”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

சில கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஜொலிப்பார்கள். ஆனால், மிகச் சிலரே காலம் தாண்டியும் என்றும் நிலைத்திருப்பார்கள். இந்த வரிசையில் இடம்பிடித்தவர் நடிகை சிம்ரன். அழகும், அசாதாரண நடிப்புத் திறனும் இயல்பாக ஒன்றிணைந்த கலைஞர் அவர். திரையில் அவர் வெறுமனே வந்துபோகாமல், மென்மையான தென்றலாய், தலைமுறைகள் கடந்தும் மனதில் நிற்கும் நினைவுகளை விட்டுச் சென்றார். அவரது அமைதியில் கம்பீரம் இருந்தது. அவரது புன்னகையில் மகிழ்ச்சி இருந்தது. அவரது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் தங்களை உணர்ந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக வெற்றிகரமான திரைப்பயணத்தைத் தொடர்வது என்பது திறமையால் மட்டும் சாத்தியமல்ல. அதற்கு அசாதாரண ஒழுக்கம், தொழில்முறை அர்ப்பணிப்பு, காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை அவசியம். சிறந்த இல்லத்தரசி, அன்பான தாய், வெற்றிகரமான தொழில்முனைவோர் என ஒவ்வொன்றிலும் அதே அர்ப்பணிப்புடன் அவர் செயல்படுவதுதான் அவரது வெற்றிக்கு…

Read More

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

இளைஞர்களைக் கவரும் வண்ணம் துள்ளலான காதல் கதையாக உருவாகியிருக்கும் ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படம் தணிக்கை அதிகாரிகளால் ‘U/A 13+’ சான்றிதழ் வழங்கப்பட்டு, வரும் ஜூலை 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. *சினிமா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் (Zinema Media & Entertainment Ltd.) மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் (Creative Entertainers & Distribution) ஆகிய நிறுவனங்களின் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் G தனஞ்ஜெயன்* இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். *மிரட்டலான வரவேற்பை பெற்றுள்ள ட்ரைலர்:* சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரைலர், ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. புதுமையான காதல் கதைக்களம், கலகலப்பான நகைச்சுவை, வண்ணமயமான காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்ச்சிகரமான தருணங்களுடன் டிஜிட்டல்…

Read More

‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், தனது அடுத்த படைபின் தலைப்பான “ஸ்கார்” (தழும்பு ) எனும் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி மற்றும் ஜி மீடியா ஃபிலிம் பேக்டரி இணைந்து இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை ஜூன் 25 அன்று கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடிகர் தேர்வு (Audition) தற்போது சென்னை கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்துப் பேசிய படக்குழுவினர், ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.…

Read More

கட்டா குஸ்தி 2 – விமர்சனம் [4.75/5]

கதை… விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி தம்பதிக்கு சாரா என்ற ஆறு வயது மகள் உண்டு.. குஸ்தியில் சாம்பியன் ஆன ஐஸ்வர்யாவுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்க அவர் வேலைக்கு செல்கிறார்.. இதனால் விஷ்ணு ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருந்து வீட்டை பொறுப்பாக பார்த்து குழந்தையை வளர்த்து வருகிறார்.. பள்ளியில் உன் அப்பா என்ன செய்கிறார் என்ற சாராவிடம் கேட்டால் ஹவுஸ் ஹஸ்பண்ட் என்கிறார்.. அப்படி சொல்வதால் ஒரு பிரச்சனையும் இல்லையே என ஐஸ்வர்யா விஷ்ணுவிடம் சண்டையிடுகிறார்.. ஒரு கட்டத்தில் இந்த ஈகோ பிரச்சனை முற்றுகிறது.. நாளடைவில் இது விவகாரத்து சூழ்நிலை ஏற்படுகிறது.. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் சுவாரசியமான திரைக்கதை.. நடிகர்கள்… Vishnuu Vishal, Aishwarya Lekshmi, Ramya Krishnan, Yogi Babu, Karunaas, Muniskanth, Kaali Venkat, Karunakaran, Zara, Mokksha and others.…

Read More

டார்க் – விமர்சனம்!

கதை… ஒரு வீட்டில் பாக்யராஜ் மற்றும் அந்த வீட்டில் குடியிருக்கும் அஜய் கார்த்திக் இருவரும் இறந்து கிடக்கின்றனர்.. அங்கு விசாரணைக்காக செல்கிறார் காவல்துறை அதிகாரி நட்டி நடராஜ்.. போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்க திடீரென அஜய் கார்த்திக் எழுந்து விடுகிறார்.. இதன் பின்னர் பிளாஷ்பேக் படம் நகர்கிறது.. பாக்யராஜ் வீட்டில் மூன்று இளைஞர்கள் வந்து தங்க ஒரு கட்டத்தில் மூவரும் தீ வைத்து இறந்து விடுகின்றனர்.. பேய் வீடு என்று அழைக்கப்படும் அந்த வீட்டிற்கு யாருமே வாடகைக்கு வர தயங்குகிறார்கள்… இந்த சூழ்நிலையில் அந்த வீட்டிற்கு சில வருடங்களுக்குப் பிறகு வாடகைக்கு வருகிறார் அஜய் கார்த்திக்.. அப்போது சில அமானுஷ்யங்கள் நடக்கிறது அது என்ன? போலீஸ் நட்டி விசாரணையில் என்ன தெரிய வந்தது.? என்பதெல்லாம் மீதிக்கதை நடிகர்கள்… நாயகன் அஜய் கார்த்திக்.. இவர் பரத் நடித்த காளிதாஸ்…

Read More

அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை அதிரடி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் யோகி பாபு

9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி பாபு நடிக்கிறார். இது வரை இல்லாத வகையில் 11 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் யோகி பாபு நடிக்கிறார். அறிமுக இயக்குநரான கிஷோர் குமார் இதற்கு முன்னர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய பான் இந்தியா திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “பரபரப்பான காமெடி ஆக்ஷன் திரில்லரான இப்படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார். மிகவும் சவாலான இப்பணிக்காக கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார்,” என்றார். படத்தின் கதை…

Read More

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு, தற்போது மற்றொரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு, படக்குழுவினரை நெஞ்சாரப் பாராட்டியுள்ளார். சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதையை மிக அழுத்தமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் திரையில் கொண்டு வந்ததற்காக படக்குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான இயக்கம் ஆகியவை தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், இத்திரைப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். திரையிடலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., “சமூகத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இன்னும் பெருவாரியான மக்களைச் சென்றடைய வேண்டும்” என்று வாழ்த்தினார். படத்தின் முக்கிய அம்சங்கள்: *சான்றிதழ்:* தணிக்கைக் குழுவின்…

Read More

துருவ் விக்ரம் நடிக்கும் ‘#DV 4’ பட தொடக்க விழா!

இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- ‘ஹாய் நானா’ சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் – ராஜா – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின்…

Read More

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோஹாட்ஸ்டார் தமிழ், ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில் இருந்து மீள்வது மற்றும் மீண்டும் காதலை கண்டடையும் மகிழ்ச்சியை இந்த புரோமோ மூலம் பார்க்கலாம். புரோமோவின் இறுதியில், “காதலுக்கு காரணம் தேவையில்லை. இது காதலின் பிராண்ட் நியூ…

Read More

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.., “அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க…

Read More