முன்னணி பிரபலங்களின் பாராட்டில், சுழல் – தி வோர்டெக்ஸ் 2வது சீசன்!

முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ மற்றும் பல பிரபலங்கள், பிரைம் வீடியோவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ் 2ம் சீசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் !! பிரைம் வீடியோ வெளியாகும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸின் 2வது சீசனின் ட்ரெய்லர் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த க்ரைம் திரில்லர் வெப்சீரிஸின் 2வது சீசனை, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இதன் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ, துஷாரா, லோகேஷ் கனகராஜ், எம் சசிகுமார், ஆர்யா, விஷ்ணு…

Read More

‘லாரா’ திரைப்படம் ‘டெண்ட் கொட்டா ‘ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தல்!

இந்தப் புதிய ஆண்டு 2025தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இந்தத் திரைப்படத்தில் கார்த்திகேசன், அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் நடித்து இருந்தனர். மணி மூர்த்தி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார். காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது பேசப்பட்டது. இப்படத்தைப் பார்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள் கடைசி வரை சஸ்பென்சை சிதற விடாமல் பராமரித்து,யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொண்ட ஒரு திருப்தியான க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் ஏற்பட்டது என்று படக்குழுவினைப் பாராட்டி இருந்தார்கள். படத்திற்கு நல்ல மாதிரியான நேர் நிலையான விமர்சனங்கள் வந்திருந்தன. உதாரணத்திற்குச்…

Read More

‘புஷ்பா 2 ‘ புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் ‘நாக பந்தம்’ பட பாடல்

நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள். இளம் நாயகன் விராட் கர்ண் – பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் நாமா பிரம்மாண்டமாக  இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நானக்ராம்குடா ராமாநாயுடு ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று…

Read More

ட்ராகன் – திரை விமர்சனம்

ப்ளஸ் டூ வில் 96 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற ராகவன் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கிறார். அங்கே படிப்பை ஒதுக்கி வைத்து விட்டு கெத்து காட்டுவதில் மட்டும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார். இதனால் நான்காம் ஆண்டு கல்லூரி முடிக்கும் காலகட்டத்தில் 48 அரியஸ் வைத்து வெளியேறுகிறார். இந்தக் கல்லூரியில் அவர் சம்பாதித்தஒன்று காதல். நாயகன் மீது உயிரையே வைத்திருக்கிறார் காதலி அனுபமா பரமேஸ்வரன்.. கல்லூரியில் இருந்து விடைபெற்ற நேரத்தில் காதலி அவனை சந்திக்கிறாள். பெற்றோர் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாக கலக்கத்துடன் கூறுகிறாள். ஆனால் அதை சட்டை செய்யாத நாயகன் வார்த்தைகளால் காதலியை காயப்படுத்துகிறான். பதிலுக்கு காதலியும், ‘உனக்கு படிப்பும் இல்லை. வேலையும் இல்லை. வருங்கால கணவருக்கு மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க துப்பில்லாத உன்னைப் பற்றி…

Read More

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -திரை விமர்சனம்

காதல் தோல்வியால் திருமணத்தை தவிர்க்கும் பிரபுவை (பவிஷ் நாராயண் ) வற்புறுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே போன பிறகுதான் அவர்கள் பார்க்கப் போன பெண் அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வாரியர்) என்று தெரிய வருகிறது. இருவரும் பேசும்போது தோற்றுப்போன தன் முதல் காதலை பற்றி பகிர்ந்து கொள்கிறான் பவிஷ். அதைக் கேட்டு முடித்ததும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்ச நாட்கள் எடுத்துக் கொள்வோம். அதன் பிறகு திருமண பேச்சுக்கு வரலாம் என்கிறார் பள்ளிக்கால தோழி. இதேநேரத்தில் அடுத்த கட்ட அதிர்ச்சியாக முன்னாள் காதலி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்தன்) கல்யாண பத்திரிகை வர, நீ போய் உன் பழைய காதலியை பார்த்து விட்டு வா என்கிறாள் தோழி. நண்பனுடன் நிலா திருமணத்திற்கு செல்லும் பிரபுவுக்கு அங்கே…

Read More

ராமம் ராகவம்- திரை விமர்சனம்

நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி. அவரது ஒரே மகன் தனராஜ் அப்பாவுக்கு நேர் எதிர். சிறு வயதில் இருந்தே சிகரெட் , சூதாட்டம், மது என்று எல்லா கெட்ட பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள, படிப்பு அவரிடமிருந்து விடைபெற்று போய் விடுகிறது. மகனின் இந்த செயல்களுக்காக அவனை வெறுத்தாலும் உள்ளூர மகன் திருந்தி விட மாட்டானா என்ற நப்பாசை அப்பாவுக்கு. மகனோ திருந்துவதாக இல்லை. வேலைக்குப் போகும் இடங்களிலும் போர்ஜரி செய்து மாட்டிக்கொண்டு அப்பாவுக்கு தலைவலி தர… ஒரு கட்டத்தில் அப்பாவே மகனை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார். தன் எதிர்கால சந்தோஷங்களுக்கு முட்டுக்கட்டை போடும் இந்த அப்பாவை இனி கொன்றால் தான் ஆயிற்று என்று முடிவெடுக்கிறான் மகன். அதற்காக தனக்குத் தெரிந்த லாரி டிரைவர் ஒருவரையும் ஏற்பாடு செய்கிறான்.ஆனால் மகனின் சதி திட்டம் தெரிந்த அப்பா என்ன முடிவு எடுக்கிறார்?…

Read More

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முகை மழை..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்…

Read More

கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்

சென்னை., இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC – South Connect) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய திரு. கமல்ஹாசன், தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவி மடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு நான் சார்ந்திருக்கிற திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லற்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரிவிதிப்பாகி விடுகிறது. மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து…

Read More

தோனிவர்ஸ் மற்றும் அதன் நன்கு பாதுகாக்கப்பட்ட இரகசியங்கள்: தோனியின் ஹேர்ஸ்டைலை நீங்கள் நகலெடுக்க விரும்புவீர்கள்!

சக்திவாய்ந்த தம்பதிகளான எம்.எஸ். தோனியும் சாக்ஷியும் இணையும்போது, ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள் – இந்த முறை, இயற்கையாகவே அற்புதமாகத் தோன்றுவது பற்றியது, கார்னியர் பிளாக் நேச்சுரல்ஸுக்கு நன்றி! அவர்களுக்கு இடையேயான இந்த மகிழ்ச்சியான கிண்டல் அவர்களின் சமீபத்திய டீசரில் மையமாகிறது (உங்கள் இதயத்தையும்). சமீபத்தில் ஒருவர் தோனியிடம் 43 வயதில் 30 வயதில் எப்படி இருக்கிறார் என்று கேட்டதை சாக்ஷி நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது, ஆனால் அவர் தொடர்ந்து வெளிப்படையாக பேட்டி அளித்ததற்காக அவரை கேலி செய்கிறார். அவரது பதில் என்ன? “முடியின் நிறமும் தாடியின் நிறமும்.” பெருமைக்குரிய விளையாட்டிலிருந்து விடுபடாமல் இருக்க, சாக்ஷி அவரது தலைமுடிக்கு கலர் பூசுவது தான் என்று விரைவாக தெளிவுபடுத்துகிறார். எனவே, “நீங்கள் எந்த கலரைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று அவரிடம் கேட்கும்போது, தோனி தனது முத்திரை…

Read More

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” பட டிரெய்லர் வெளியீட்டு விழா  !!

7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”. காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. ஓளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசியதாவது… இயக்குனர் அறிவழகன் சாருடைய ஈரம் திரைப்படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு தான் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். எனது முதல் படமான “மகாமுனி” திரைப்படத்தை பார்த்து, அறிவழகன் சார் என்னை இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார்.…

Read More