ஆக்காட்டி – IFFI 2025 இல் ‘சிறந்த திரைப்பட அடையாள விருது’ வென்ற தமிழ் படம்

56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில்  WAVES Film Bazaar பிரிவின் கீழ் “சிறந்த திரைப்பட அடையாள விருதை  ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது.” படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர். தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது. ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின்…

Read More

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்!

இந்த ஆண்டில் உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்! இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர். புக் மை ஷோவில் இந்த டிக்கெட் முன்பதிவு ஆர்வம் ‘அவதார்’ படத்தின் மீது இந்தியர்களின் எதிர்பார்ப்பை இன்னும் வலுவாக்கியுள்ளது.…

Read More

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நெல்சன் இருவரும் பாரத்தின் ‘நிஞ்சா’ பட டைட்டிலை வெளியிட்டனர்!

நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சூப்பர்ஹீரோ’ மற்றும் ‘நிஞ்சா’ ஆகிய படங்கள் தயாரிப்பில் பிஸியாக உள்ளார். நடிகர்கள், படக்குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை (24 நவம்பர், 2025) படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர்கள் நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் ‘சூப்பர்ஹீரோ’ பட டைட்டிலையும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் ’நிஞ்சா’ பட டைட்டிலையும் வெளியிட்டனர். ’சூப்பர்ஹீரோ’ படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,…

Read More

சினிமா பேக்டரி மாணவியின் ‘தி லாஸ்ட் பேக்கப்’ – AI Film Festival Award சாதனை

சினிமா பேக்டரி அகாடமியில் படிக்கும் மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கிய ஏஐ குறும்படம் ‘தி லாஸ்ட் பேக்கப்’ கோவா சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் தேர்வாகி, மேலும் வரலாற்றுச் சாதனையாக முதல் AI Film Festival Award–ஐ வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த சிறப்பு விருதை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் சேகர் கபூர் நேரடியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உருவான ஏஐ குறும்படம் ஒரு சர்வதேச மேடையில் இப்படியாக அங்கீகாரம் பெறுவது அரிதான சாதனை. சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘தி லாஸ்ட் பேக்கப் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவி ஸ்ரீ ரிதன்யா படம் இயக்கி உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் 3030ஆம் ஆண்டின் எதிர்கால சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட…

Read More

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன் ‘ திரைப்படத்திற்கு குவியும் வாழ்த்துகள்

லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாக் டவுன்’ திரைப்படம் – கோவாவில் நடைபெறும் 56 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சர்வதேச திரை ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் “லாக்டவுன்” திரைப்படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக…

Read More

விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி  ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த,  மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர். வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத்…

Read More

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைபாளர் மரகதமணி, ஹிந்தி நடிகர் அனுபம் கேர் , இ.வி.கணேஷ்பாபு வின் ஆநிரை குறும்படத்தைப்பார்த்து கோவா திரைப்பட விழாவில் பாராட்டு

இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக (Official) தேர்வுசெய்யப்பட்டு முதல் நாள் திரையிடலாக இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் கோவாவில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக இ.வி.கணேஷ்பாபுக்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது. இந்திய சர்வதேச திரைப்பட விழா.கோவாவில் பங்கேற்க வேண்டும். அரிதான பல படைப்புகளும், தரவுகளும், சர்வதேச சினிமா வியாபாரத்துக்கான வாய்ப்புகளும், பொக்கிஷங்களாக கொட்டிக்கிடக்கிறது இங்கே. அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம் என் வாழ்வில் அற்புதமான தருணம். இரவு பகலாக உழைத்த எனது பட்குழுவுக்கு நன்றி. ஹிந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுபம் கேர் அவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்து, படத்தின் பலகாட்சிகளிலும் கைதட்டி உற்சாகப்படுத்தினார். இந்திய சினிமாவின் ஆன்மாவை…

Read More

கதையை மையமாக கொண்ட செர்பன்ட்!!

தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) படம், நரேட்டிவ் கட் கான்செப்டில் தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான மற்றும் புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது. வழக்கமான முறைகள் மூலம் கதையை முன்வைக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளை பயன்படுத்தி படத்தின் மையக்கரு, திரைக்கதை ஓட்டம் ஆகியவற்றை காட்சி ரீதியாக தெரிவிக்க பாபி ஜார்ஜ் முயன்றுள்ளார். இது ஒரு குறும்படமோ அல்லது பைலட்டோ போல் இல்லாமல், முழு ஸ்கிரிப்ட்டிற்கான சினிமாடிக் பார்வையை வழங்குகிறது. கதை தான் மையமாக இருக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், பரிச்சயமான நடிகர்கள் அல்லது விரிவான இடங்களுக்கு பதிலாக புதிய முகங்களை…

Read More

மாஸ்க் – திரை விமர்சனம்

நகரின் மையப் பகுதியில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை நடக்கிறது.அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளுகிறார்கள். அரசியல்வாதி பவனால் ஓட்டு போடுவதற்கு மக்களுக்குக் கொடுப்பதற்கும் தேர்தல் செலவுக்குமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் அது. சிலர் நடிகர் எம் ஆர் ராதாவின் முகமூடி அணிந்து கொண்டு இந்த கொள்ளையை நடத்துகிறார்கள். கொள்ளை போன பணம் யாரிடம் இருக்கிறது என்பதை கண்டறிய தனியார் டிடெக்ட்டிவ் நபரான கவின் வருகிறார். சமூக சேவைகள் என்ற பெயரில் சமூக விரோத செயல்களைய செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார். இவர்கள் இருவரும் தீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் அவர்களும் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கிறார்கள். இவர்களில் பணம் யார் வசம் கிடைத்தது? என்று சொல்வதே ’ மாஸ்க்’ படத்தின் மீதிக்கதை. படத்தின் முதல் காட்சியில் தொடங்கும்…

Read More

நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் ‘டெக்சாஸ் டைகர்’ – சென்னையின் வண்ணமயமான பின்னணியில் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. யுகே ஸ்குவாட் பேனரின் கீழ், ‘ஃபேமிலி படம்’ புகழ் இயக்குநர் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் ‘டெக்சாஸ் டைகர்’. இளமை துள்ளலாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன் (‘ட்யூட்’, ’தக்ஸ்’, ‘பேட் கேர்ள்’, ‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’, ‘முரா’ ஆகிய திரைப்படங்கள் புகழ்) மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் (Mr. பாரத், ஐ அம் தி கேம்) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் அறிவிப்பு…

Read More