நெஞ்சிற்கினிய ஊடக நண்பர்களுக்கு அன்பு வணக்கம், ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் மூன்றாண்டு கால தொடர் உழைப்பில் நேர்த்தியான தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியோடு vels film international limted டாக்டர் கே.ஐசரி கணேஷ் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் wide angle media அனீஸ் அர்ஜூன் தேவ் இணைதயாரிப்பில் , நடிகர்கள் ஜீவா, அர்ஜூன் ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் அகத்தியா திரைப்படத்தின் ஊடக நண்பர்கள் காட்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி ஒரு நிறையான படைப்பாக அகத்தியாவை உங்கள் முன் முதல் காட்சியாக திரையிடும் இந்நேரத்தில் தமிழ் மரபு சார்ந்த ஒரு முக்கியப் பதிவையும் நம் மண்ணும் நம் முன்னோர்களும் நமக்களித்த பெரும் ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியையும் அகத்தியா திரைப்படத்தில் கதைக்களமாக படைத்துள்ளோம்.…
Read Moreதிரைத்துறையில் புதிய புரட்சி! லண்டனில் SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures இணைப்பு!
உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு, மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் உலகளவில் உள்ள பொழுதுபோக்கு துறையில், பிரம்மாண்டம், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றில் அற்புதமான பல புதிய முயற்சிகளை இந்த கூட்டாண்மை நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும். SRAM & MRAM குழுமத்தின் தலைவர் டாக்டர். சைலேஷ் எல். ஹீரானந்தானி மற்றும் Paradigm Pictures-யின் தலைவர் திரு. அர்விந்த் தர்மராஜ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த இணைப்பு மூலம் SRAM & MRAM குழுமம் இந்தியாவின் உயர்மட்ட பொழுதுபோக்குத் துறையில், பாரம்பரியத்துடன் கலாச்சாரத்தைப் போற்றும் பல புதிய படைப்புகளை உருவாக்க உதவும். SRAM & MRAM குழுமம்…
Read Moreசொந்தமாக பேருந்து வாங்கப்பட்டு ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா தலைமையில் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயா, அஜ்மல் பங்கேற்பு
சச்சின் சினிமாஸோடு இணைந்து ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். ‘அக்யூஸ்ட்’ படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவும் திரைக்கதையின் முக்கிய அங்கமாகவும் திகழக்கூடிய பரபரப்பான சண்டைக்காட்சி ஒன்று கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லிக்கு அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா அதிக பொருட்செலவில் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்து இயக்கி வருகிறார். முழுக்க பேருந்தில் நடைபெறும்…
Read Moreஇயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’!
சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி, ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும், ‘திரௌபதி’யை பெரிய திரைகளில் வரவேற்கும் நேரம் இது. இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோர் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ மற்றும் ‘திரௌபதி’ படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. இப்போது இவர்கள் மீண்டும் ‘திரௌபதி 2’ படத்தில் இணைந்துள்ளனர். இம்முறை, 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருபோதும் மறைந்துவிடாத தீவிரமான போர்வீரர்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவனத்தைக் கவர்ந்தது. இதுபற்றி இயக்குநர் மோகன்…
Read Moreசக்தி திருமகன் – சக்திவாய்ந்த கதைசொல்லலில் ஒரு புதிய அத்தியாயம்
தனது அழுத்தமான கதைசொல்லல் மற்றும் வலுவான பெண் கதாநாயகிகளுக்காகப் பாராட்டப்பட்ட பிரபல இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், அருவியில் அதிதி பாலனையும், வாழில் டி.ஜே. பானுவையும் அறிமுகப்படுத்தினார். இப்போது, சக்தி திருமகன் படத்தில் திருப்தி ரவீந்திரனை கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார். படைப்பு எல்லைகளைத் தாண்டிச் செல்வதில் பெயர் பெற்ற அருண் பிரபு, பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலிக்கும் கதாபாத்திரங்களை தொடர்ந்து உருவாக்கி, அவர்களின் வலிமை, மீள்தன்மை மற்றும் ஆழத்தை வெளிப்படுத்துகிறார். சக்தி திருமகன் படத்தில், பார்வையாளர்கள் ஒரு சக்திவாய்ந்த பெண் கதாநாயகியின் மறக்க முடியாத சித்தரிப்பை எதிர்பார்க்கலாம், அவரது திரைப்படத் தயாரிப்பை வரையறுக்கும் அதே நுணுக்கமான கவனம் மற்றும் நம்பகத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆச்சரியத்தின் அம்சத்தைப் பராமரிக்க பிரத்தியேகங்களை மறைத்து வைத்திருக்கும் அதே வேளையில், இயக்குனர் ஒரு புதிய அளவுகோலை அமைத்து, கவர்ந்திழுக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு கதையை உறுதியளிக்கிறார்.
Read Moreலைக்கா புரொடக்ஷன்ஸ் – ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான’ L2 : எம்புரான் ‘ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின்
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ L 2: எம்புரான்’ எனும் திரைப்படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஜான் விக் சாப்டர் 3 ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள். இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘L 2 எம்புரான் ‘ எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட புகழ்…
Read Moreஸ்ரீகாந்த் – புஜிதா பொன்னாடா நடித்த ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” மார்ச் 14ஆம் தேதி வெளியாகிறது
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் MY INDIA மாணிக்கம் தனது முதல் தயாரிப்பாக தயாரிக்கும் படத்திற்கு ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” என்று பெயரிட்டுள்ளனர். உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா…
Read Moreபிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது
சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது. 18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறது *மும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025* —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. காளிபட்டணத்தின் பெரும் புதிரான சமூகக் கட்டமைப்பை சீர்குலைத்து பாதிப்பை விளைவிக்கக்…
Read Moreஅப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’
முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, ‘ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது’ என அனைவரும் பாராட்டினார்கள்.. விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் ‘ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு உள்ளது என்கிறார் நடிகர் அப்புக்குட்டி’. ஆகவே தான் நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஓடிடி தளத்தில் மிகவும் கொண்டாடப்படும் என்று நம்பிக்கை கொள்கிறார். அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என இவ்விரு படங்களும்…
Read Moreநான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன் – மர்மர் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ரோஹித் பேசும் போது, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்-க்கு இந்த மேடையில் வைத்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நாங்கள் மேடையேறுவதற்கு காரணம்…
Read More
