்த்து கொண்டாடும் இளைய தலைமுறை

நடிகை ஸ்ருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது !! கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான இந்த பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமானார். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது. இந்த ஆல்பம் பாடல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘இனிமேல்’ பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின்…

Read More