பசிக்கு உணவு கிடைக்காமல் வாடுவோர்களின் துயரைத் துடைக்கும் வகையில் ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒருங்கிணைத்த #ZEROHUNGER உணவு வழங்கும் நிகழ்வை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். வீதியோரத்தில் வாழ்பவர்கள் – வீடற்றவர்கள் – ஆதரவற்றவர்கள்- முதியோர்கள்- உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் – தொழுநோயாளிகள்- மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்- என சமூகத்தால் புறகணிக்கப்பட்ட ஏழை எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு வேளை உணவு என்பது தினந்தோறும் எட்டாகனியாகத் இருக்கிறது. இந்த யதார்த்தமான சமூகவியலை உணர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆலன் சாமுவேல் தன் நண்பர்களுடன் இணைந்து ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இதில் சேவையாற்றும் தன்னார்வலர்கள் ஏழைகளுக்கு சுவையான ஆரோக்கியமான தரமான உணவை…
Read Moreஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!
சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 1979-ஆம் ஆண்டு திரைக்கலைஞர் திரு. சிவகுமார் அவர்களின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமார் அவர்களின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006-ஆம் ஆண்டு முதல் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ இந்த அறக்கட்டளையின் பொறுப்பை…
Read Moreகற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
நடிகர் டிராவிட் செல்வம் பேசியதாவது.., “இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குச் சற்று பதற்றமாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ‘டியூட்’ படத்தை முடித்திருந்தபோது இந்தக் கதையைக் கேட்டேன். என்னை அழைத்து, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும், இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் சொன்னார்கள். அதற்கு நான், ‘இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்றால் என்னை ஏன் அழைக்கிறீர்கள்? நான் ஏற்கெனவே பரிதாபங்கள் நிகழ்ச்சியில் இதுபோன்ற விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறேனே’ என்று கேட்டேன். அதற்கு, ‘எவ்வளவு நாள்தான் இப்படியே நடிப்பீர்கள்? நீங்களும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்கள். அதனால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆரம்பத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடக்கிவிட முடியாத படமாக ‘டிரோன்ஸ்’…
Read More5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழா – இளைஞர்களின் கொண்டாட்டத்தில் ‘நந்தினி’!
விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படமான ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini) பாடல், சவேதா கல்விக் குழுமத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இன்றைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ள பிரபல ராப் இசைப் பாடகர் பால் டப்பா, இப்படத்தில் நடித்திருப்பதோடு, ‘நந்தினி’ பாடலுக்கு இசையமைத்து, பாடல் வரிகளையும் எழுதி, பாடி, நடனமாடியும் அசத்தியுள்ளார். இளைஞர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் முன்னிலையில் இந்தப் பாடலை வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் சவேதா கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், சவேதா கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் (Dr. N.M. Veeraiyan) பாடலை…
Read Moreகற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து, தங்களது அனுபவங்களையும் படத்தின் உருவாக்கம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் பேசியதாவது.., உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது என்னுடைய முதல் திரைப்படம். இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், நான்…
Read Moreஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் ராஜ்மோகன், “தளபதியுடைய பல படங்கள் ஓடிய திரையில் என்னுடைய தம்பி ஏகன் படம் வெளியாகவிருப்பதும் மகிழ்ச்சி. கடின உழைப்பாளி ஏகன். இயக்குநர், படக்குழு மற்றும் இன்றைய நாயகன் சித்து என எல்லோருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நல்ல கருத்துகளோடு பொழுதுபோக்கு அம்சமும் சேர்ந்திருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகவில்லை. ‘ஹைக்கூ’ அந்த குறையை போக்கும். படம் மிகப்பெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்”. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே ஆன…
Read Moreநெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்கா ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான திரு. டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார். வினு படத் தொகுப்பு…
Read Moreஅக்டோபர் 7 உலக பருத்தி தினத்தை நினைவு கூறும் வகையில் ஐக்கிய நாடுகளின் சபையில் பேசிய இந்திய ராஜ்யசபா எம்பி எல்.கே சுதீஷ்
உலக பருத்தி தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வை இந்தியா மற்றும் மாலியின் தூதரகங்கள் இணைந்து நடத்தியது, இதில் உலக அளவில் பருத்தியின் மதிப்பு கூட்டல் அதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டது. அதில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தர பிரதிநிதியான தூதர் ஹரிஷ் பார்வதனேனி மகாத்மா காந்தியின் கதர் ஆடை பற்றியும் சுதந்திரம் பற்றியும் விரிவாக பேசினார் அதனைத் தொடர்ந்து பேசிய மாலியின் நிரந்தர பிரதிநிதியான தூதர் இசா கோன்ஃபோரு மாலியின் பொருளாதாரம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரர்களுக்கு பருத்தி முக்கியத்துவம் எவ்வாறு உதவுகிறது என்று பேசினார் அதனைத் தொடர்ந்து பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அசித் குமார் மால்…
Read Moreதி சோஷியல் ரெக்கனிங் விமர்சனம்
ஆரோன் சோர்கின் இயக்கி எழுதியுள்ள ‘தி சோஷியல் ரெக்கனிங் (The Social Reckoning)’ திரைப்படம், 2021-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்திய பிரான்சஸ் ஹாகனின் ‘பேஸ்புக் ஃபைல்ஸ்’ எனும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விறுவிறுப்பான புலனாய்வுப் படமாகும். 2010 இல் வெளியான ‘தி சோஷியல் நெட்வொர்க்’ படத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் இப்படம், வெறும் மார்க் ஜக்கர்பெர்க்கின் வாழ்க்கையை மட்டும் பேசாமல், பெருநிறுவன லாபத்திற்காகப் பயனாளர்களின் பாதுகாப்பைச் சமரசம் செய்த தொழில்நுட்ப அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. தகவல் கசிவாளர் பிரான்சஸ் ஹாகன் (மைக்கி மேடிசன்) மற்றும் பத்திரிகையாளர் ஜெஃப் ஹோர்விட்ஸ் (ஜெர்மி ஆலன் ஒயிட்) ஆகியோரின் துணிச்சலான சட்டப் போராட்டத்தை சோர்கின் தனது வழக்கமான கூர்மையான, வேகமான வசனங்களால் அமைத்துள்ளார். ஆனால், இயக்கத்தில், தி சோஷியல் நெட்வொர்க் படத்தின் இயக்குநர் டேவிட் ஃபின்ச்சர் பதித்த…
Read More”டோரதி’ திரைப்படத்தின் வெற்றியை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கிய படக்குழு!
ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ் இணைந்து ‘டோரதி’ படக்குழு சார்பில் தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடும் 25 திருநங்கைகளின் நலனுக்காகநிதியுதவி வழங்கினர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், மனிதநேயம், கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் திரையரங்கு வெற்றியையும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த உணர்வுபூர்வமான வரவேற்பையும் படக்குழு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தீவிர உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கியுள்ளது. ‘டோரதி’ திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மனிதர்களின் உணர்வுகளை நுட்பமாகச் சித்தரித்த விதத்திற்கும், ஒவ்வொருவரின் கண்ணியம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உரிமையை வலியுறுத்தியதற்கும் ரசிகர்கள் தெரிவித்த பாராட்டுகளும், பகிர்ந்துகொண்ட தனிப்பட்ட அனுபவங்களும் படக்குழுவினரை நெகிழச் செய்துள்ளன. இதற்கு நன்றி தெரிவிக்கும்…
Read More