பதற்றமான தென்தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் “பைசன்”

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக் – 17 அன்று வெளியாகவிருக்கும் படம் பைசன். அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப்படம் உருவாக்கம் குறித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறியது. “பைசன்” என் கரியரில் முக்கியமான படம் . மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன். இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது, என் கதையும் இருக்கிறது , பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது. இந்தபடத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ்விக்ரம், தயாரித்த பா.இரஞ்சித் அண்ணன் , நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள்.…

Read More

வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்ட கதை வெற்று ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜியத்தை குறிக்கும் சூநியங்கள்…. என்கிறார் -வில்லயம் ஷேக்ஸ்பியர்

உலகிலேயே மிகவலிமையானவள் பெண் தான். மாதம் மாதம் தன் உதிரத்தையே பார்க்கும் சக்தி அவளுக்கே உரியது. எல்லோராளும் வேட்டையாடப் படுபவளும் அவள் தான். சமையல் அறையில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட இந்த சமுதாயத்தில் கிடைப்பதில்லை. எவ்வளவு பெரிய புத்திசாலி பெண்ணும் இந்த சமுதாயத்தில், ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஆணால் வேட்டையாடப்பட்டு கொண்டே இருக்கிறாள். ஒரு ஆண் தன்னுடைய மகளை தெய்வமாக பார்க்கிறான், அதே ஆண் அதே வயதுடைய வேறு ஒரு பெண்ணை SEX-TOY ஆகவே பார்க்கிறான். பல விதமாக வேட்டையாடப்பட்ட பெண்களின், சமுதாயத்திற்கு எதிரான கோபமே இந்த “முட்டாள் எழுதிய கதை” படம் என்கின்றார் பா.ஆனந்தராஜன். இவர், இதற்குமுன் கிச்சி கிச்சி, யுத்தகாண்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பாலா ஜி இராமசாமி மேற்கொள்ள, இசை ஜோகன், எடிட்டிங் வில்சி மற்றும்…

Read More

விஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தையும் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் இந்த டீசர், ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருன்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. இதுவரை திரையில் நாம் பார்த்திராத காவலதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஷ்ணு விஷால் கவனம் ஈர்க்கிறார். 34 மாத இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தனி ஹீரோவாக கலக்கியிருக்கும் மிரட்டலான இந்த டீசர் திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…

Read More

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா – சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்’ வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை…

Read More

நடிகர் ரஞ்சித் நடிக்கும் ‘இறுதி முயற்சி’ படத்தின் இசை வெளியீடு

வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் வெங்கட்ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் – விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார். தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை…

Read More

’இறுதி முயற்சி’ நல்ல படத்தில் நடித்த திருப்தியை எனக்கு கொடுத்திருக்கிறது – நடிகர் ரஞ்சித் நெகிழ்ச்சி!!

வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் வெங்கட்ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் – விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார். தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை…

Read More

SMCA பெருமையுடன் வழங்கும் 47வது ஆண்டு “ஷாரோதோத்சவ்” இலையுதிர் திருவிழா

SMCA-வில், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெறும் 47வது ஆண்டு இலையுதிர் விழா “ஷாரோதோத்சவ்”-ஐ வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். SMCA என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். சக்தி தேவி – மா துர்காவை வணங்குவதன் மூலம் வருடாந்திர இலையுதிர் விழாவை நாங்கள் தொடங்கி வைக்கும் அதே வேளையில், 5 நாட்களுக்கு நடைபெறும் இசை இரவுகள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்களின் மேடை நிகழ்ச்சிகள், உணவு விழா, பல்வேறு போட்டிகள், அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் பலவற்றின் மூலம் பிரமாண்டத்தை அதிகரிக்கிறோம். இந்த மெகா நிகழ்வு, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒரு பெரிய கூட்டத்திற்குத் தெரியும் வகையில் தயாரிப்புகளை பிராண்டிங் செய்வதற்கும், பல ஆண்டுகளாக அனுபவித்தபடி 3000+ புரவலர்களால் படிக்கப்படும் ஒரு…

Read More

விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”.

சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்.., தயாரிப்பாளர் வெங்கடேசன் பேசியதாவது.., இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. அக்டோபர் 10 படம் வருகிறது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. நடிகர் அருள்தாஸ் பேசியதாவது.., கஜேந்திரன் சார் முன்பே அறிமுகம். 10 வருடங்கள் முன்பு என்னை அழைத்து ஃபிலிம் இன்ஸ்டியூட் முடித்துள்ளேன். ஒரு குறும்படம் நடித்துத் தாருங்கள் என்றார். பின் இப்போது மீண்டும் அழைத்து படம் செய்வதாக சொன்னார். மகிழ்ச்சியுடன் சென்று நடித்தேன். திரையுலகில் சாதிப்பதற்காகத் துடிக்கும் அனைவருக்கும் நான் தோள் கொடுப்பேன்.…

Read More

நடிகர் சசிகுமார் புதிய படம்! யாத்திசை இயக்குனருடன் இணைகிறார்!

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற ‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் பகிந்து கொண்டதாவது, “நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான…

Read More

நடிகர் ரஹ்மான் பதிவு! இதயத்தை நொறுக்கும் காலை… ஒரு பணிவான வேண்டுகோள் 🕊️

இன்றைய செய்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த செய்தி கேட்டு மிகவும் மன வேதனையடைந்தேன். பல சாதாரண மக்களின் உயிர்கள் மிதிவெள்ளத்தில் பலியானது கேட்டு அதிர்ச்சியிலும் மீளா துயரத்திலும் ஆழ்ந்து விட்டேன். இவ்வளவு பேரிழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மறைந்த ஆன்மாக்கள் சாந்தியடைய என் பிரார்த்தனைகள். ஆனால், இந்த துயரத்தோடு கவலையும் தோன்றுகிறது. இத்தகைய துயரங்கள் மீண்டும் மீண்டும் ஏன் நிகழ வேண்டும்? ஏன் நம்முடைய குழந்தைகள், பெண்கள், நாமே கூட இத்தகைய பெரும் கூட்டங்களில் ஆபத்துக்குள்ளாக வேண்டும்? எந்த அரசியல்வாதிக்காகவும் சரி, எந்த நடிகருக்காகவும் சரி, நம் உயிரைப் பறிகொடுக்க வேண்டிய அளவுக்கு இது அவசியம் அல்ல. நாம் அனைவரும் சற்றேனும்…

Read More