தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 10, 2026 அன்று) வெளியாக உள்ள ’பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி தனது அனுபவங்களை சிவகார்த்திகேயன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார், “’பராசக்தி’ கதையுடன் சுதா கொங்காரா என்னை அணுகியபோது கலவையான உணர்வுகள் எனக்குள் இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும், அவரது அற்புதமான திரைக்கதைக்கு நான் நியாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகினேன். என்…
Read Moreஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ | வெளியீட்டு தேதி அறிவிப்பு
குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நீலிமா குணா – யுக்தா குணா ஆகியோர் தயாரித்துள்ளனர். நவீன சமூகச் சிந்தனைகளை மையமாகக் கொண்ட ஒரு Contemporary Social Drama ஆக உருவாகியுள்ள ‘யூஃபோரியா’, சமூகத்தில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மைச் சவால்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் கதையுடன், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஒருசேர கவரும் வகையில் தனித்துவமான கருத்தில் உருவாகியுள்ளது. மேலும், இன்றைய இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கிடையேயான உறவுகள், புரிதல்கள்,…
Read More“’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும்”- இயக்குநர் சுதா கொங்கரா!
இயக்குநர் மணி ரத்னத்தின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவரான இயக்குநர் சுதா கொங்கரா, தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவை தொடர்ந்து உயர்த்தியுள்ளார். அந்தவகையில், அவரது வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டான் பிக்சர்ஸ், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 10, 2026 அன்று வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது மிகவும் சவாலானதும் என்றும் படம் வெளியானதும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்றும், பலர் எச்சரித்தனர். இருப்பினும், மணி ரத்னம்…
Read Moreதங்கம் & வெள்ளியில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 108 முருகன் வேல்கள் !!
புகழ்பெற்ற நகை வியாபாரியும், ஆன்மீகத் தொலைநோக்காளருமான, மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா, “108 தெய்வீக மகாவேல்” என்ற உலகின் முதல் முயற்சியாக, முருகப்பெருமானின் 108 தனித்துவமான, ஆய்வுசெய்யப்பட்ட வேல்களை தங்கம் மற்றும் வெள்ளியில் உருவாக்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட, இந்த அபூர்வமான ஆன்மீக–கலை முயற்சியை, பொன் மற்றும் வெள்ளியில் உருவாக்கப்பட்ட 108 மகாவேல்கள் ஒரே இடத்தில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, இன்று தனியார் அரங்கில் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஐசரி K கணேஷ் வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, 108 பொன் வேல்களின் திருவிழாவை துவக்கி வைத்தார். மேலும், A2B (Adyar Ananda Bhavan) நிறுவனத்தின் மேலாண்மை…
Read Moreவெற்றிமாறன் & மாரி செல்வராஜ் படங்களில் நடிக்க ஆசை – நடிகை ஐஸ்வர்யா KS !!
நடிகை ஐஸ்வர்யா KS, சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில், கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிறுவயது முதலே நடனம் கற்றுக் கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா KS, விளையாட்டிலும் தன் திறமையை நிரூபித்தவர். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடிய வீராங்கனையாக இருந்த அவர், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ளார். இந்த விளையாட்டு பின்னணியே, அவரது திரை நடிப்பில் காணப்படும் தன்னம்பிக்கை மற்றும் உறுதியான உடல் மொழிக்கு காரணமாக அமைந்துள்ளது. கோவிட் காலத்தில் கிடைத்த ஒரு குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.…
Read More‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’) !!’ ‘டாக்ஸிக்’ (Toxic)பிறந்தநாள் வெளியீட்டில் ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை
யாஷ் தான் ராயா (Raya).ஒரு மிரட்டலான ‘டாக்ஸிக்’ பிறந்தநாள் வெளியீட்டின் மூலம் ‘ ‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’)! ‘ என்ற முழக்கம் எதிரொலிக்கிறது. ‘ ‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’)!!’ யாஷ்ஷின் பிறந்தநாளில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா (Raya) கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். ரசிகர்கள்…
Read More“என்னுடைய சினிமா கரியரில் மறக்க முடியாத கனவு கதாபாத்திரத்தை ‘பராசக்தி’ திரைப்படம் கொடுத்துள்ளது”- நடிகை ஸ்ரீலீலா!
வசீகரமான தோற்றம், திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான நடனம் என பான் இந்திய ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவரது வலுவான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் குறித்தான தனது மகிழ்வான அனுபவங்களை ஸ்ரீலீலா பகிர்ந்து கொண்டுள்ளார். ”’பராசக்தி’ திரைப்படம் எனக்கு ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை மறக்க முடியாத பல அழகான நினைவுகளையும் பரிசளித்துள்ளது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் எல்லோரும் மகிழ்வுடன் பணியாற்றினோம். என் சினிமா கரியரில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்ததற்காகவும் என் மீது வைத்த நம்பிக்கைக்கும் இயக்குநர் சுதா கொங்கரா மேடத்திற்கு நன்றி” என்றார். மேலும், “சிவகார்த்திகேயன் சாரின் வெற்றி வெறும்…
Read Moreஅனலி – திரை விமர்சனம்
நாயகி சிந்தியா லூர்டே தனது 10 வயது மகளுடன் தனது தோழியை சந்திக்க ஊரிலிருந்து சென்னை வருகிறார். தோழியின் வீட்டுக்கு கோயம்பேட்டில் இருந்து ஆட்டோவில் புறப்படுபவர், ஆட்டோ டிரைவர் செய்த குளறுபடியால் நகரின் ஒதுக்குப்புறத்தில் சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்யும் சக்திவாசுவின் வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அந்த கும்பல் நடத்திய அதிரடி தாக்குதலில் மகளை தொலைத்து விடுகிறார். அதோடு கையோட கொண்டு வந்த விலைமதிப்பற்ற கைப்பை ஒன்றையும் மிஸ் செய்து விடுகிறார். இப்போது அவர் வெளியே எங்கேயும் போக முடியாது. மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடிக்க வேண்டும். மகளுக்கு நிகரான அந்த கைப்பையையும் கண்டுபிடித்தாக வேண்டும். இரண்டும் அவருக்கு சாத்தியமானதா என்பதற்கு பதில் சொல்கிறது பரபரப்பான கிளைமாக்ஸ். ஹீரோயினாக ‘அனலி’ என்ற…
Read More‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்
நடிகை பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா,ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார்.…
Read MoreBeyond Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு..!
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ப்ரோமோவுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்; அதே உற்சாகத்துடன் திரைக்கு கொண்டு வருவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். Beyond Pictures நிறுவனத்திற்காக ஜெயவர்தன் தயாரித்துள்ள இந்தப் படம், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகும் (Production No.1). அது அனைத்து வயதினரையும் கவரும் ஒரு முழுமையான ‘ஃபீல்-குட்’ பொழுதுபோக்கு படமாக ‘ஹேப்பி ராஜ்’ உருவாக்கப்பட்டுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், நம்பிக்கை, மென்மையான உணர்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டாடக்கூடிய தருணங்களை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட நேரப்படி.. குறித்த காலப் படி.. படப்பிடிப்பு சீரும் சிறப்புமாக நிறைவடைந்தது. நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம்…
Read More