பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ, லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில்…
Read More29 – திரைப்பட விமர்சனம்
கதை… சென்னைக்கு வேலை தேடி வருகிறார் நாயகன் விது.. வந்த இடத்தில் நாயகி ப்ரீத்தியை சந்தித்த பின் காதல் கொள்கிறார்.. இருவரும் நெருக்கமாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை உணர்ச்சி பூர்வமாக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.. நடிகர்கள்… விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. வாழ்க்கையில் எந்த ஒரு கனவும் இல்லாமல் வாழும் நாயகன்.. ஆனால் லட்சியத்தோடு வாழும் நாயகி இவர்களுக்குள் ஏற்படும் காதலை மிகவும் எளிமையாக ஒவ்வொருவரும் ரசிக்கும்படி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர் விது மற்றும் பிரீத்திஅஸ்ராணி.. அயோத்தி படத்தில் கலக்கியதை விட இந்த படத்தில் அதிகப்படியாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார் பிரீத்தி.. கல்லூரி வில்லனாக வருகிறார் மாஸ்டர் மகேந்திரன் கொஞ்சம் காட்சி தான் என்றாலும் மன நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நாயகனின் ரூம்…
Read Moreசந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும்…
Read Moreதுல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது. தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ) , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில்…
Read Moreடியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!
மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’. இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதைசொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும்…
Read More“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா
70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும்…
Read Moreமுதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்
இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட…
Read Moreசேயோன்-ல் இணைந்த பாக்யஸ்ரீ : பிறந்தநாளில் வந்த அறிவிப்பு!!
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன. ஒரு சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரசிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், இந்த அறிவிப்பைப் பகிர்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாக அமைவதுடன், மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஒரு அற்புதமான ஆண்டாக வரவிருக்கும் காலம் அமைய, அவருக்கு அனைவரும்…
Read Moreப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.
அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும்…
Read Moreசாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!
உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாரத் மற்றும் சான்வே மேக்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காவிய காதல்’ திரைப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்கியுள்ளார். சுவாரஸ்யமான ரொமாண்டிக் எண்டர்டெயினர் திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவில், முன்னணி நடிகர்களுடன் பால சரவணனும்…
Read More