நெட்ஃபிலிக்ஸின் உளவியல் த்ரில்லர் படமான ’ஸ்டீபன்’ தற்போது உலகளாவிய ஆங்கிலம் அல்லாத படங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை யாரும் எதிர்பார்த்திராத படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி வெளியாகவுள்ளது. இறுதிவரை கதையின் சஸ்பென்ஸை தக்க வைத்த இந்த தமிழ் படம் கதையின் போக்கையே மாற்றி அமைத்தது. முடிவு என்று நினைத்த இடத்தில் இருந்து மீண்டும் கதைக்கான சாத்தியத்தைக் காட்டிய இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது பார்க்கலாம். அறிமுக இயக்குநர் மிதுன் இயக்கி இருக்க, கதையின் நாயகனான கோமதி சங்கர் இணைந்து எழுதிய ’ஸ்டீபன்’ கதை வழக்கமான ஒன்று அல்ல. பஸ் சீக்வன்ஸ் முடிச்சுகளை ஒன்றாக இணைக்கவில்லை. மாறாக அது முடிச்சுகளை அவிழ்க்கிறது. இது முடிவின் வெளிப்பாடா அல்லது ஒரு பெரிய கதையின் முதல் படியா? அந்தக் கேள்விதான் த்ரில். கிரெடிட்களுக்குப் பிறகு அதன்…
Read MoreJSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம் Post-Production கட்டத்திற்குள் நுழைந்துள்ளது; டப்பிங் பணிகள் நேற்று தொடங்கின.
JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படம் அதிகாரப்பூர்வமாக போஸ்ட்-ப்ரொடக்ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தற்போது படத்தின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கலை சார்ந்த அம்சங்களும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்படும் வகையில், போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு முழு கவனம் செலுத்தி வருகிறது. படப்பிடிப்பின் போது பதிவான நடிப்பின் தீவிரமும் இயல்பும் குன்றாமல் இருக்க, அப்படத்தின் இயக்குநர் எஸ்.கே. ஜீவா டப்பிங் பணிகளை அவரே நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார். தயாரிப்பாளரும் முதன்மை நடிகருமான JSK சதீஷ் குமார், படத்தின் உருவாக்கத்தில் தன்னுடைய வலுவான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். படைப்பாற்றல் பார்வையும் தயாரிப்பு பொறுப்புகளையும் சமநிலையுடன் முன்னெடுத்து வரும் அவர், திட்டத்தின் முக்கியத் தூணாக…
Read Moreபான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!
பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் கொண்டாடப்படும், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் பான்-இந்திய ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இன்று தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவலை ஒரு அற்புதமான அறிவிப்பு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார். தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பையும், புகழ் பெரும் வாய்ப்பையும் வழங்கி, கனவுகளை சினிமா வாழ்க்கையாக மாற்றும் புதிய காலத்தை உருவாக்குகிறது. இந்த புரட்சிகர தளத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்த பிரபாஸ், திரைப்பட உருவாக்கத்தை ஜனநாயகப்படுத்தும் இதன் சக்தியை வலியுறுத்தி பேசியுள்ளார். “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும்…
Read Moreகோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி”
டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது.., பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. தயாரிப்பாளர் லட்சு கணேஷ் பேசியதாவது.., பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. இயக்குநர் குரு A பேசியதாவது.., என் முதலாளி கோதண்டம், லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷீட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும்…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் டிசம்பர் 23, 2025 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. படமாக்குவது குறித்து ஜேசன் சஞ்சயின் தெளிவும், திட்டமிட்டபடி முழு படப்பிடிப்பையும் அவர் முடித்துக் கொடுத்துள்ளதுள்ளதும் இயக்குநராக அவரது திறமையை காட்டுகிறது. படப்பிடிப்பை முதலில் 80 நாட்கள் திட்டமிட்டோம். ஆனால், எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆக்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் உட்பட முழு படப்பிடிப்பையும் படக்குழுவினர் திட்டமிட்ட நாட்களுக்கு…
Read Moreநடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய தமிழ் தொடருக்கான அறிமுக புரோமோவை ஜியோஹாட்ஸ்டார் அதன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!
’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பிளாக்பஸ்டர் ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தத் தொடர் மூலம் நடிகர் விக்ராந்த் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். ஜனவரி 1, 2026 முதல் LBW ப்ரீமியர் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’டின் புதிய புரோமோவில், ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட்…
Read Moreபராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா !!
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்னதாக,…
Read More23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்
தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. இந்த திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான தமிழ் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 திரைப்படங்கள் தேர்வாகியிருந்தது. விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட விழாவின் இறுதி நாளில் நடைப்பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளிவந்த ‘பறந்து போ’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வுக்குழுவினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் இயக்குநர் ராம், டிஸ்னி + ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் திரு. ப்ரதீப் மில்ராய் மற்றும் ஜி கே எஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனர் திரு. கருப்புசாமி அவர்களுடன் விருதை பெற்றுக்கொண்டார்.
Read Moreதுல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி !!
துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை –…
Read Moreயார் தீயசக்தி? பொதுவெளியில் பேச ஒத்தையா வரேன்! நீங்க தயாரா மிஸ்டர் விஜய்!
–மன்சூர் அலிகான் சரமாரியாக கேள்வி!! பாஜக தீயசக்தி. 2014 இல் இருந்து E.V.M. வச்சு பதவியவிட்டு இறங்காம, பாசிச ஆட்சி நடத்துறாங்களே கண்ணுக்கு தெரியலையா விஜய்! இல்ல, எஜமான விசுவாசமா? நீட்’ட யாரு கொண்டு வந்தா? தீய சக்தி பாஜாக இல்லயா விஜய்? 100 நாள் வேலை திட்டத்துல இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்து, நிதியும் ஒதுக்காம களவாணித்தனம் செய்யுற பிஜேபி தீய சக்தி இல்லயா விஜய்? திருப்பரங்குன்றத்துல கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்ட கபளீகரம் பண்ணி ரத்த ஆறு ஓட வைக்க நினைத்த பிஜேபி தீய சக்தி இல்லையா? பாதுகாத்த தி.மு.க அரசு உன் கண்ணுக்கு தீய சக்தியா விஜய்? எல்லாப் பொதுத்துறையையும் வித்து ஏப்பம் விட்டுட்டு, இந்தியாவுக்குன்னு சொந்தமா ஒரு ஏர்லைன்ஸ் கூட இல்லாத நாடா, மக்கள பிச்சை காரங்களா தொங்கவிட்டுட்ட பிஜேபி தீய…
Read More