கதை…
மூன்று தம்பதிகள்.. இந்த தம்பதிகளுக்கு தலா ஒவ்வொரு மகன்கள்.. உடன் பிறந்தவர்களை போல இந்த மூன்று குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்..
ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஒற்றுமையாக நண்பர்களாக வாழ்ந்து வரும் வேளையில் இவர்களுக்கு 5 கோடி ரூபாய் பணம் புதையலாக கிடைக்கிறது…
ஜெயப்பிரகாஷ் மட்டும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் இது நம்முடைய பணம் இல்லை.. போலீசில் ஒப்படைக்கலாம் என்கிறார்.. ஆனால் மற்றவர்களோ இது நமக்கு கிடைத்திருக்கிறது.. நம் வறுமையை போக்க இது ஒன்றே நமக்கு உதவும் என சொல்கின்றனர்.
இந்த பணம் ஒரு எம்எல்ஏவின் பணம் என்றும் தெரிய வருகிறது..
அதன் பிறகு அவர்கள் என்ன செய்தனர்.? பணத்தை பங்கு போட்டு வாழ்ந்தார்களா.? திருப்பி கொடுத்தார்களா? குடும்பம் ஒற்றுமையாக இருந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா.ஆர், சத்யா மற்றும் சஞ்சய் உள்ளிட்ட அனைவரும் தங்கள் நடிப்பில் சரியான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..
துஷ்யந்த் – ஜனனி ஜோடி நல்ல கெமிஸ்ட்ரி..
கவுன்சிலராக சத்யா, எம்.எல்.ஏ.வாக சரத் லோகித்ஷவா, இன்ஸ்பெக்டராக அருவி மதன், ரோஷன் பசீர் ஆகியோர் சிறப்பு
தொழில்நுட்பக் குழு…
ஜேம்ஸ் வசந்தின் இசையும், தில்ராஜின் ஒளிப்பதிவும் அழகாக படத்துடன் ஒன்றி பயணிக்கிறது.. பின்னணி இசையும் படத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது சிறப்பு..
நண்பர்கள் நட்பு உடன்பிறந்தோர் இப்படி எதுவாக இருந்தாலும் பணம் என்ற ஒரு விஷம் உள்ளே வந்து விட்டால் அவர்களின் வாழ்வு எப்படி மாறும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்..
வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் எதார்த்த பதிவாக ‘ஆல்பாஸ்’ படத்தை மைதீன் இயக்கியுள்ளார்.
வடசென்னை என்றாலே அடிதடி வெட்டு குத்து வன்முறை ரவுடிசம் என இல்லாமல் மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஆக ஆல்பாஸ்.. அனைவரையும் கவரும்
