Mrs & Mr – திரை விமர்சனம்

நடிகை வனிதா விஜயகுமார் இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் படம் இது . பாங்காக் பின்னணியில் அலைக்கும் சொல்லப்பட்ட கதைக்களம் எந்த மாதிரியானது என்பதை பார்ப்போம். கதைப்படி ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்து கொள்கிறார். இதில் ராபர்ட் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார். ஆரம்பத்தில் வனிதாவும் ஏறக்குறைய அந்த முடிவில் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை என்றால் வாழ்வதே வேஸ்ட் என்று தோழிகள் சிலர் வனிதாவை தூண்டி விட, இதனால் 40 வயதில் தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் வனிதா. இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் நேரத்தில் வயிற்றில் கரு தங்குகிறது. அதை கணவரிடம் சொல்ல முடியாத சூழலில் பாங்காக்கில் இருந்து தன் சொந்த ஊரான சித்தூர் வந்து விடுகிறார்.…

Read More

மாயக்கூத்து – திரை விமர்சனம்

மானிட ஜாதியில் நான் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று ஒரு பாடலில் எழுதி இருப்பார் கவிஞர் கண்ணதாசன். பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருக்கும் வாசன் என்ற முன்னணி எழுத்தாளரும் படைப்பாளி என்பதால் தன்னை இறைவனாக எண்ணிக் கொள்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் எழுதும் கதையில் பாதிக்கப்படும் கதாபாத்திரங்கள் அவரை தேடி வந்து இம்சை செய்கின்றன. தங்களது சிக்கல்களுக்கெல்லாம் படைத்தவன் தான் காரணம் என எண்ணி கோபத்தில் அவரை துரத்துகின்றன. அந்த கதாபாத்திரங்களிடம் இருந்து எழுத்தாளர் எப்படித் தப்பிக்கிறார் என்பது தான் கதைக்களம். சமூகத்தை தங்கள் எழுத்தால் மேம்படுத்துவதில் எழுத்தாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இங்கே நமது படைப்பாளியோ தனது கதாபாத்திரங்களுக்கு சுமுகமான தீர்வளிக்க தவறிவிடுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த கதாபாத்திரங்கள் கதையின் போக்கை மாற்றி தங்களுக்கு நல்லதோர் தீர்வை…

Read More

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். D54 திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப குழு பணிபுரிகிறார்கள்.…

Read More

மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’ திரைப்படம் ஜூலை 18 இல் வெளியாகிறது

ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி  சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன் சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர். படம் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் தமிழ் தயாளன் படம் குறித்து பேசும்போது, “நாமெல்லாம் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் அங்குள்ள…

Read More

தமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.. சினிமாவை நம்பி யாரும் இல்லை.. கலையரசன் ஆதங்கம்!!

Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…., தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசியதாவது… டிரெண்டிங் திரைப்படம் எங்களின் சின்ன முயற்சி, நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன். கலையரசன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு இணையாக பிரியாலயா நன்றாக நடித்துள்ளார்.  இயக்குநர் சிவராஜ் இந்தக்கதையைச் சொன்ன போதே, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாம் சிஎஸ் சிறப்பான இசையை தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரவீன் சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் பிரவீன்…

Read More

ப்ரீடம் – திரை விமர்சனம்

95 காலகட்டத்தில் வேலூர் சிறையில் இருந்து தப்பித்த இலங்கை அகதிகளின் போராட்டமே கதைக்களம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அங்கிருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்து அகதி முகாமில் தங்கினால் அங்கும் நிம்மதியற்ற வாழ்க்கை. இப்படி இலங்கையில் இருந்து வந்த ஒரு கும்பலில் கர்ப்பிணி யாக இருக்கும் மனைவி வந்துவிட, அவளை தேடி கணவனும் வருகிறார். இந்த சமயத்தில் முன்னாள் பாரத பிரதமரை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்த தீவிரவாத இயக்கத்தை கண்டுபிடிக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது. அதில் ஒன்று, கடந்த ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரணை நடத்துவது. இந்த விசாரணை வளையத்தில் மனைவியை தேடி தமிழகம் வந்த சசிகுமாரும் சிக்கிக் கொள்கிறார். போலீசார் சசி உள்ளிட்டவர்களை வேலூர் சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து கொடுமைப் படுத்துகிறார்கள். .…

Read More

ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்ச‌ன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்துக்கு “மார்ஷல்” எனத் தலைப்பிட்டுள்ளனர். ’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் (டாணாக்காரன் இயக்குநர்) மற்றொரு லட்சிய முயற்சியாக இந்தப் படம் அமைய இருக்கிறது.இன்று (வடபழனி, பிரசாத் ஸ்டுடியோவில்) நடைபெற்ற மார்ஷல் பட பூஜை நிகழ்ச்சியில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மத்தியில் தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டனர். மார்ஷல் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்,…

Read More

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ MCU உலகில் சில்வர் சர்ஃபர் மற்றும் கேலக்டஸுடன் மீண்டும் நுழையவிருக்கும் நிலையில், தமிழ்- தெலுங்கு என தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை பார்க்கலாம். *மிஸ்டர் ஃபெண்டாஸ்டி கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா (ரீட் ரிச்சர்ட்ஸ்):* கூர்மையான, பல அடுக்குகளுடன் உணர்வுப்பூர்வமான இந்த வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூர்யா மிகப்பொருத்தமானவர். இந்த கதாபாத்திரத்திற்கு லோகேஷ் கனகராஜ் இன்னும் ஆழமான மற்றும் கிரே ஷேட்ஸ் கொடுப்பார். *இன்விசிபிள் வுமன் கதாபாத்திரத்தில் நயன்தாரா (சூசன் ஸ்டோர்ம்):* நிதானமான, கட்டளையிடும் மற்றும் வலுவான நயன்தாரா, அமைதியாக உறுதியுடனும் கட்டுப்பாடுடனும் அணியை வழிநடத்த முடியும். *ஹியூமன் டார்ச் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா (ஜானி ஸ்டோர்ம்):* பொறுப்பற்ற, வசீகரமான, வீரம் மிக்க விஜய் -ஜானி ஸ்டோர்ம் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போவார். *தி திங்…

Read More

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பையும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியையும் பெற்றுள்ளது, மகிழ்ச்சியான இத்தருணத்தில்  உலகெங்கிலும் “பறந்து போ” திரைப்படத்தை வெளியீடு செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தனது அலுவலகத்தில் படக்குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார். இக்கொண்டாட்டத்தில் இயக்குநர் ராம், நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோருடன் ஜியோ ஹாட்ஸ்டாரின் பிரதீப் மில்ராய் பீட்டர், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸின் கருப்புச்சாமி மற்றும சங்கர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இந்த நிகழ்வில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

Read More

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

 ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம், உண்மையிலேயே தனித்துவமான சினிமா காட்சி அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது. சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும் மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து, மஹாவதர் நரசிம்மா படத்தின் அதிரடியான டிரெய்லரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தின் கதை, இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனைச் சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது, அவர் தனது நாத்திக தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார், இறைவன் பிரம்மாவிடமிருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். விஷ்ணுவின் அவதாரமான மகாவதார நரசிம்மரின் பிறப்புடன் கூடிய நம்பிக்கையின் கர்ஜனையை, இந்த டிரெய்லர் காட்டுகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடனும், அற்புதமான பின்னணி இசையுடனும், இந்த டிரெய்லர்…

Read More