மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெப்பன்’. சயின்ஸ் ஃபிக்ஷன்- சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியான மூன்று வாரங்களிலேயே அதிக அளவு பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. இதுகுறித்தான மகிழ்ச்சியை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் பகிர்ந்து கொண்டதாவது, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட் பலருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக ஓடிடி தளத்தில் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. தியேட்டர் ஆடியன்ஸ்- ஓடிடி பார்வையாளர்களை என இருதரப்பினரையும் ஒருசேர திருப்திப்படுத்துவது எளிதல்ல! அதை ‘வெப்பன்’ செய்திருக்கிறது என்பதே இதற்கு சான்று”…
Read Moreநடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!
மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Read Moreடிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், ‘கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸின், அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K…
Read Moreகண்ணப்பாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுக் கிருஷ்ண ஜெயந்தியில் வெளியீடு!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கண்ணப்பாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது! கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக குழந்தை தின்னடு கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு! விஷ்ணு மஞ்சுவின் மகனும், பழம்பெரும் நடிகர் மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மஞ்சு, மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முன்னிலையில் இருக்கும் ’கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இதன் மூலம் மஞ்சு குடும்பத்தின் பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தை கண்ணப்பா அல்லது தின்னடுவாக நடிக்கும் அவ்ராமின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கண்ணப்பா, சிவபெருமானின் மதிப்பிற்குரிய பக்தரான பக்த கண்ணப்பாவின் கதையின் பிரமாண்டமான திரை படைப்பாக உருவாகும் இப்படம் பல தலைமுறைகளின் திட்டமாகும். இதில் விஷ்ணு மஞ்சு கண்ணப்பா…
Read Moreநண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘சேவகர்’!!
ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழில் உருவாக்கி இருக்கும் அரசியல் த்ரில்லர்’சேவகர்’. முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் ‘சேவகர்’ இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. ‘சேவகர்’படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர். இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு. சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்…
Read Moreபுகழ் நடிக்கும் “FOUR சிக்னல்” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!
R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’ காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அறிமுக இயக்குநரான மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக ‘Four சிக்னல்’ படத்தை உருவாக்கி உள்ளார். நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது. சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில்…
Read Moreதுபாயில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நடன பள்ளியை அறிமுகம் செய்த நடிகை இனியா!!
தமிழ் திரையுலகில் “வாகை சூடவா” திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. நடிப்பு மட்டுமின்றி பலதுறைகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா புதிதாக நடன பள்ளி துவங்கியுள்ளார். ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ (AATREYA DANCE STUDIO) என்ற பெயரில் புதிய நடனப் பள்ளியை துவங்கி இருக்கிறார். நடிகை இனியாவின் குரு அருண் நந்தகுமார் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோவின் இணை நிறுவனராக உள்ளார். துபாயில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகை இனியா மற்றும் அவரது குழுவினர் இணைந்து சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதோடு விருது வழங்கும் நிகழ்ச்சியை பின்னணியில் இருந்து நேர்த்தியாக அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்கி இருக்கிறார் இனியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இனியா ஷோ டிரைக்டர் அவதாரமும் எடுத்துள்ளார் என்பது…
Read More100 கோடி வசூலை நோக்கி பயணிக்கும் தங்கலான் !!
சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது. ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391…
Read More38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து, அசத்திய “2K லவ்ஸ்டோரி” படக்குழு !!
City light pictures தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, “2K லவ்ஸ்டோரி ‘ படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில், இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால…
Read Moreசபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை…
Read More