Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” திரைப்படம் இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்து வருகிறது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியிருக்கும் இப்படத்தில், தமிழின் முண்ணனி குணச்சித்திர நடிகரான சார்லி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிப்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சார்லியின் வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பதாக பரபரப்பான காட்சிகளுடன், அதிரடி திருப்பங்களுடனும், ஒரு அட்டகாசமான திரில்லர் அனுபவத்தை இந்தப்படம் தருகிறது. படத்தில் ஏறத்தாழ அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், நடிப்பு, தொழில்நுட்பம் அனைத்திலும் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தில் ரசிகர்களிடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது.…
Read Moreநிறம் மாறும் உலகில் படத்தில் பாரதிராஜாவுடன் இணையும் நட்டி, சாண்டி, ரியோராஜ்
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை,…
Read Moreகுழந்தையை காக்க போராடும் தாயாக சோனியா அகர்வால் நடிக்கும் பிஹைண்ட்
ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக ‘பிஹைண்ட் ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அமன் ரஃபி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இதில் பாசமுள்ள உணர்ச்சிகரமான தாயாக சோனியா அகர்வால் நடித்துள்ளார் . லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர். சோனியா அகர்வாலின் கணவராக கதையின் கதாநாயகனாக ஜினு இ தாமஸ் நடித்துள்ளார்.அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற கண்ணுக்குத் தெரியாத அந்த ஆபத்தை உணர்ந்து கொள்கிறது.…
Read More”இது வெள்ளிக்கிழமை நாயகன் வெள்ளிக்கிழமை நாயகியின் வெற்றி” – மகிழ்ச்சியில் படக்குழு
நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினர். இப்படம் வெளியான பிறகு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களின் தொடர்…
Read More”மிராய்” தேஜா சஜ்ஜாவின் புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம்
சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் படத்திற்கு மிராய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 18, 2025 அன்று திரையரங்குகளில் 3டியில் வெளியாகிறது !! டோலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி சமீபத்தில் தங்களது அடுத்த தயாரிப்பான புரடக்சன் நம்பர் 36 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இப்படத்தில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா சூப்பர் யோதா கேரக்டரில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனி இயக்குகிறார். நல்ல சினிமா ரசனையும், திரைப்படத் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான டிஜி விஸ்வ பிரசாத், சிறந்த தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். முன்னர் அறிவித்தபடி படக்குழுவினர் படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு அறிமுக வீடியோவை…
Read Moreமேடையில் டி.எஸ்.பியுடன் நடனம் ஆடி அசத்திய விஷால்
‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘ரத்னம்’ ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள வியாழக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஷாலின் தேவி பவுண்டேஷன் சார்பில் இரு பெண் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யப்பட்டது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்… “ஹரி சார் இயக்கத்துல விஷால் ஹீரோவா ஒரு படம் தயாரிப்போம்னு நினைக்கவே இல்லை. இது எல்லாம் அமைஞ்சது எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்வேன். சந்தோஷத்தோடு…
Read Moreவனிதா விஜயகுமார் சோனியா அகர்வால் நடிப்பில் தண்டுபாளையம்
1980 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்று வரை ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் தன் வேட்டையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. கொலை,கொள்ளை, குற்றம் போன்ற செயல்களை யாருடைய கண்ணுக்கும் தென்படாமல் சம்பவத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கின்றது. இதில் ஒரு கூட்டத்தினரை 15 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தது காவல்துறை. இவற்றில் 390 திருட்டு வழக்குகள், 108 கொலை குற்ற வழக்குகள் மற்றும் மிகக் கொடுமையான 90 கற்பழிப்பு வழக்குகள் என ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தூக்குதண்டனை வழங்க முடியவில்லை. அதேநேரம் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு ஆளாகிறார்கள். கைதானவர்கள் அனைத்து வழக்குகளிலும் விடுதலையாகிக் கொண்டே வருகிறார்கள்.…
Read Moreஇந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் வெஃப் தொடர் “இன்ஸ்பெக்டர் ரிஷி”
நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து. நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இன்ஸ்பெக்டர் ரிஷி இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. மும்பை, இந்தியா- 2024, ஏப்ரல் 18 – இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் அதன் உலகளாவிய பிரீமியரைத் தொடர்ந்து, பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடராக குறிபிடத்தக்க வகையிலான சாதனையை படைத்துள்ளது. மனதை ஆழ்ந்துபோகச் செய்யும் அதன் கதை சொல்லும் பாணி, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த, திகில் க்ரைம் டிராமாவாக உருவாகியிருக்கிறது. அனைத்தையும்…
Read Moreதர்ஷன் – அஞ்சு குரியன் நடிப்பில் சரிகமா வெளியீட்டில் “எண்ட ஓமனே” ஆல்பம் பாடல்
உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “எண்ட ஓமனே” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது. உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் சரிகமா , பல புதுமையான ஆல்பங்களையும், சுயாதீன கலைஞர்களின் பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது வெளியிட்டுள்ளது. கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில்,…
Read Moreரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த சியான் விக்ரம்!
‘சியான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர “சூரன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் காணொளி ஆகியவை வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இரட்டை விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருகிறார்கள். இயக்குநர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர “சூரன்” எனும் திரைப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச்…
Read More