மறைந்த புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் மகிமையை சொல்லும் திரைப்படமாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உருவாக்கி இருக்கிறார். ஐந்து பக்தர்களின் குடும்பங்கள்… ஜெகபதிபாபு.. ஒய் ஜி மகேந்திரன்… சுகாசினி.. அபிராமி.. ஒரு வெளிநாட்டுக்காரர்.. உள்ளிட்டவர்களின் வாழ்வில் நடந்த துயர சம்பவங்கள்.. அந்த சமயத்தில் அவர்களின் பிரச்சனை எப்படி சாய்பாபா தீர்த்து வைத்து அவர்களுக்கு அருளாசி வழங்கினார் என்பதை ஒவ்வொருவரும் நெகிழ்ச்சியாக சொல்கின்றனர்.. நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, சுஹாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம்.. பக்தியுடன் பயத்துடன் பதட்டத்துடன் என ஒவ்வொருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் கவர்கின்றனர்.. பக்தர்கள் வாழ்வில் சந்தித்த துயரங்கள் அவருக்கு கடவுள் போன்ற சாய்பாபாவின் அருள் எப்படி கிடைத்தது என்பதை காட்சியாக நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.. கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் பக்தி படமாக இருந்தாலும்…
Read MoreCategory: விமர்சனம்
வா வாத்தியார் திரை விமர்சனம்…
எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரன்.. 1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் மரணமடையும் அதே நேரத்தில் இவருக்கு கார்த்தி (பேரன்) பிறக்கிறார்.. எனவே எம்ஜிஆரின் ஆத்மா தான் தற்போது தனக்கு பேரனாக கிடைத்திருக்கிறார் என்ன நெகிழும் ராஜ்கிரன் அவரை ஒரு எம்ஜிஆர் ரசிகராகவே வளர்த்து வருகிறார்… கார்த்தி சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் அவருக்கு லாட்டரியில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கிறது.. இதை தாத்தாவிடம் கொண்டு செல்கிறார் கார்த்தி.. ஆனால் ராஜ்கிரனோ இது உழைப்பால் கிடைத்த பரிசு அல்ல.. இது உழைக்காமல் கிடைக்கும் பணத்தை நான் எடுக்க மாட்டேன் என வாத்தியார் சொல் படி தான் நடப்பேன் என மறுக்கிறார் ராஜ்கிரண்.. இதனை எடுத்து கார்த்தி கடுப்பாகிறார்.. எனவே தன்னுடைய வழியை எம்ஜிஆர் வழி இல்லாமல் நம்பியார் வழிக்கு மாற்றுகிறார் ஒரு கட்டத்தில் இவர்…
Read Moreதி ராஜாசாப்- விமர்சனம்
ஒரு ஆக்சன் திரில்லரில் ஹாரரைச் சேர்த்து படமாக்கியுள்ளார் இயக்குநர் மாருதி. படத்தின் கதைப்படி ஹீரோ பிரபாஸின் தாத்தாவான சஞ்சய் தத் காணாமல் போகிறார். அதனால் அவரின் பாட்டி மிகுந்த சோர்விலிருக்கிறார். பெரும் சமஸ்தானத்தின் வாரிசாக வாழ்ந்த தனது பாட்டியின் சோகத்தைப் போக்க பிரபாஸ் தாத்தாவைத் தேடிச் செல்கிறார். செல்லும் இடத்தில் நிதி அகர்வாலைச் சந்திக்கிறார்..அவர் மேல் காதல் கொள்கிறார். அடுத்த ட்விஸ்டாக தாத்தா சஞ்சய் தத் நல்லவர் இல்லை என்றும் அவர் பேயாக இருந்து தொல்லைகள் கொடுப்பதாகவும் அறிகிறார் பிரபாஸ். அதன்பின் தாத்தா பேரன் சண்டை துவங்குகிறது. தாத்தாவான சஞ்சய் தத் என்னென்ன பிரச்சனைகள் செய்தார் என்பதும், அதை பிரபாஸ் எப்படிச் சமாளித்தார் என்பதுமே படத்தின் கதை ஆஜானுபாகுவான தோற்றத்தோடு வழக்கம் போல் வசீகரிக்கிறார் பிரபாஸ். சண்டைக்காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். மூன்று ஹீரோயின்களோடு ஆடும் நடனத்திலும்…
Read Moreபராசக்தி- விமர்சனம்!
1964 கால கட்டத்தில் உச்சத்திலிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் மையக்கதை என்றாலும் சினிமாவிற்காக அந்தக் கதையை கமர்சியலாக கையாண்டுள்ளார் இயக்குநர். கதைப்படி சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் புறநானுற்றுப் படையின் முக்கியஸ்தர். அவரை ஒடுக்கும் அதிகாரியாக ரவிமோகன் வருகிறார். பர்சனலாக சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். அந்த இழப்பின் காரணமாக சிவகார்த்திகேயன் போராட்டக்களத்திலிருந்து பின் வாங்குகிறார். அதன்பின் அவரது தம்பி போராட்டத்தை கையிலெடுத்து இறந்து போகிறார். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் வெகுண்டெழுகிறார். போராட்டத்தில் வெற்றியடைந்தாரா? என்பதே பரபரப்பான பராசக்தி இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் போராளியை சிவகார்த்திகேயன் கண்முன் நிறுத்துகிறார். அவரின் அபார நடிப்பு படத்திற்கு யானை பலம். ரவிமோகன் வில்லனத்தில் புதிய மைல்கல்லை…
Read Moreஅனலி – திரை விமர்சனம்
நாயகி சிந்தியா லூர்டே தனது 10 வயது மகளுடன் தனது தோழியை சந்திக்க ஊரிலிருந்து சென்னை வருகிறார். தோழியின் வீட்டுக்கு கோயம்பேட்டில் இருந்து ஆட்டோவில் புறப்படுபவர், ஆட்டோ டிரைவர் செய்த குளறுபடியால் நகரின் ஒதுக்குப்புறத்தில் சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்யும் சக்திவாசுவின் வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அந்த கும்பல் நடத்திய அதிரடி தாக்குதலில் மகளை தொலைத்து விடுகிறார். அதோடு கையோட கொண்டு வந்த விலைமதிப்பற்ற கைப்பை ஒன்றையும் மிஸ் செய்து விடுகிறார். இப்போது அவர் வெளியே எங்கேயும் போக முடியாது. மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடிக்க வேண்டும். மகளுக்கு நிகரான அந்த கைப்பையையும் கண்டுபிடித்தாக வேண்டும். இரண்டும் அவருக்கு சாத்தியமானதா என்பதற்கு பதில் சொல்கிறது பரபரப்பான கிளைமாக்ஸ். ஹீரோயினாக ‘அனலி’ என்ற…
Read Moreமார்க் – திரைவிமர்சனம்
முதலமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். கட்சித் தலைமை அனுபவம் ஆற்றல் வாய்ந்த சீனியர் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க, இறந்து போன முதலமைச்சரின் மகனோ, ‘நாளை நானே முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும்’ என்கிறார், அதிரடி பிளஸ் அடாவடியாக. எதிர்த்து கேட்பவர்களின் வாயை பணத்தால் அடைக்கிறார். இதே நாளில் 16 சிறுவர்கள் கடத்தப் படுகிறார்கள். அவர்களை மீட்பதற்கு காவல்துறையில் இடைநீக்கம் செய்யப்பட்ட சுதீப் போராடுகிறார். அவரிடம் முதலமைச்சரின் கொலைக்கு ஆதாரமான வீடியோ இருக்கும் தகவல் சொல்லப்பட்டு, அதைத் தேடி கண்டுபிடிக்கும் பணியும் தரப்படுகிறது. ஒரு பக்கம் கடத்தப்பட்ட குழந்தைகளையும் மறுபக்கம் முக்கியமான ஆதாரமான வீடியோவையும் தேடி சாகச பயணம் மேற்கொள்கிறார் கிச்சா சுதீப். இந்த இரண்டு சம்பவங்கள் இடையிலான தொடர்பையும் கண்டு பிடிக்கும் கிச்சா, அதில்…
Read Moreசல்லியர்கள் – திரை விமர்சனம்
விடுதலைப் புலிகளின் மருத்துவ அணிக்குத்தான் சல்லியர்கள் என்று பெயர். போர் சமயத்தில் காயம் பட்ட வீரர்களை காப்பாற்றும் மருத்துவர்களின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது இந்த சல்லியர்கள். இந்தப் போரில் குண்டடி பட்டு உயிருக்கு போராடும் விடுதலை புலிகளை மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்றினர் என்பது தான் மனிதநேயத்தின் மகத்துவம் சொல்லும் வரலாறு. இப்படி உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது ஆளும் அரசின் அதிகாரப்பார்வை விழுகிறது. அவர்களை அழிக்க முயல்கிறது.அந்தத் தாக்குதல்களை மருத்துவமனை சல்லியர்கள் குழு எப்படி எதிர்கொண்டது என்பது கிளைமாக்ஸ். சிங்களப் படையை எதிர்த்து போரிடும் புலிகள் காயமடைந்தால், அவர்களுக்கு மருத்துவம் செய்ய போர்க்களத்தில் பதுங்குகுழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.அப்படி அமைக்கப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி,ஓய்வு ஒழிச்சலின்றி அதே நேரம் கொஞ்சமும் சலிப்பின்றி…
Read Moreடியர் ரதி – திரை விமர்சனம்
ஐடியில் வேலை பார்க்கும் நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசி பழகுவதில் ஒருவித தயக்கம். எந்த பெண்ணிடமாவது பேச முயன்றால் அவருக்கே உரிய கூச்ச சுபாவம் குறுக்கே வந்து தடை பண்ணி விடும். இப்படி பயந்த சுபாவம் கொண்டதாலோ என்னவோ அவரை தேடி வந்த 2 காதல் கூட பிரேக் அப்பில் முடிகிறது. இப்படி இரண்டு காதல் கைவிட்டு போனதில் விரக்தியின் எல்லைக்கே போய் விடுகிறார். பெண்களிடம் அவருக்கு இருக்கும் இப்படியான கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக அவரது அலுவலக நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு முதன் முதலாக கூச்ச சுபாவம் விலகி நட்பு பாராட்ட தோன்றுகிறது. அதனால், அந்தப் பெண்ணுடன் நட்பை தொடர விரும்புபவர், அவருடன்…
Read Moreதி பெட் – திரைப்பட விமர்சனம்
நாம் தூங்க பயன்படுத்தும் ஒரு பெட் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பெட் கதை சொல்வது போல் படத்தை ஆரம்பிக்கிறார்கள். ஸ்ரீகாந்த்,அவரது நண்பர்கள் குழு வீக் எண்ட் கொண்டாட்டம் என்ற பெயரில் அந்த வார விடுமுறைக்கு ஊட்டிக்கு சென்று வர திட்டமிடுகிறார்கள். .அவர்களுடன் பாலியல் தொழிலாளி சிருஷ்டி டாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அறை எடுத்து தங்குகிறார்கள் மதுவருந்தி போதை தலைக்கேறிய நேரத்தில் சிருஷ்டி டாங்கே மீது நண்பர்கள் காமப் பார்வை வீச,நாயகன் ஸ்ரீகாந்த் மட்டும் காதல் பார்வை வீசுகிறார். அவரை அடைய நண்பர்கள் தவிக்க, ஸ்ரீகாந்த் யாரும் தொட முடியாதபடி அவர்களை போதையில் தூங்க போட்டு விடுகிறார். இந்நிலையில் திடீரென்று சிருஷ்டி காணாமல் போகிறார். உடன் வந்த நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போக… கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை இந்த…
Read Moreசிறை – திரைப்பட விமர்சனம்
கொலைக் குற்றவாளியாக கருதப்படும் இளைஞன் அப்துல் ரவூப் ஐந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாகவே இருக்கிறார். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது வழக்கம்போல வாய்தா போட்டு விடுவார்கள். இப்படி 5 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் தொடர் வாய்தாக்கள் அவரை விசாரணைக் கைதியாகவே வைத்திருக்கிறது. இந்த அப்துலுக்கும் கனவுகள் உண்டு. கண்ணான ஒரு காதலி உண்டு. ஒரு இரவில் தன் தாயை தாக்க வந்தவரை அப்துல் ஆவேசமாய் தள்ளிவிட, அவர் தலை கல்லில் நொறுங்கி உயிர் போய் விட… இந்த மோதலில் அப்துல் தாயும் மரணிக்க , இனி அவனுக்கென்று இருப்பது காதல் நிறைந்த உயிர்க் காதலி தான். காதலியின் தந்தை தான் இங்கே கொலை செய்யப்பட்டவர். கொலையாளி இந்த அப்துல் ரவூப். வழக்கம்போல விசாரணை கைதிகளை கோர்ட்டில்…
Read More
