கொம்பு சீவி – திரை விமர்சனம்

வைகை அணை கட்டியதால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த நாயகன் சண்முகபாண்டியன், ஊர்ப் பெரியமனிதராக வலம் வரும் சரத்குமாரின் அன்புக்கு பாத்திரமாகிறார். விசுவாச அடியாள் மாதிரி அவர் கூடவே இருக்கிறார். போகப்போக இருவரும் மாமா- மருமகன் என்று உறவு கொண்டாடும் அளவுக்கு அன்பில் ஐக்கியம் ஆகிறார்கள். எப்படியாவது பெரும் பணக்காரனாக வேண்டும் என்பது சண்முகபாண்டியன் ஆசை. ஒரு நாள் அது நடந்தே தீரும் என்கிறார் மாமா சரத்குமார். அதனால் சரத் -சண்முக பாண்டியன் இருவரும் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் அந்த ஊருக்குப் புதிதாக வந்த எஸ்பி. சுஜித் சங்கருடன் மோதல் ஏற்படுகிறது. எஸ்.பி.யோ கிட்டத்தட்ட ஒரு சைக்கோவின் மனோ பாவம் கொண்டவர். இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக சண்முக பாண்டியன் கைது செய்யப்படுகிறார். லாக்கப்பில் வைத்து அவரை போலீஸ் அடித்து துவைக்கிறார்கள். இதனால் ஆத்திரமாகும் மாமா போலீஸ்…

Read More

ஹார்டிலே பேட்டரி – திரை விமர்சனம்

காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையை தவிர வேறு ஏதும் இல்லை என்று நம்புகிற விஞ்ஞான ஆர்வலர் சோபியா, தனது கல்வி அனுபவத்தில் ஒரு காதல் மீட்டரை கண்டுபிடிக்கிறார். உருகி உருகி காதலிக்கிறோம் என்று சொல்லும் காதல் ஜோடிகள் கூட இந்தக் காதல் மீட்டரில் கை வைத்து பரிசோதிக்க பயப்படுகிறார்கள். அவர்களே பலரது காதல் உண்மையாக இல்லாது இருப்பதே இதற்கு காரணம். இந்நிலையில் விஞ்ஞானமும் உணர்வுகளும் வேறு வேறு. இயற்கையான காதலை கண்டுபிடிக்க செயற்கையான மெஷின் எதற்கு என்கிறான், வழிப்போக்கனில் தொடங்கி தற்போது நண்பன் வரை வந்துவிட்ட நாயகன். நாயகி சோபியாவுக்கு இதில் நம்பிக்கை இல்லை. நேசித்து மணந்த பெற்றோர் தற்போது பிரிந்து போனதில் அம்மாவை ஒரேடியாக இழந்தவள் அவள். அதனால் காதலை சொல்ல வரும் நாயகனுக்கும் அவள் சில டெஸ்ட் வைக்கிறாள். அந்தத் தேர்வில்…

Read More

மாண்புமிகு பறை – திரை விமர்சனம்

மாண்புமிகு பறை   — திரை விமர்சனம்   பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதோடு மற்றவர்களுக்கு அந்த கலையை கற்றுக்கொடுத்தும் வருகிறார்கள்.   அதே சமயம், பறை இசைக் கலைஞர்களை இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வதே ‘மாண்புமிகு பறை’. நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கேரக்டரில் வருகிறார். பேதம் பார்க்கும் மேல் தீட்டு மக்களிடமிருந்து வரும் இன்னல்களை பொருட்படுத்தாமல் அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டி இருக்கிறார். கோவில் திருவிழாவுக்கு சென்ற தனது நண்பன் மிஸ்சிங் என தெரிய வந்ததும் அவரது துடிப்பும் துயரமும் தேர்ந்த நடிகருக்கான முத்திரையை அவருக்குப் பெற்றுத் தருகின்றன.…

Read More

மகா சேனா — திரை விமர்சனம்

குரங்கணி மலைப்பகுதியில் வாழும் யாழி கிராம மக்களுக்கும் மலையடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டு கால பகை இருந்து வருகிறது. குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். யாழி கிராமத்து மக்களின் தலைவன் செங்குட்டுவன் கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார். யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். அதே நாளில் அடிவார பகுதி மக்கள் சாமி சிலையை திருட நினைக்கிறார்கள். அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டமிடுகிறார்கள். யாழி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றதா? சாமி சிலையை எதிரிகளிடம் இருந்து செங்குட்டுவன் பாதுகாத்தாரா? என்பது படத்தின் மீதிக் கதை.…

Read More

சாரா – திரை விமர்சனம்

பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றும் சாக்க்ஷி அகர்வால், அதே நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். பெற்றோர் சம்மதத்தின் பேரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சாக்‌ஷி அகர்வால், அவரது காதலர், சாக்ஷி அகர்வாலின் தம்பி ஆகியோர் கடத்தப்படுகிறார்கள் அந்த நிறுவனத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றும் செல்லக்குட்டி அவர்களை கடத்தி சிறை வைக்கிறார். இத்தனைக்கும் சாக்‌ஷி அகர்வாலும் செல்லக்குட்டியும் பள்ளிப் பருவ நண்பர்கள். இப்படி இருக்க அவர் அப்படி செய்தது ஏன்? கடத்தியவர் அவர்களை என்ன செய்தார்? கேள்விக்கான விடையை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்வதே இந்த ‘சாரா’. கதையின் நாயகியாக சாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்‌ஷி அகர்வால், அந்த கேரக்டரில் தேர்ந்த நடிப்பில் பிரகாசிக்கிறார். தன் சிறு வயது நண்பனை, தொழிலாளியாக பார்த்த நிலையிலும் அவர் காட்டும்…

Read More

சாவீ – திரை விமர்சனம்

நாயகன் உதய் தீப், தனது தந்தை கொலையுண்டு இறந்ததற்கு தன் இரண்டு மாமன்கள் தான் காரணம் என நினைக்கிறார். அதுவே அவர்கள் மீது கோபமாக அவருக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம், இரண்டு மாமன்களில் ஒரு மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையே, அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட.. துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது. குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் மர்மப் பின்னணிக்கும் காணாமல் போன பிணத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா… பிணத்தை கடத்தியது யார் என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்கிறது படம். நாயகனாக நடித்திருக்கும்…

Read More

நிர்வாகம் பொறுப்பல்ல – திரை விமர்சனம்

நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட திட்டமிட்ட நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் தொக்காக சிக்கிக் கொள்கிறார். போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்தார்? அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ? கேள்விகளுக்கான விடை பரபர கிளை மாக்ஸ். படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும் அடப்பாவி ரகம். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன், பலவித கெட்டப்புகளில் தோன்றி ஆச்சரியப் படுத்துகிறார். நடிப்பு, நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் பட்டை கிளப்பியி ருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி…

Read More

அங்கம்மாள் — திரை விமர்சனம்

பிடிவாத குணம் கொண்டவள் கிராமத்து அங்கம்மாள். அவளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்குத் திருமணமாகி ஏழு வயதில் மகள் இருக்கிறாள். மனைவி வீட்டோடு இருக்கிறாள். டிவிஎஸ் சேம்ப்பில் வீடு வீடாகச் சென்று பால் வியாபாரம் செய்யும் அங்கம்மாள் இரண்டாவது மகனை டாக்டர் ஆக்கி விடுகிறாள். அவள் ஜாக்கெட் அணிவதில்லை. எதற்கும் அஞ்சாத குணம் அவளது தனித்துவம். அதனால் அவளுக்கு எதிர் பேச்சு பேச ஊர்க்காரர்கள் பயப்படுவார்கள். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கிற மாதிரி எதையும் முகத்துக்கு நேரே கேட்டு விடுவதால் அவளைக் கண்டால் அனைவருக்கும் பயம். டாக்டருக்கு படித்த இளைய மகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். பெண் வீட்டார் வேற்று மதம். இருப்பினும் சம்மதிக்கிறார்கள். இப்போது இளைய மகனின் ஒரே பிரச்சினை, இதுவரை ஜாக்கெட் அணியாத அம்மாவை எப்படியாவது தனது திருமணத்துக்குள் ஜாக்கெட் அணிய சம்மதிக்க…

Read More

தேரே இஷ்க் மே – திரை விமர்சனம்

எப்பேர்ப்பட்ட கோபக்கார மனிதனையும் பொறுமை மிக்கவனாக மாற்ற முடியும் என்பதை தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக தேர்வு செய்கிறார் நாயகி. இதற்காக அவர் தேர்ந்தெடுப்பது அடிதடிக்கு அஞ்சாத கல்லூரி மாணவர் தனுஷை. அவரோ சின்ன கோபத்துக்கும் பெரிய சம்பவம் செய்கிறவர். நாயகியின் எந்த ஒரு அணுகுமுறைக்கும் அவர் இறங்கி வருவதாக தெரியவில்லை. ஆனாலும் தனுஷை சாந்தமிகு இளைஞனாக மாற்றும் தன் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் நாயகி. தனுஷை மாற்ற முடிந்தால் மட்டுமே நாயகியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் நாயகி. ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. அந்த காதல் கைகூடியதா? தனுஷ் வன்முறையை விட்டொழித்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடையே படம் கோபக்கார மாணவர், அன்பான காதலர், பொறுப்புள்ள அதிகாரி என வந்தாலும் ஒவ்வொன்றிலும் தனித்துவம்…

Read More

ஐ பி எல் – திரை விமர்சனம்

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விட்டதாக தவறாக சந்தேகப்பட்டு அவனை காவல் நிலையம் கொண்டு சென்று தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த இளைஞன் இறந்து போக… கொல்லப்பட்டவனின் செல்போனை ஆராயும் போது அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். இது விஷயம் சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிக்குப் போக…இப்போது காட்சி மாறுகிறது. அந்த லாக்கப் மரணத்திற்கு வாடகை கார் ஓட்டும் அப்பாவி கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள். மேலிடத்து அழுத்தத்தால் அவரை அடித்து நொறுக்கி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள். கிஷோரின் தங்கையை நாயகன் டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார். அந்த உரிமையில் கிஷோர் மீதான பொய் வழக்கை உடைத்து நீதியை நிலை நாட்ட அதற்கான ஆதா…

Read More