ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், “இந்த படம் சிறந்த அனுபவமாக மாற்றி கொடுத்த ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. ஷபிதா, “கடந்த 16 வருடங்களாக திருநங்கை மற்றும் திருநர் சமூகத்திற்காக வேலை பார்த்து வருகிறோம். நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், நிறைய படங்கள் வந்திருந்தாலும் ‘டோரதி’ எப்போதுமே ஸ்பெஷல். படம் பார்த்து முடித்ததும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். எங்கள் சமூகத்தின் குரலாக இந்தப் படம் உள்ளது. நிஜ வாழ்க்கையிலும் என்னை ஏற்றுக் கொண்டது என்…
Read Moreராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!
தசரத மன்னராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டரை ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் அடையாளம் காணப்படும் அருண் கோவிலுக்கு இது முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ராமரின் தந்தையும் அயோத்தி மன்னருமான தசரதராக அருண் கோவில் காட்சியளிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. முன்பு, இந்திய ரசிகர்களால் ராமராகப் போற்றப்பட்ட அருண் கோவில், தற்போது அயோத்தியின் மன்னரும் ராமரின் தந்தையுமான தசரதராக ‘ராமாயணா’ திரைப்படத்தில் நடிக்கிறார். ராமாயணத்துடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ள ஒரு நடிகர், தற்போது அதே காவியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பது படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. படக்குழு தங்களது…
Read Moreஆல் பாஸ் விமர்சனம்…
கதை… மூன்று தம்பதிகள்.. இந்த தம்பதிகளுக்கு தலா ஒவ்வொரு மகன்கள்.. உடன் பிறந்தவர்களை போல இந்த மூன்று குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.. ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஒற்றுமையாக நண்பர்களாக வாழ்ந்து வரும் வேளையில் இவர்களுக்கு 5 கோடி ரூபாய் பணம் புதையலாக கிடைக்கிறது… ஜெயப்பிரகாஷ் மட்டும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் இது நம்முடைய பணம் இல்லை.. போலீசில் ஒப்படைக்கலாம் என்கிறார்.. ஆனால் மற்றவர்களோ இது நமக்கு கிடைத்திருக்கிறது.. நம் வறுமையை போக்க இது ஒன்றே நமக்கு உதவும் என சொல்கின்றனர். இந்த பணம் ஒரு எம்எல்ஏவின் பணம் என்றும் தெரிய வருகிறது.. அதன் பிறகு அவர்கள் என்ன செய்தனர்.? பணத்தை பங்கு போட்டு வாழ்ந்தார்களா.? திருப்பி கொடுத்தார்களா? குடும்பம் ஒற்றுமையாக இருந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன…
Read Moreநடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு !!
நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது: இந்த அமைப்பு என்பது நம்மால் முடிந்த உதவிகள் அனைவருக்கும் செய்வதுதான் நோக்கமே தவிர யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு இல்லை என்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடல் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்த்தி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிறகு நன்றாக சம்பாதிக்க வேண்டும் சம்பாதித்து முதலில் உங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். நற்பணி என்ற பெயரில் ஓரிரு நாள் மட்டும் செய்து…
Read More‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு ஆதரவளித்ததற்கும் ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு,மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிநயா செல்வம் பேசியதாவது:…
Read Moreதைவான் சர்வதேச டிசைன் விழாவில் தமிழின் கலைப் பார்வையை உலகுக்கு எடுத்துச் சென்ற கோபி பிரசன்னா
தைவானில், 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டிசைன் ஃபெஸ்டிவல் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக “தாவோயுவான் உலகின் பார்வையில்(Taoyuan POV)” என்ற தலைப்பில் தங்கள் வடிவமைப்பு படைப்புகளைக் காட்சிப்படுத்தவும் விழாவில் பங்கேற்கவும், ஆட்டோமொபைல் டிசைனர், கிராபிக் டிசைனர் , ப்ராடக்ட் டிசைனர் போன்ற உலகின் பல்வேறு துறை சார்ந்த, சிறந்த 20 வடிவமைப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்டிருந்த நால்வரில், தமிழகத்திலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையில் ‘ஆரண்ய காண்டம்’, ‘கத்தி’, ‘விக்ரம் வேதா’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘ராக்கா’ உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களுக்கு போஸ்டர் டிசைனராக சிறப்பாகப் பணியாற்றி வரும் திரு. கோபி பிரசன்னா அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார் . மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அவரது வடிவமைப்பு, விழா…
Read MoreZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!
புது புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்கு தொடர்ந்து entertainment கொடுத்து வரும் ZEE Tamizh, இந்த weekend-ஐ இன்னும் special-ஆ மாற்ற இரண்டு புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கியிருக்கிறது. ஒருபக்கம், இசை ரசிகர்களின் மனசுல தனக்கென ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற ‘சரிகமப’-வோட புதிய சீசன். இன்னொரு பக்கம், Mass-க்கும் Class-க்கும் இடையே நடக்கப்போகும் செம கலகலப்பான போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கிற ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’. இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பிரம்மாண்ட தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சரிகமப’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா, மேலும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியுடன் நடுவர்களாக இணைந்துள்ள ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் கலந்துகொண்டு, நிகழ்ச்சிகள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப்…
Read Moreஅண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (UnderDog Films) தயாரிப்பு நம்பர் 1 அதிகாரப்பூர்வ அறிவிப்பு
‘எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்’ எனும் பாதையில், ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி தளம் என அனைத்துத் தளங்களிலும் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், தற்போது திரைத் துறையில் அடுத்த கட்டமாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். தனது பிறந்தநாளான இன்று, “அண்டர்டாக் ஃபிலிம்ஸ்” (Underdog Films) எனும் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘புரொடக்ஷன் நம்பர் 1’ (Production No.1) திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஜீப்ரா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், அவரே தயாரித்தும் வருகிறார். இதன் மூலம் நடிகராகவும்…
Read Moreஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!
மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த சிறப்பு நிகழ்வில், தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டதுடன், யோகி கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஏன் மிகச் சரியான தேர்வு என்பதையும் அனைவருக்கும் நிரூபித்தார். தால்சிம் வேடமிட்ட காஸ்பிளேயர்ஸூடன் மேடையில் அமர்ந்து தொடர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்து தனது யோகக்கலை திறமையை நிரூபித்தார். இந்த தியானத்தை அமைதியாக நிறைவு செய்த பிறகு, பதஞ்சலி யோக சூத்திரத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு…
Read Moreதியாகா குறிஞ்சிசெல்வன் – டாக்டர் ஆர். விஜயலட்சுமி தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார். தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி ஆகியோரின் புதிய முயற்சிக்கு திரையுலகினர் மற்றும் ஊடக நண்பர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில், இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது: “குறிஞ்சி சாரை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் திரைப்படத் தயாரிப்புத் துறைக்கு சற்று தாமதமாக வந்திருந்தாலும்,…
Read More