ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், உணர்வுப்பூர்வமான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் உருவாகி உள்ளது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கல்லூரி கலாட்டா, கலர்ஃபுல் விஷூவல்ஸ்…
Read More96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு! விஜய் சேதுபதி – திரிஷாவின் ‘ராம் – ஜானு’ காதல் மீண்டும் திரையரங்குகளில்
சென்னை: விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் உருவான காதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் அந்த சந்திப்பின்போது வெளிப்படும் உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி – ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா – ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இயக்குநர் சி. பிரேம்குமார் கதை,…
Read Moreப்ளாக் ஹோல், சூனியக்காரி, தேவதை எனக் காமெடியும் மாயாஜாலமும் கலந்த வித்தியாசமான உலகம்!
GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ப்ளாக் ஹோல் எனும் மர்மமான இடத்துக்குள் நுழையும் மூவர், அந்த இடம் குறித்து விசாரணை நடத்தும் காவல் அதிகாரி, சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையே நடக்கும் மோதல் எனப் பல வித்தியாசமான அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி உலகத்தை நம் கண்முன்னே விரிக்கிறது ‘டிரோன்ஸ்’ டிரெய்லர். ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் ஆகிய அம்சங்களுடன் காமெடியும் கலந்து வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விருந்தாக அமைந்துள்ளது. இதற்கிடையே,…
Read More‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என தமிழ் ZEE5 அறிவிப்பு
சரவணன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் நீதிக்கான மற்றொரு வலுவான போராட்டத்துடன் தொடர் மீண்டும் வருகிறது நேஷனல், 7 அக்டோபர் 2026: தமிழ் ZEE5 தனது பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசனை அறிவித்துள்ளது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடர், முற்றிலும் புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் ஆழமான தார்மீகக் குழப்பங்களுடன், நீதித்துறை அமைப்பை மையமாகக் கொண்ட தனது விறுவிறுப்பான கதையாடலை புதிய அத்தியாயத்துடன் தொடர்கிறது. இந்த புதிய சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். அவரது வலுவான திரை ஆளுமை கதைக்களத்திற்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அதேசமயம், கதையின் மையத்தில் இருக்கும் தனது கதாபாத்திரத்தைத் தொடர்ந்து ஏற்று…
Read Moreதாய் நிலம் – விமர்சனம்
கதை… இலங்கையில் வசிக்கிறார் அமர் ராமச்சந்திரன்.. அங்கு நடைபெறும் யுத்தத்தில் தன் மனைவியை இழக்கிறார்.. தன் மகளையாவது இந்த உலகத்தில் வாழவைக்க வேண்டும் என எண்ணும் அமர் ராமச்சந்திரன் அகதியாக இந்தியாவிற்கு வருகிறார்.. கையில் எதுவும் இல்லாத சூழ்நிலையில் வேறு வழியின்றி சாலையோர பிளாட்பாரத்தில் மகளுடன் இணைந்து தன் வாழ்வை தொடங்குகிறார்.. சில நல்ல உள்ளங்கள் மூலம் அவருக்கு உதவி கிடைக்க சந்தோஷமாக வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் திடீரென ஒரு பிரச்சனை வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… மனைவியை இழந்த ஒருவனின் மனநிலை… மகளின் எதிர்காலத்தை யோசிக்கும் ஒரு பொறுப்பான தந்தையின் மனநிலையை உணர்ச்சிப்பூர்வமாக நடிப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார் அமர் ராமச்சந்திரன்.. அமரின் மகளாக நேஹா அமர்.. தாயை இழந்த சோகத்தில் அப்பாவின் துன்பத்தை தினம் தினம் பார்க்கும் மகளின்…
Read More‘டோரதி’ படம் மூலம் மிரட்டலான வில்லன் அவதாரம் – நடிகர் சௌந்தரராஜாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!
‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 45 படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சௌந்தரராஜா. தற்போது வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம் ஒரு கொடூரமான வில்லன் அவதாரமெடுத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கணவராக நடித்திருக்கும் சௌந்தரராஜா, வெறுமனே நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரது ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாகவும், பார்ப்பவர்களுக்கு கோபத்தை தூண்டும் வகையிலும் மிகக் கொடூரமாக அமைந்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள டோரதி திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ஒரு முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை சௌந்தரராஜா கச்சிதமாக செய்து முடித்துள்ளார். குறிப்பாக, இவரது மதுரை தமிழும், வசன உச்சரிப்பும் கச்சிதமாகவும், மிக…
Read More’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், “இந்த படம் சிறந்த அனுபவமாக மாற்றி கொடுத்த ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. ஷபிதா, “கடந்த 16 வருடங்களாக திருநங்கை மற்றும் திருநர் சமூகத்திற்காக வேலை பார்த்து வருகிறோம். நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், நிறைய படங்கள் வந்திருந்தாலும் ‘டோரதி’ எப்போதுமே ஸ்பெஷல். படம் பார்த்து முடித்ததும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். எங்கள் சமூகத்தின் குரலாக இந்தப் படம் உள்ளது. நிஜ வாழ்க்கையிலும் என்னை ஏற்றுக் கொண்டது என்…
Read Moreராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!
தசரத மன்னராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டரை ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் அடையாளம் காணப்படும் அருண் கோவிலுக்கு இது முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ராமரின் தந்தையும் அயோத்தி மன்னருமான தசரதராக அருண் கோவில் காட்சியளிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. முன்பு, இந்திய ரசிகர்களால் ராமராகப் போற்றப்பட்ட அருண் கோவில், தற்போது அயோத்தியின் மன்னரும் ராமரின் தந்தையுமான தசரதராக ‘ராமாயணா’ திரைப்படத்தில் நடிக்கிறார். ராமாயணத்துடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ள ஒரு நடிகர், தற்போது அதே காவியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பது படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. படக்குழு தங்களது…
Read Moreஆல் பாஸ் விமர்சனம்…
கதை… மூன்று தம்பதிகள்.. இந்த தம்பதிகளுக்கு தலா ஒவ்வொரு மகன்கள்.. உடன் பிறந்தவர்களை போல இந்த மூன்று குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.. ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஒற்றுமையாக நண்பர்களாக வாழ்ந்து வரும் வேளையில் இவர்களுக்கு 5 கோடி ரூபாய் பணம் புதையலாக கிடைக்கிறது… ஜெயப்பிரகாஷ் மட்டும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் இது நம்முடைய பணம் இல்லை.. போலீசில் ஒப்படைக்கலாம் என்கிறார்.. ஆனால் மற்றவர்களோ இது நமக்கு கிடைத்திருக்கிறது.. நம் வறுமையை போக்க இது ஒன்றே நமக்கு உதவும் என சொல்கின்றனர். இந்த பணம் ஒரு எம்எல்ஏவின் பணம் என்றும் தெரிய வருகிறது.. அதன் பிறகு அவர்கள் என்ன செய்தனர்.? பணத்தை பங்கு போட்டு வாழ்ந்தார்களா.? திருப்பி கொடுத்தார்களா? குடும்பம் ஒற்றுமையாக இருந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன…
Read Moreநடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு !!
நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது: இந்த அமைப்பு என்பது நம்மால் முடிந்த உதவிகள் அனைவருக்கும் செய்வதுதான் நோக்கமே தவிர யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு இல்லை என்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடல் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்த்தி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிறகு நன்றாக சம்பாதிக்க வேண்டும் சம்பாதித்து முதலில் உங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். நற்பணி என்ற பெயரில் ஓரிரு நாள் மட்டும் செய்து…
Read More