இசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம்  ‘அந்தோனி’ : இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு!

இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன். தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது, ” இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார். குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக…

Read More

வன்முறையும் மர்மமும் நிறைந்த  உலகம் ‘டாக்ஸிக்’ டீசர் பிப்ரவரி 20 முதல்!!

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’  படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில்  வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில்,  கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது. இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக தொடர்ந்து இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தியும், திட்டமிட்ட மார்க்கெட்டிங் உத்திகளும், ரசிகர்களின்…

Read More

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த ‘ஹாட்ஸ்பாட் 2’ தயாரிப்பாளர்கள்!

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் ‘ஹாட்ஸ்பாட் 2 ‘ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மேஜிக்கால் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் – அனில் ரெட்டி – ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர். கேஜேபி டாக்கீஸ் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் வெளியாகிறது. ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில்…

Read More

“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக…. சில படங்கள்…நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய…

Read More

யோகி பாபுவின் “கெணத்த காணோம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமா எப்போதும் நல்ல கருத்துள்ள கதைகளுடன் பிரிக்க முடியாத பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து யதார்த்தத்துடன் வேரூன்றிய படங்களைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நடிகர் யோகி பாபு, நகைச்சுவையிலிருந்து கதாநாயகன் வேடங்களுக்கு சிரமமின்றி மாறுவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார். இவை பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தன. இப்போது, அவர் “கெணத்த காணோம்” மூலம் நம்மை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப்ரவரி 19, 2025) வெளியிடப்பட்டது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா சமீபத்தில் காலமானதால், இந்த வெளியீடு முக்கியத்துவம் கொண்டுள்ளது. இவர் இயக்கிய “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் “சத்ய சோதனை” படைப்புகள் இந்திய சினிமாவில் தலைசிறந்த மைல்கற்களாக…

Read More

ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியுள்ள ‘ஜாக்கி’ மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் என இயக்குநர் பெருமிதம்

மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவான திரைப்படம் ‘ஜாக்கி’. கடந்த ஜனவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கியுள்ள‌ ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் ஆகும். மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் இப்படம் திகழ்கிறது. ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை ஜாக்கி அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய இயக்குநர் டாக்டர் பிரகபல், “இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் சில தினங்களை கடப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால்…

Read More

அச்சுத அவதாரம் – ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது!!

  சைபர் த்ரில்லர் திரைப்படமான அச்சுத அவதாரம் – ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார். இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும்; மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது. புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிறார். அச்சுத அவதாரம் படத் தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் பல சவால்களை சந்தித்த பிறகு, தன் மனதில் இருந்த கதையை எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அழகாக படத்தில் சொல்லியிருக்கிறார். உலகளாவிய சைபர் மோசடிகளின் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்ட இந்த கதை . இதன் தனித்துவம் என்னவென்றால், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய, பாரம்பரிய கிராமத்தை பின்னணியாகக் கொண்டது. உயர் தொழில்நுட்ப…

Read More

“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது.., எல்லாருக்கும் வணக்கம். எங்களின் 4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது. நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம். இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம். அந்த விஷயத்தில் இந்த படம்…

Read More

“ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் சிங்கிள் “ஆடினே இருப்பேன்” வெளியீடு – இளமையான மற்றும் உற்சாகத்தின் வண்ணமயமான கொண்டாட்டம்!

Happy Raj திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் முதல் சிங்கிளான “ஆடினே இருப்பேன்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இளைஞர்களின் கொண்டாட்ட உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் இந்த உற்சாகமான மற்றும் ஆற்றல் மிகுந்த நடனப் பாடல், படத்தின் மகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. படத்தின் புரோமோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும், படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததையும் தொடர்ந்து, இளைஞர்களின் நடன கீதமாக மாறவுள்ள ஒரு பாடலை இப்போது ரசிகர்களிடம் கொண்டு வந்துள்ளது படக்குழு. G. V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் புதுமையான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் “ஆடினே இருப்பேன்” பாடலில் நடனமாடி உள்ளனர். உயிரோட்டமிக்க மற்றும் சுறுசுறுப்பான சூழலில் இவர்களின் நடன அசைவுகளை பார்க்கும் பொழுது அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி, ஆற்றல்மிகு நடிப்பு மற்றும் அன்னிச்சையான நடன அசைவுகள் பாடலுக்கு தனித்துவமான கவர்ச்சியை அளிக்கின்றன. பெங்களூரு நகரின்…

Read More