இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த…
Read Moreபிப்ரவரி 2026 – ரோட்டர்டாம், IFFR 2026 இல் NETPAC விருதுக்கு மயிலா பரிந்துரை!
செம்மலர் அன்னம் இயக்கத்தில், நியூட்டன் சினிமா தயாரிப்பில் உருவான மயிலா, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) யில் NETPAC விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் தொடக்கத்தில் ரோட்டர்டாமில் உலக சினிமா திரையிடலைப் பெற்ற இந்தத் திரைப்படம், ஆசிய சினிமாவை மேம்படுத்தும் நெட்பேக் (Network for the Promotion of Asian Cinema – NETPAC) வழங்கும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளது. படைப்பாற்றல், பண்பாட்டு ஆழம் மற்றும் திரைப்படக் கலைச் சிறப்பை பிரதிபலிக்கும் சிறந்த ஆசிய திரைப்படங்களை NETPAC விருது கௌரவிக்கிறது. ஒரு இளம் பணிபுரியும் பெண்ணின் மரியாதை மற்றும் சுயாதீனத்தை நோக்கிய பயணத்தை நெருக்கமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கும் இந்தத் திரைப்படம், ரோட்டர்டாமில் நடைபெற்ற அதன் திரையிடலில், படம் பார்த்த பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டுகளை பெற்றது. இந்தப் பரிந்துரை, மயிலா திரைப்படத்தின் சர்வதேச திரைப்பட…
Read Moreசரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி முதல்…
Read Moreரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில், பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., மை லார்ட் ரசிகர்களுக்கு ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும். ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல…
Read Moreநடிகர் விஜய் விஷ்வா வின் VV ENTERTAIANMENTS உடன் CRETAI MADURAI க்ளீன் மதுரை” உலக சாதனை முயற்சியில் 2000+ மாணவர்கள் பங்கேற்பு – மதுரையில் இது ஒர் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு
மதுரையை சுத்தமான மற்றும் பசுமையான நகரமாக மாற்றும் நோக்கில், கிரெடாய் மதுரை (CREDAI Madurai), VV எண்டர்டெயின்மென்ட்ஸ் உடன் இணைந்து, Grand Universe Book of Records ஆதரவுடன் “க்ளீன் மதுரை” என்ற உலக சாதனை முயற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 31 ஜனவரி 2026 தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. நடிகர் விஜய் விஸ்வா தலைமையிலான VV எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம், இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் உருவ வரைபட மனித சங்கிலி உலக சாதனை, தற்காப்பு கலைகளில் அதிகமான மாணவர்கள் பங்கேற்றதற்கான உலக சாதனை, மதுரை சித்திரை திருவிழாவில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் சாமி வேடம் அணிந்து பங்கேற்றதற்கான உலக சாதனை மற்றும் “Stop Violence Against Women” உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, VV எண்டர்டெயின்மென்ட்ஸ் புதிய முயற்சியாக க்ளீன்…
Read Moreபிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் ‘மின்னலே’ படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்*
சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் – ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மின்னலே’. கடந்த தசாப்தங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆவது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் மாதவன் – கௌதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான ‘மின்னலே ‘ திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார். மின்னலே – இந்த திரைப்படத்தின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமானார் என்பதும், ‘அலைபாயுதே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மாதவன் நடித்த…
Read Moreபிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘HALF: The Chronicles of Two Half-Blooded Vampires’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டரை வெளியிட்டது!
பிரம்மாண்டமான த்ரில்லர் வேம்பயர் கதைக்காக ’கோலம்’ படஅணியினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கதையில் நடிகர்கள் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கொரியோகிராபியை ஹாலிவுட் ஸ்டண்ட் எக்ஸ்பர்ட் வெரி ட்ரை யூலிஸ்மேன் கவனிக்கிறார். பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேம்பயர் த்ரில்லர் திரைப்படமான ‘HALF’-ன் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. ‘பிரணயம்’, ‘பரிவார்’, ‘கோலம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அன்னே சஞ்சீவ் மற்றும் சஞ்சீவ் பிகே இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ’கோலம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சம்ஜத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வேம்பயர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அடையாளம்,…
Read More“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”. இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது.., நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும்…
Read Moreபிப்ரவரி இம்மாதம் 27ஆம் தேதி திரையில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” !!
MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “4த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இன்று வெளியிட்டனர். இன்று வெளியான டிரெய்லர் ஆரம்ப கட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டுகிறது. ஹாரர் படம் என்று நினைக்கையில் அப்படியே தடம் மாறி, கொலைகளை அதன் விசாரணைகளைக் காட்டி ஒரு அசத்தலான திரில்லர் அனுபவமாக நிறைவு பெறுகிறது. கனவு, கொலைகள், விசாரணை என வெவ்வேறு பாதைகளில் கதை பயணிக்கிறது.…
Read Moreஇயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’ திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்
அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகராக அதர்வா முரளி அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் பாராட்டப்பட்ட ‘DNA’ திரைப்படத்திலும், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் அதர்வாவின் திறமையான நடிப்பு பாராட்டப்பட்டது. இப்போது, முதல் முறையாக ‘வலை’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார் அதர்வா முரளி. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ’நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் குறித்து இயக்குநர் ஜீவா சங்கர் கூறுகையில், “ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் சரா மற்றும் குட்டி என இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மீனவர் சமூகத்தின்…
Read More