வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள ஜூராசிக் பார்க் பட ரசிகர்கள் மீண்டும் தங்களுக்கு விருப்பமான உலகத்தில் நுழைய இருப்பது குறித்து உற்சாகமாக உள்ளனர். பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். டிரெய்லர் வரலாற்றுக்கு முந்தைய பிரபஞ்சத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச்…
Read Moreரோட்டர்டாம் பட விழாவில் ‘பறந்து போ’ திரையீடு!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘பறந்து போ’ திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது. இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நகைச்சுவையை மையமாக கொண்ட எளிமையான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படம் நெடுக கைதட்டியும்…
Read More“ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்” -படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கவுண்டமணி வேண்டுகோள்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன், ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், சிசர் மனோகர், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு…
Read More2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது.
“மதகஜராஜா” திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பட குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று தெரியாமலே அன்று படம் வெளிவர முடியாமல் போனது. அதனை தொடந்து நானும், அன்பிற்கினிய சகோதரர் இயக்குநர் திரு.சுந்தர்.C அவர்களும் சோர்வடையாமல் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுத்து வந்தோம். இந்த 2025ஆம் வருடம் “மதகஜராஜா” திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் எங்களுக்கு வலிமையான முதல் தூணாக இருந்தவர் அன்பிற்கினிய அண்ணன் திருப்பூர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் இத்திரைப்படத்தை முதலில் அவர் பார்த்த உடன் அதன் மீது உள்ள முழு நம்பிக்கையில் பொங்கல் திருவிழா திருநாளில் வெளியிடுவதற்கு முன்னெடுத்து முழு ஆதரவையும் வழங்கி வழி நடத்தி எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.…
Read Moreகெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” விரைவில் திரையில்
Yasho Entertainment சார்பில், Dr. சத்யா M தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “கருப்பு பல்சர்”. இப்படத்தின் முழுமையாக முடிந்த நிலையில், தற்போது திரைக்குக் கொண்டுவரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படித் தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை. அசத்தலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன், அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல்…
Read Moreகார் பந்தயம் என்பது பொழுதுபோக்கு தானே தவிர,அதில் முறையாக பயிற்சி எடுக்கவில்லை- நாக சைதன்யாகார்
ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் ‘தண்டேல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மீனவ இளைஞனின் தேசபக்தி மிக்க உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த ‘தண்டேல்’ படத்திற்கு, படக்குழுவினர் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருகிறார்கள். இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தண்டேல் எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா சாய் பல்லவி கருணாகரன் ஆடுகளம் நரேன் பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சியாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரித்திருக்கிறார். எதிர்வரும் ஏழாம் தேதி அன்று உலகம் முழுவதும்…
Read Moreவிஜய் டிவி ராமர் நடிப்பில் விரைவில் ரிலீஸுக்கு தயாராகும் ‘அது வாங்குனா இது இலவசம்’
ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’. விஜய் டிவி ராமர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் S.K செந்தில் ராஜன் குறும்படம், விளம்பர படம் மற்றும் இசை ஆல்பங்கள் இயக்கிய அனுபவம் கொண்டவர். அவர் முதன்முதலாக இயக்கும் திரைப்படம் இது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி தப்பு பண்ணினால் தண்டனை ஃபிரீ என்கிற கருத்தை மையமாக வைத்து நகைச்சுவை திரைக்கதையுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இயக்குநர் செந்தில் ராஜன் கூறும்போது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி…
Read Moreதுல்கர் சல்மானின் ‘காந்தா’ பட ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் இருந்தே அவரது வித்தியாசமான கதாபாத்திரங்களும் திறமையான நடிப்பும் அவரை முன்னணி நடிகராக்கியுள்ளது. ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மகாநடி’, ‘குரூப்’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’ என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் துல்கரின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் அவரது கதைகள் தேர்வுக்கு சான்றாக உள்ளது. ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தொடர் இயக்கிய செல்வமணி செல்வராஜ் ‘காந்தா’ படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து…
Read Moreபரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..
Foot Steps Production தயாரிப்பில், இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது… Kothari Madras International Limited இப்படத்தினை இணைந்து வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம். உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்த்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ்…
Read Moreசிலம்பரசன் TR பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட #STR49, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் !!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அவரது அடுத்த படமான #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிலம்பரசன் TR திரும்பி நிற்க, “தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்” என டேக்லைன் எழுதப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போஸ்டர், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் TR ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், கல்லூரி மாணவனாக விண்டேஜ் சிலம்பரசனை, அதிரடி அவதாரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார். இப்படத்தின் மற்ற…
Read More