Kombhu movie ‘கொம்பு’ சினிமா விமர்சனம் திகில், திரில், கிரைம் கலந்து செய்த கலவை. அந்த கிராமத்தில் மாட்டுக் ‘கொம்பு’ மூலம் ஆவிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து வருகிறார் ஒரு சாமியார். அந்த கொம்பு ஒரு பெண்ணின் கைக்கு வருகிறது. அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். கொம்பு செய்யும் சதியால் இன்னொரு பெண்ணுக்கும் நேர்கிறது அதே கதி! பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள என்ன காரணம்? தெரிந்துகொள்ள பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி திஷா பாண்டே களத்தில் இறங்குகிறார். அவருடன் ஜீவா, பாண்டியராஜன், புவிஷா டீம் இணைகிறார்கள். தற்கொலைகளுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் அதிர்ச்சியான சம்பவங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். திகிலும் திரில்லுமாய் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இ. இப்ராஹிம். ஹீரோவாக லொள்ளுசபா’ ஜீவா. வீட்டுக்குள் பேய் நுழைந்தது போன்ற செட்டப்போடு அவர் என்ட்ரி கொடுப்பதாகட்டும், பேய்…
Read Moreவரியே இல்லா தமிழகம்! இலவச தண்ணீர், மருத்துவம், கல்வி இவை அனைத்துக்கும் வழிவகுக்கும் “மை இந்தியா பார்ட்டி”
இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விச் சேவையில் பல காலம் தொண்டாற்றி வருகிறார். தமது தொழிலில் மாற்றத்தை கொண்டுவந்து முன்னேற்றத்தை கண்ட அணில் குமார் ஓஜா, தற்போது அதே முன்னேற்றத்தை தமிழகத்திலும் ஏற்படுத்தி, தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்ல புதிய திட்டங்களுடன் மை இந்தியா பார்ட்டி (எனது இந்தியா கட்சி) எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். ‘போதும்!… போதும்!!… ஏமாந்தது போதும்!!!…’ என்ற கோஷத்தை முன்வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சியின் கனவுத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் வருமாறு: அனைவருக்கும் இலவச…
Read Moreஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா? அதுவும் தமிழ்நாட்டுலயா??
நிவர் புயலின் தாக்கம் சென்னையில் பேய் மழையாய் கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தன, தலைநகரம் தண்ணீர் நகரமாய் மாறிப்போனது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சமைக்க முடியாமல் வட சென்னையின் பல பகுதி மக்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். இந்தக் காட்சி மழைக்காலத்தில் வீதிவீதியாக சென்று நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டிய அமைச்சர் ஜெயக்குமாரின் கண்களில் பட்டது.பசியால் குழந்தைகள்,முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாடுவதை பார்த்தார். உடனடியாக தன் சொந்தப் பணத்தில் தரமான வெஜ்பிரியாணியை பல இடங்களில் சமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கடகடவென வேலைகள் தொடங்கி கமகமவென வெஜ்பிரியாணி தயாரானது. பெரிய அண்டாவை ஒரு சைக்கிளில் எடுத்து வைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் அவரே நேரில் சென்று பலருக்கும் பரிமாறி பசியாற்றினார்.மரங்களை அப்புறப்படுத்துவது, மீனவர்களை பாதுகாப்பது,நிவாரண முகாம்களை அமைப்பது என எத்தனையோ பணிகளைச் செய்தாலும் ஏழைகளின் பசி ஆற்றுவது…
Read Moreமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா?
நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் ஒருபக்கம் என சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது இயற்கை. இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர். தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளை இரண்டு நாட்களாக செய்து வருகிறார் அவர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைப்பதும், உணவு சமைத்து தானே விநியோகம் செய்வதும் அத்தியாவசிய பொருட்களை அள்ளிக் கொடுப்பதும் இந்த அமைச்சரின்…
Read Moreபைக்கில் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார்
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்குகின்றனர்.அவர்களைப் பார்த்து கையசைத்து சிரிக்கிறார் அவர். அப்போது தான் அவர்களுக்கு தெரிகிறது அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது. காரில் இருந்த சிலர் பைக்கில் இருந்த சிலர் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொள்கின்றனர். “என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே” என்று கேட்கிறார்கள். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே, ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு…
Read Moreமீனவர்களுக்காக கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்!
சென்னை ராயபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் காசிமேடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் அலையின் சீற்றத்தில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாயமான 5 பேரையும் உயிருடன் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் துரதிர்ஷ்டவசமாக அவர்களை சடலமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து இறந்தவர்களின் வீடுகளுக்கு அமைச்சர் நேரில் சென்று இறுதிச் சடங்கு செய்ய தனது சொந்த பணத்தில் இருந்து தலா 10 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதுமட்டுமல்லாது அவர்களின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் அவர். உயிரோடு மீட்டு விடலாம் என்று நினைத்தால் இப்படி பார்க்க வேண்டிய சூழல் வந்து விட்டதை எண்ணி கண்கலங்கி அவர் இறந்தவர்களின்…
Read Moreராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில் !
2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் திரு T. முருகானந்தம் அவர்களின் இந்த திரைப்பயணம் பெரும் வெற்றி சரித்திரம். இதுவரை தமிழ்நாடு முழுதுமாக 148 படங்களுக்கும் மேலாக விநியோகம் செய்துள்ளார் அதில் உச்ச நட்சத்திரங்கள் அஜித்குமார், விஜய், தனுஷ், மற்றும் பலரின் படங்களும் அடங்கும். இந்நிறுவனம் மூலம் முதல் முறையாக திரை உரிமையை பெற்ற ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படம் பிரமிப்பு தரும் வெற்றியை பெற்று பெரும் லாபத்தை தந்தது. இந்த வெற்றி பயணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த “ மேயாத மான்” படத்திலும் தொடர்ந்தது. 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள உச்ச நட்சத்திரத்துடன் “வேகம், விவேகம்” படத்திலும் இணைந்தது. மேலும்…
Read Moreசிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க கேயார் கோரிக்கை
எஸ்பிபி மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்பிபி அவர்களின் மறைவுக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார். எஸ்பிபி அவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.…
Read Moreபாடலாசிரியர் கருணாகரன் பாடலில்.. ஹேமந்த் மதுகர் இயக்கும் திரைபடம்… சைலன்ஸ்
உலகின் விழியாய் உண்மையின் மொழியாய் வாழும் அன்பு ஊடக நண்பர்களே! என்றும் எனக்கு ஆதரவும், அரவணைப்பையும் வழங்கும் சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்த கடிதம் வாயிலாக மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மாதவன், அனுஷ்கா, அஞ்சலி ,மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில்…. இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையில்…. ஹேமந்த் மதுகர் இயக்கும் திரைபடம்… #சைலன்ஸ். சஸ்பென்ஸ், த்ரில்லராகவும், மென்மையான ஆழமான அன்பின் மறுமொழியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த சைலன்ஸ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் ஐந்து பாடல்களை நான் எழுதி உள்ளேன். முதல் பாடல்…. காதலன் காதலி மீதுள்ள ஈர்பை கூறும் பாடல் “நீயே நீயே நான் காணும் உலகம் நீயே….” பாடியவர் : அலப்ராஜ் இரண்டாவது பாடல்…. காதலன் மீது காதலி ,காதலி மீது காதலன் அன்பை உணர்த்தும் பாடல்…. “முதல்…
Read More“வெற்றி” இயக்குநர் அஞ்சனா அலி கானின் புதிய படைப்பு !
ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது…. இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. “வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது…
Read More