பத்திரிகையாளராக இருந்து படைப்பாளி ஆனவர் லிங்குசாமி, முதல் படத்திலேயே (ஆனந்தம்) மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இயக்கியவர். இரண்டாவது படத்தில் (ரன்) சாக்லெட் பாய் மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியவர், மூன்றாவது படத்தில் (ஜி) அஜீத்தை அதகளம் பண்ண வைத்தவர், நான்காவது படத்தில் (சண்டக்கோழி) விஷால் என்கிற துடிப்பான இளைஞரை சினிமாவிற்கு அடையாளம் காட்டியவர். பருத்தி வீரனில் கருப்பு கிராமத்து இளைஞனாக அறியப்பட்ட கார்த்தியை நோக்கி அதே மாதிரியான முரட்டு கிராமத்து கேரக்டர்கள் படையெடுத்தபோது அழகான ஆக்ஷன் ஹீரோவாக்கி, ‘பையா ‘மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இப்படி ஒவ்வொரு படமும் லிங்குசாமியின் பெயரை சினிமா சரித்திரம் பதிவு செய்து கொண்டது. இப்போது லிங்குசாமியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு பையாவின் தெலுங்கு வெர்சனான ‘ஆவரா’ நேற்று ரீ லீசானது. ஆவராவை தெலுங்கு ரசிகர்கள்…
Read Moreசாந்தி டாக்கீஸ் வழங்கும் ஃபைனலி பாரத், ஷான்வி மேக்னா நடிக்கும் ’புரொடக்ஷன் நம்பர். 4’!
தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படமான ’புரொடக்ஷன் நம்பர். 4’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல வருடங்களாக புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவித்து படங்கள் தயாரித்து வரும் இந்நிறுவனம் தமிழ் சினிமா துறையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய படங்களான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘3 BHK’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.3’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாரத் மற்றும் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன்…
Read Moreராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் & டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவான “அமரன்” IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட “அமரன்” திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க தேர்வு, “அமரன்” பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில் இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது. இதுமட்டுமின்றி, “அமரன்” திரைப்படம் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிரிவில் இடம்பெறும் சில இந்திய திரைப்படங்களில் ஒன்றாக “அமரன்” இருப்பது, அதன் கலை சிறப்பு மற்றும் சர்வதேச ஈர்ப்பை பிரதிபலிக்கிறது. IFFI 2025-இல் “அமரன்” திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் கமல்…
Read Moreகவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருப்பட திறப்பு விழாவில்
உங்களோடு பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்கு தெரியாமலோ, உங்களிடம் சொல்லாமலோ எதையும் செய்தது இல்லை. முதல் முறையாய் ஒரு இடைச்செருகலாக ஒரு தகவலை உங்களிடம் தெரிவிக்க முயல்கிறேன் மன்னிக்கவும். நான் பிக்பாஸ் நிகழ்வில் இருக்கும் போது அதில் வென்றால் எனது சொந்த கிராமத்தில் ஒரு நூலகம் கட்டுவேன் என்று சொல்லிருந்தேன் என்பது அனைவரும் அறிந்ததே. எனக்கு ஒரு பிடிவாதக்குணம் இருக்கிறது அது சரியா, தவறா என்பது எனக்கு இன்று வரை தெரியவில்லை . நாக்கும் -வாக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அந்த பிடிவாதக் குணம் ஒன்றை வாய் மொழியாக கூறினாலும் அதனை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதற்காக உழைப்பேன். பிக்பாஸ் நிகழ்வில் நான் வெல்லவில்லை என்றாலும் எப்படியாவது ஒரு நூலகத்தை என் ஊரில் கட்ட வேண்டும் என்று முயற்சித்தேன். அதுவும் பூர்விக இடத்தில்…
Read Moreஅபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல்…
Read Moreதமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களில் பொருந்திப் போவார்கள்?
‘ஜூடோபியா’ திரைப்படம் தமிழில் உருவாகும்போது உணர்வுப்பூர்வமான, ஸ்டைலிஷான அதிரடி சாகசங்களுடன் அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். ’ஜூடோபியா’ திரைப்படத்தின் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திலும் எந்தெந்த தமிழ் சினிமா நடிகர்கள் பொருந்திப் போவார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா: ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நிலையான உறுதிப்பாடு மற்றும் கருணை ஆகியவற்றை மிகச்சரியாக தன் நடிப்பில் பிரதிபலிப்பதில் திறமையானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா கதைப்படி ஜூடி தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்பட்டாலும், ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காணும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த ஒரு எளிய பெண். புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் வலிமையான உணர்வுகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. ஜூடியாக அவரது வெர்ஷன் மிகவும் தீவிரமானதாகவும், நம்பிக்கையுடன் தனது கனவு…
Read Moreஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ்…
Read Moreஇரவின் விழிகள் – திரை விமர்சனம்
யூடியுப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பிரபலமாகத் துடிக்கும் சிலர், அதில் தங்களை முன்னிறுத்த எந்த எல்லைக்கும் போய் விடுகிறார்கள். இதில் பெண்கள் தொடர்பான பாலியல் வக்கிரங்களும் உண்டு. இவர்களின் வருமானத்துக்காக தன்மானம் இழக்கும் பெண்களின் சிலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் உண்டு அப்படிப்பட்டவர்களை பட்டியலிட்டு மேலோகம் அனுப்புகிறார் ஒருவர். அவர் யார் ? இவர்களால் அவர் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டார் என்பதை திகிலும் திடுக்கிடலுமாக சொல்வதே இந்த ‘இரவின் விழிகள்’. கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் வருகிறார். மஹேந்திரன். அறிமுக நாயகன் என்ற சுவடு இல்லாமல் இயல்பான நடிப்பில் காட்சிகளில் கடந்து போகிறார். நாயகியாக நடித்திருக்கும் நீமா ராய் உயிருக்கு பயப்படும் காட்சிகளில் யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்,…
Read Moreயெல்லோ – திரை விமர்சனம்
காதல் தோல்வி, தந்தை உடல்நலக் குறைவு என்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நாயகி பூர்ணிமா ரவிக்கு மன அழுத்தத்தை கூட்டி வைக்க… மன உளைச்சலோடு மல்லுக்கட்டும் மகளை அப்படி காண சசிக்காத தந்தை, மகளின் மனநிலையில் மாற்றம் காண விரும்புகிறார். பிடித்த இடத்துக்கு சுற்றுலா சென்று வர கேட்டுக்கொள்கிறார். மகளும் அதன்படி, தன் சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடி பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவருக்கு வைபவ் முருகேசனின் அறிமுகம் கிடைக்க.. இருவரும் இணைந்து பயணத்தை தொடர்கிறார்கள். இந்த பயணம், அவர்கள் இருவரது வாழ்விலும் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்தது? நாயகி தேடிச் சென்ற நண்பர்கள் கிடைத்தார்களா? என்பதை பயணம் வழியே நம் மனம் சந்தோஷ நிறைவில் பொங்கி வழிய வழிய தருவதே இந்த ‘யெல்லோ’. யூடியுப் பிரபலமான பூர்ணிமா ரவி, சில…
Read Moreதிடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!
மும்பை, நவம்பர் 20, 2025:உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை ‘ஸ்டீபன்’ தர இருக்கிறது. தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ‘ஸ்டீபன்’ இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர்…
Read More