’திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த…

Read More

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு & அறிமுக விழா

‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் முருகன், ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற  தொடர்.. தற்போது’ சங்காரம்’ எனும் நூலாக தயாராகி இருக்கிறது.‌ வன்முறையும், பேரன்பும் கொண்ட கதை மாந்தர்களால் நிரம்பிய இந்த நாவலின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் தங்களது…

Read More

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளர் தீபக் ரவி தயாரித்திருக்கிறார்கள். ஜனவரி 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு ஜாக்கி, நடிகர்கள்…

Read More

தி ராஜாசாப்- விமர்சனம்

ஒரு ஆக்சன் திரில்லரில் ஹாரரைச் சேர்த்து படமாக்கியுள்ளார் இயக்குநர் மாருதி. படத்தின் கதைப்படி ஹீரோ பிரபாஸின் தாத்தாவான சஞ்சய் தத் காணாமல் போகிறார். அதனால் அவரின் பாட்டி மிகுந்த சோர்விலிருக்கிறார். பெரும் சமஸ்தானத்தின் வாரிசாக வாழ்ந்த தனது பாட்டியின் சோகத்தைப் போக்க பிரபாஸ் தாத்தாவைத் தேடிச் செல்கிறார். செல்லும் இடத்தில் நிதி அகர்வாலைச் சந்திக்கிறார்..அவர் மேல் காதல் கொள்கிறார். அடுத்த ட்விஸ்டாக தாத்தா சஞ்சய் தத் நல்லவர் இல்லை என்றும் அவர் பேயாக இருந்து தொல்லைகள் கொடுப்பதாகவும் அறிகிறார் பிரபாஸ். அதன்பின் தாத்தா பேரன் சண்டை துவங்குகிறது. தாத்தாவான சஞ்சய் தத் என்னென்ன பிரச்சனைகள் செய்தார் என்பதும், அதை பிரபாஸ் எப்படிச் சமாளித்தார் என்பதுமே படத்தின் கதை ஆஜானுபாகுவான தோற்றத்தோடு வழக்கம் போல் வசீகரிக்கிறார் பிரபாஸ். சண்டைக்காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். மூன்று ஹீரோயின்களோடு ஆடும் நடனத்திலும்…

Read More

பராசக்தி- விமர்சனம்!

1964 கால கட்டத்தில் உச்சத்திலிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் மையக்கதை என்றாலும் சினிமாவிற்காக அந்தக் கதையை கமர்சியலாக கையாண்டுள்ளார் இயக்குநர். கதைப்படி சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் புறநானுற்றுப் படையின் முக்கியஸ்தர். அவரை ஒடுக்கும் அதிகாரியாக ரவிமோகன் வருகிறார். பர்சனலாக சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். அந்த இழப்பின் காரணமாக சிவகார்த்திகேயன் போராட்டக்களத்திலிருந்து பின் வாங்குகிறார். அதன்பின் அவரது தம்பி போராட்டத்தை கையிலெடுத்து இறந்து போகிறார். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் வெகுண்டெழுகிறார். போராட்டத்தில் வெற்றியடைந்தாரா? என்பதே பரபரப்பான பராசக்தி இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் போராளியை சிவகார்த்திகேயன் கண்முன் நிறுத்துகிறார். அவரின் அபார நடிப்பு படத்திற்கு யானை பலம். ரவிமோகன் வில்லனத்தில் புதிய மைல்கல்லை…

Read More

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறது. Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர் ‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் முக்கிய…

Read More

திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1”   தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !!

“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக  “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1”  திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்”   விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில்…

Read More

படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை தொழில்நுட்பத்துடன் கலந்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து வல்லுநர்கள் விளக்கம‌ளித்தனர்

ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) அன்று நடத்தின. கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் இது நடைபெற்றது. திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் கலந்து திரைப்படத் துறையில் புதிய‌ உயரங்களை எட்டுவது குறித்து விளக்கம‌ளித்தனர். இந்நிகழ்வில், தொழில்நுட்பம் படைப்பாற்றலுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து சிங்கப்பூரை சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர். விவேகா காளிதாசன் உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, மற்றும்…

Read More

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘அல்லு சினிமா’ஸூக்காக சிறப்பு விளம்பர படத்தை படமாக்கியுள்ளார்!

அல்லு சினிமாஸ் நிறுவனத்திற்காக உருவாகும் சிறப்பு விளம்பர படத்தின் படப்பிடிப்பை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் கௌதம் நாயுடு இயக்கியுள்ளார். உயர்தரமான சினிமா தரத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள அல்லு சினிமாஸ் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக இந்த விளம்பர படம் அமைந்துள்ளது. நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை, பிரம்மாண்டம் மற்றும் தரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பர படம் தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக வெளியிடப்பட உள்ளது. அல்லு அர்ஜுனின் வலுவான திரை இருப்பும், அவருடைய ஸ்டைலும் இந்த விளம்பர படத்தில் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

Read More

தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) போட்டியில் அதிகாரப்பூர்வ நுழைவு!

இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) நாமினேஷன் புராசெஸில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருக்கும் ‘கெவி’ இனி வெளியாக இருக்கும் பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் முன்மாதிரியாக மாறியுள்ளது. தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆர்ட்அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவான ’கெவி’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கடினமான இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு, கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் தம்பதியின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம் மற்றும் நீதிக்கான போராட்டத்தை இந்த படம் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியது. படத்தில் ஆதவன் மற்றும் ஷீலா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜாக்குலின் லிடியா, ஜீவா சுப்ரமணியன்,…

Read More