தினகரனின் கோவில்பட்டி கணக்கு தேமுதிக – அமமுக கூட்டணி பின்னணி

அமமுக – தேமுதிக கூட்டணி முடிவாகி, இக்கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக அங்கே போதிய எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியால் கடந்த வாரம் கூட்டணியில் இருந்து வெளியேறியது.இந்த நிலையில் அமமுக,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடத்தியது, ஆனால், மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணிப் பேச்சு தொடங்குவதற்கு முன்பே முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தின் அடிப்படையில் தேமுதிகவும், அமமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இதில் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவனும், அமமுக சார்பில் டிடிவி தினகரன் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான செந்தமிழனும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இந்த 60…

Read More

இயற்கை நேசித்தவர் ஜனநாதன் – இயக்குனர் தங்கச்சாமி

ராட்டினம், எட்டுதிக்கும் மதயானை படங்களை இயக்கியவர் தங்கச்சாமி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைவையொட்டி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்திநேற்று சென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது அந்த செய்தி வந்தது. ஜனநாதன் மறைந்தார்.அவர் மறைந்த செய்தி சட்டென்று என்னுள் நிலைகுலைவை உருவாக்கியது. தமிழ் இயக்குனர்களில் என் உள்ளத்திற்கு அணுக்கமானவர் ஜனநாதன். அவருடைய தனிப்பட்ட உடல்நிலைகளை நான் அறிய முடிந்ததில்லை.அவரை நான் சந்தித்ததே ஒரு அஞ்சலி கூட்டத்தில் தான். என் முதல் படமான ராட்டினம் படம் பற்றி அவர் உற்சாகத்துடன் விலாவாரியாக பேசினார். ராட்டினம் படம் குறித்து அவர் சொன்னபோதிருந்த முகபாவங்களை திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். நாம் மனிதர்கள் என்றுமிருப்பார்கள் என்றே நம்ப விரும்புகிறோம். அந்த நம்பிக்கை வெறும் எண்ணம்தான், நிதர்சனம் வேறு என்று வாழ்க்கை உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறத நான்காவது மாடி விடுதி அறையின் அகன்ற ஜன்னல் வழியாக சாலையை பார்த்து கொண்டு இருந்தேன்.…

Read More

ஆலம்பனாவில் நவயுக அலாவுதீன் யார்?

தமிழ் சினிமாவில் உடல்கேலி வசனங்கள் பேசாத காமெடியனாகவும், அதே நேரம் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர்கள் சொற்பமே. சமீபகால சினிமாவில் முனீஸ்காந்த் & காளி வெங்கட் மாதிரியான நடிகர்களைக் குறிப்பிடலாம்.   குறிப்பாக, முண்டாசுப்பட்டி, ராட்சசன், மாநகரம் மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் பட்டையைக் கிளப்பிய நடிகர் முனீஸ்காந்த். தொடர்ச்சியாக, பல படங்களில் நடித்துவருகிறார். அப்படி, அவரின் லைன் அப்பில் இருக்கும் ஒரு படம் ‘ஆலம்பனா’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.   வைபவ் நாயகனாக நடித்திருக்கிறார். அலாவுதீனாக வைபவும், ஜீனியாக முனீஸ்காந்தும் இருக்கும் ‘ஆலம்பனா’ பட போஸ்டர் இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. ஃபேண்டஸி சினிமாவாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தை, பரி கே.விஜய் இயக்கிவருகிறார். இவர், முண்டாசுப்பட்டி மற்றும் இன்று நேற்று நாளை படங்களில்…

Read More

ரம்ஜான் பண்டிக்கைக்கு எந்த படம் ரீலீஸ்

விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கொஞ்சம் நிமிர்ந்து நடைபோட தொடங்கிவிட்டது. கடந்த மாதங்களில் எக்கச்சக்கப் படங்கள் திரையரங்கில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாலிவுட் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பாலிவுட் ரசிகர்கள் கொரோனா அச்சத்தினால் இயல்பாக திரையரங்குக்கு வரவில்லை. தமிழுக்கு விஜய்யின் மாஸ்டர் போல, பாலிவுட் திரையுலகம் சல்மான் கானின் ராதே படத்தை நம்பியிருக்கிறது. சல்மான் கான், திஷா பதானி நடிப்பில் உருவாகிவரும் ‘ராதே: தி மோஸ்ட் வான்டட் பாய்’ திரைப்படம் வரும் ரம்ஜான் பண்டிகை தின ஸ்பெஷலாக மே 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை பிரபு தேவா இயக்கியிருக்கிறார். மாஸ்டர் போல, பக்கா கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் என்கிறார்கள். சல்மான் கானுக்குப் போட்டியாக பாலிவுட் நடிகை கங்கனா களமிறங்குகிறார். விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தலைவி’.…

Read More

திருந்தாத நடிகர் விஷால் நெருக்கடியில் எனிமி தயாரிப்பாளர்

அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின் இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பு தொடங்கியபின் வருவதாகச் சொன்ன விஷால், சொன்னதைவிட சில நாட்கள் தாமதமாகச் சென்றாராம். அங்கு போனவுடன் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், அப்புறம் காணாமல் போய்விட்டார் என்கிறார்கள். மூன்று நாட்கள் அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம். மூன்று நாட்களுக்குப் பின் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். இதனால், திட்டமிட்டதைவிட பத்துநாட்கள் அதிகமாகப் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறதாம். இதனால் படக்க்ழூவினர் தாமதமாகத்தான் சென்னை திரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் வினோத், மிகவும் நொந்துபோயிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கிய…

Read More

தமிழ்சினிமா வந்ததும்-போனதும் வசூல் செய்தது என்ன?

தமிழ் சினிமாவில் தினந்தோறும் புதிய பட அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது, படங்களின் முதல் பார்வை, முன்னோட்ட டிரைலர், தனிப்பாடல்கள் வெளியீடு என சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. சினிமா துறையினர் நிரம்பி இருக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் புதிய படங்கள் வெளியீடு, படங்களுக்கு சமூக வலைதளங்களில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் என பெருமையுடன் தயாரிப்பாளர்களால் பகிரப்பட்டு வருகின்றன வாரந்தோறும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் உண்மை வசூல் நிலவரங்கள் மிக மோசமாக இருக்கிறது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் 12, பிப்ரவரி மாதம் 22, மார்ச் இதுவரை 10 என  45தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது இவற்றில் நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள் 1. மாஸ்டர்(விஜய்)2. கபடதாரி(சிபிராஜ்)3.பாரிஸ் ஜெயராஜ்(சந்தானம்)4.கமலி From நடுக்காவேரி5.சக்ரா(விஷால்) 6. வேட்டைநாய்(R.K. சுரேஷ்) 7. மிருகா(ஸ்ரீகாந்த்) 8.அன்பிற்கினியாள்(அருண்பாண்டியன்)9. நெஞ்சம் மறப்பதில்லை(சூர்யா) 10. சங்கத்…

Read More

வரலாறு பெருமை கொண்ட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

வரலாற்றில் சிலர்இடம் பிடிக்க போராடுவார்கள் தங்களை பெருமைபடுத்திக் கொள்ள  சிலரை வரலாறு தன்னுள் பதிவு செய்து பெருமை கொள்ளும் அத்தகைய ஆளுமை, பொதுவுடமை சித்தாந்தவாதி என தன்னை பகிரங்கமாக பிரகடனப்படுத்தி கொண்டு திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன் பதினெட்டு ஆண்டுகளில் 5 படங்கள் மட்டுமே இயக்கினாலும் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர்களில் இடம்பெற்றவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள்  நடைபெற்று வந்தன கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் படத்தொகுப்புப் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார் ஜனநாதன் நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை…

Read More

புதுச்சரி சட்டப் பேரவை திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 30 தொகுதிகள் உள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு, திமுக – காங்கிரஸ் இடையே அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் கையெழுத்திட்டனர். இந்நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 13) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளில், 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாகூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது. புதுவை வேட்பாளர்கள் பட்டியல் உருளையன்பேட்டை – எஸ்.கோபால், உப்பளம் – வி.அனிபால் கென்னடி, மங்கலம் – சண்குமரவேல், முதலியார் பேட்டை – எல்.சம்பத், வில்லியனூர் – ஆர். சிவா, நெல்லித்தோப்பு – வி.கார்த்திகேயன், ராஜ்பவன் – எஸ்.பி.சிவகுமார், மண்ணாடிப்பாட்டு – கிருஷ்ணன் (எ) எ.கே.குமார், காலாப்பட்டு –…

Read More

சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த 40 தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 1.துறைமுகம் 2.உத்திரமேரூர் 3. அரக்கோணம் (தனி) 4.சோளிங்கர் 5.ஆற்காடு 6.வாணியம்பாடி 7.ஆம்பூர் 8.ஜோலார்பேட்டை 9.போளூர் 10.உளுந்தூர்பேட்டை 11.ரிஷிவந்தியம் 12. ஆத்தூர் (தனி) 13. சங்ககிரி 14. திருச்செங்கோடு 15. அந்தியூர் 16. கிருஷ்ணராயபுரம் (தனி) 17. லால்குடி 18. கடலூர் 19.சிதம்பரம் 20.சீர்காழி (தனி) 21.திருத்துறைப்பூண்டி (தனி) 22.சிவகங்கை 23.மதுரை தெற்கு 24.பெரியகுளம் (தனி) 25. ராஜபாளையம் 26. விருதுநகர் 27.விளாத்திகுளம் 28.தூத்துக்குடி 29.திருச்செந்தூர் 30. ஒட்டப்பிடாரம் (தனி) 31. வாசுதேவநல்லூர் (தனி) 32.தென்காசி 33.ஆலங்குளம் 34. நெல்லை 35. அம்பாசமுத்திரம் 36,நாங்குநேரி 37.ராதாபுரம் 38.பத்மநாபபுரம் 39.விளவங்கோடு 40.கிள்ளியூர். பேட்டியின்போது கட்சியின் முதன்மை துணை…

Read More

திமுக சட்டமன்ற வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது.இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலின்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், காட்பாடி தொகுதியில் துரைமுருகனும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இதேபோன்று தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கின்றனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் போட்டியில் களம் இறங்குகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மறைந்த தி.மு.க. தலைவர்…

Read More