தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்க மோதிரம் பரிசளித்து கௌரவித்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர்

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா. தூய்மை பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தி.நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கேட்பாரற்று சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை அடங்கிய பையை கண்டதும் அவற்றை அருகில் இருந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நகைக்கு உரியவரிடம் அந்த நகையும் பத்திரமாக சேர்க்கப்பட்டது. இந்த நிகழ்வை தொடர்ந்து தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் பத்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவை தனது இல்லத்திற்கே அழைத்து அவரை பாராட்டியதுடன் தங்க சங்கிலி அணிவித்து அவரை கௌரவித்தார். இந்த நிலையில் தற்போது கடல் தாண்டி பணியாளர் பத்மாவின் நேர்மைக்கான…

Read More

மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1

Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில், மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி  நடிக்கும் படம் புரொடக்ஷன் நம்பர் 1. இயக்குனர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில், ஆ.வெங்கடேஷ், அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புதுவிதமான கதைகளம், சுவாரஸ்யமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, ஆக்ஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ். இப்படத்தில் மணிகண்டன் செல்வராஜ் நாயகனாக நடிக்க, இயக்குனரும், நடிகருமான ஆ.வெங்கடேஷ் திருப்புமுனை பாத்திரத்தில்…

Read More

ரசிகர்களுக்கு பிடித்த வகையிலும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ந்து தரமான படங்கள் தயாரிப்பதை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய நிறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்படியான நடிகர்களை திரையில் கொண்டு வருவது ஆகியவற்றோடு. சமூகத்தை பிரதிபலிக்கும் நல்ல கதைகளை திரைக்கு கொண்டு வருவதையும் முன்னிலைப்படுத்தி ரெளடி பிக்சர்ஸ் இயங்கி வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கெளரவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற கூழாங்கல் (Pebbles) திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. அதே ஆண்டில் இந்த திரைப்படத்தில் நடித்த செல்லபாண்டி. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார். படத்தின் வலுவான உணர்வுகளையும், எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமலும் இந்தக் கதையை…

Read More

ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’  வரும்  பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது !!

இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான “பராசக்தி” திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது. 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலகட்டத்தின் முக்கிய இயக்கத்தில் இழுத்துச் செல்லப்படும் இரண்டு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான கதையை சொல்லுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கைநிலையுள்ள இளைஞரான செழியன்…

Read More

45 சவரன் தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவிற்கு புதிய காலணிகள் அணிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கி மாணவிகள் முன்னிலையில் புடவை வழங்கிய பார்த்திபன்

பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பத்மா, சமீபத்தில் தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவர்களிடம் அவை சேர உதவி புரிந்தார். பத்மாவை தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மத்திய அரசு பத்மாவை கௌரவிக்கும் நோக்கில் தபால் தலையை வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவை அவரது இல்லத்திற்கு வரவழைத்து தங்க சங்கிலி பரிசளித்துள்ளார். இந்நிலையில் புதுமைகளின் புகலிடமாக விளங்கும் இயக்குநரும் நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தூய்மை பணியாளர் பத்மாவை எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கு அழைத்து சென்று கௌரவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்த நிலையில் விருந்தினராக நானும் சிறப்பு விருந்தினராக பத்மா அவர்களும் கலந்து கொண்டால் என்ன என்று…

Read More

பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லீடர்’ திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்தா ஐயர், வி டி வி கணேஷ், பேபி இயல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கையாண்டிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும்…

Read More

லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘லீடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது!!

‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள R.S. துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் கதை குறித்து விவரித்த படக்குழுவினர், “நிழல் உலகத்திற்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொண்டு தப்பிக்கிறான் என்பதே லீடர்,” என்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று சென்னையில் நிறைவுற்றது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இப்படம் இருக்கும். ‘லீடர்’ படத்தில்…

Read More

பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ்  (vintage)தோற்றம் வெளியானது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ்  கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ்  தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. கன்னட திரைப்படமான ‘முகில்பேட் ‘ ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ எனும் தமிழ் திரைப்படம் – அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பள்ளிச்சட்டம்பி – கயாடு லோஹரின்…

Read More

‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி அறிமுக விழா!!

கலைமாமணி மதுரை R. முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை–நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது. இந்த மேடை நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று ஒரு அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கலைமாமணி மதுரை R.…

Read More

‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  !

இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்,இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க,இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த ‘ரெட் லேபில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. *நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள  லெனின் பேசும் போது,* “நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன்.சினிமா விலும் அதைப் பின்பற்ற நினைத்தேன்.சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரையை தேர்வு செய்தேன்.எதையும் முறைப்படி செய்ய…

Read More