‘தி பாரடைஸ்’ படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நானி வித்தியாசமான தோற்றத்தில், இதுவரை தோன்றாத மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன், இரண்டு ஜடை முடிகள் தொங்க அவரின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜடால்’ – தனித்துவமான தோற்றம் கொண்ட ஒரு தனித்துவமான பெயராக அமைந்துள்ளது. இந்த தோற்றத்தை அறிமுகப்படுத்தி, தயாரிப்பாளர்கள் ‘மாறுபட்ட சிகையலங்காரமாகத் துவங்கி ஒரு புரட்சிகரமான லுக்காக முடிந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். தசரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு திறமை மிகு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியிருக்கும் #TheParadise, இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ‘ரா ஸ்டேட்மென்ட்’ க்ளிம்ப்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நானியின் ஃபர்ஸ்ட்…
Read Moreகாத்து வாக்குல ஒரு காதல் -திரை விமர்சனம்
காதல் படம். அதை வெட்டு குத்து கத்தி வகையறாக்களுடன் சொல்லி இருக்கிறார்கள். மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உருகி உருகி காதலிக்கிறார்கள். இந்நிலையில், நாயகன் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போய் விடுகிறார். அவரைத் தேடி அலைகிறார் நாயகி. மாஸ் ரவியை மீண்டும் லட்சுமி பிரியா பார்க்கும்போது அவர் ஒரு மாஸ் ரவுடியாக இருக்கிறார். காதலியைத் தெரியாதவர் போல் கடந்து போகிறார். நாயகனின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணி என்ன? நாயகியின் காதல் என்னவானது? கேள்விகளுக்கான விடை, எதிர்பாராத கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, உருகி வழியும் காதலன், அடிதடிக்கு அஞ்சாத காதகன் என இரண்டு மாறுபட்ட நிலைகளிலும் நடிப்பில் தனித்தனி கொடியேற்றி இருக்கிறார். படத்தை இயக்கியவரும் இவர் தான். இயக்கத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. ஆனால் நடிப்பில் தேர்ந்த அனுபவம் தெரிகிறது.…
Read Moreரியல் ஸ்டார்” உபேந்திராவின் (Real Star Upendra’s) பான்-இந்தியா திரைப்படம் “நெக்ஸ்ட் லெவல்” (Next Level) – பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது!!
பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார். சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera ) படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற ஆராதனா, தற்போது தன் இரண்டாவது படத்தில், இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவுடன் திரையை பகிர இருக்கிறார். தருண் ஸ்டுடியோஸ் (Tarun Studios ) நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா (Tarun Shivappa) தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக்…
Read Moreஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர்
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘புல்லட்’ படத்தை தயாரித்துள்ளார். விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது. ‘புல்லட்’ படத்தின் தமிழ் டீசரை நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர். எண்பதுகள் மற்றும் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய டிஸ்கோ சாந்தி…
Read Moreகாந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது !!
வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ், ருக்மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது. இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்…
Read Moreஉதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதன் காரணமாக, காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம் மற்றும் எம். தங்கவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ‘அக்யூஸ்ட்’ வசூல் சிறப்பாக அமைந்துள்ளதால்…
Read Moreஇயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் இருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து மியூசிக்கல் காமெடியாக உருவான இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 4 அன்று வெளியானது. மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்திருக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘பறந்து போ’ படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.எஸ். மதி படத்தொகுப்பு செய்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி கவனித்தார். தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தை ‘வாழ்வின் சிறு, சிறு தருணங்களில்தான் எதிர்பாராத…
Read More“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள, இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ஆனந்த் பாண்டி பேசியதாவது… எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. எனக்கு இதில் வித்தியாசமான ஒரு கேரக்டர், சாதா ஹீரோவாக இருந்த என்னை, பான் இண்டியன் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள். இப்படத்தில் எல்லோரும் செம்மையாக நடித்துள்ளனர். பாடல்கள் எல்லாம் அருமையாக உள்ளது. எல்லோரும் குழந்தைகளோடு ஃபேமிலியாக இப்படத்தைப் பாருங்கள் நன்றி. நடிகை வர்ஷிணி…
Read Moreபான்-இந்தியா பாப் கலாச்சார நிகழ்வான இதன் டிக்கெட்டுகள் KYN -இல் பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது…இப்போதே உங்கள் டிக்கெட்டிற்கான முன்பதிவை தொடங்குங்கள்!
சென்னை, இந்தியா- ஆகஸ்ட் 04, 2025: தி ப்ரீமியர் குளோபல் ஐபி மற்றும் கம்யூனிட்டி பில்டரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30-31 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில், பான்-இந்தியா ஃபெஸ்டிவல் சீரிஸான புத்தம் புதிய கேமிங் திருவிழாவை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறது. இந்த இரண்டு நாள் கொண்டாட்டம் ஸ்கைஸ்போர்ட்ஸ் கேமிங் முயற்சியின் முதல் அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது சென்னையின் துடிப்பான ரசிகர்களைக் கவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிக்கெட்டுகள் KYN செயலியில் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கும். பல கலாச்சாரங்களின் அனுபவமான இந்த கேமிங் திருவிழாவின் சிறப்பம்சங்கள்: * திறந்த லேன் ( LAN ) போட்டிகளில் கேமிங் மற்றும் காஸ்ப்ளே. * இந்திய காமிக்ஸுடன் அனிமேஷன் ஒன்றிணைகிறது. * நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர்களுடன் கிரியேட்டர்ஸ் கலந்துரையாடுகிறார்கள் * புனேவில் நடைபெறும் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்கு முன்பாக 16 வயதுக்குட்பட்ட…
Read Moreஇசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் ‘பேய் கதை’ படத்தின் இசை & முன்னோட்டம்
#PeikathaiTrailer ▶️ https://youtu.be/1UJY3w8rGgI ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். ‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி…
Read More