தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அசோக் செல்வன் அவரது நடிப்பில் எமக்கு தொழில் ரொமான்ஸ். மற்றும் நடிகை அவந்திகா , ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அசோக் செல்வனின் நடிப்பும், அவந்திகா மிஷ்ராவுடனான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக செயல்படுகின்றன. ஆனால், பொதுவாக கதை சிக்கல்களையும், திருப்புமுனைகளையும் சரியாக அமைத்திருந்தால், படம் இன்னும் ரசிக்கப்பட வாய்ப்பு மேலும் உள்ளது. அசோக் செல்வன் ஒரு ஜாலியான ரொமான்டிக் பையனாக மனதைக் கவருகிறார். அவந்திகா மிஷ்ராவுடனான காதல் காட்சிகள் ரொமான்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. ஊர்வசி, அழகு பெருமாள் , எம்.எஸ் பாஸ்கர் போன்றவர்கள் சிறந்த குணசித்திரங்களை கொடுத்து இருக்கின்றனர். அனைவரின் நடிப்பும் சிறப்பு. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசை நன்றாக…
Read MoreCategory: விமர்சனம்
ஜீப்ரா- திரை விமர்சனம்
வங்கியில் சேமிப்பது நல்லது என்ற கருத்தை உடைத்து நொறுக்கி இருக்கும் படம். நம் பணத்தை நcமக்கே தெரியாமல் வங்கி ஊழியர்களே எடுத்தாண்டு இருக்கும் காட்சிகள் அடி வயிறு வரை நம்மை கலங்க வைக்கின்றன. நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அங்கு தன் தேவைக்காக ரூ. 4 லட்சத்தை மோசடியாக எடுக்கிறார். அதே ரூட்டில் வங்கியில் 5 கோடி பணம் எடுக்கப்படுகிறது. அதை எடுத்தது யார்? அதன் மூலம் நாயகனுக்கு நேர்ந்த பாதிப்பு என்ன? கேள்விக்கான விடை பரபர கிளைமாக்ஸ். அவசர தேவைக்கு ஒரு தப்பை செய்துவிட்டு அதனால் ஏற்படும் இன் னல்களால் பாதிக்கப்படும் காட்சிகளில் சத்யதேவ் நடிப்பில் அனுபவம் பூத்துக் குலுங்குகிறது. நாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் கொஞ்சம் காதல் நிறைய பயம் என்று காட்சிகளில் நிரம்பி நிற்கிறார். நாயகனை சிக்கலில் மாட்டி விடும்…
Read Moreலைன் மேன் – திரை விமர்சனம்
சாதனை படைக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானி சாதாரணனாக இருந்து விட்டால்… அவன் கனவு கடைசி வரை கனவு தானா… அல்லது நனவாகுமா? தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் உள்ள உப்பள மின் மையத்தில் லயன்மேனாக இருக்கிறார் சார்லி. மின் பொறியியல் பட்டதாரியான அவரது மகன் ஜெகன் பாலாஜி இளம் விஞ்ஞானி. தனது கண்டுபிடிப்புகள் மூலம் மக்களுக்கு உதவ எண்ணுகிறார். மின்விளக்குகளை கண்ட்ரோல் செய்ய தானியங்கி கருவி ஒன்றை கண்டு பிடிப்பவர், அதற்கு அரசு அங்கீகாரம் கிடைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார். ஆனால் அவரது அத்தனை முயற்சியும் பணால் ஆக, துவண்டு போகிறார். அவரது கண்டுபிடிப்புக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, சதிகளை தகர்த்து அவரால் தனது படைப்பை அரசு அங்கீகாரத்துடன்மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததா என்பது எதிர் பார்ப்புக்குரிய கதைக் களம். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு…
Read Moreஜாலியோ ஜிம்கானா – திரை விமர்சனம்
சாதனை படைக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானி சாதாரணனாக இருந்து விட்டால்… அவன் கனவு கடைசி வரை கனவு தானா… அல்லது நனவாகுமா? தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் உள்ள உப்பள மின் மையத்தில் லயன்மேனாக இருக்கிறார் சார்லி. மின் பொறியியல் பட்டதாரியான அவரது மகன் ஜெகன் பாலாஜி இளம் விஞ்ஞானி. தனது கண்டுபிடிப்புகள் மூலம் மக்களுக்கு உதவ எண்ணுகிறார். மின்விளக்குகளை கண்ட்ரோல் செய்ய தானியங்கி கருவி ஒன்றை கண்டு பிடிப்பவர், அதற்கு அரசு அங்கீகாரம் கிடைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார். ஆனால் அவரது அத்தனை முயற்சியும் பணால் ஆக, துவண்டு போகிறார். அவரது கண்டுபிடிப்புக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, சதிகளை தகர்த்து அவரால் தனது படைப்பை அரசு அங்கீகாரத்துடன்மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததா என்பது எதிர் பார்ப்புக்குரிய கதைக் களம். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு…
Read Moreபணி – திரை விமர்சனம்
மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான ஜோஜு ஜார்ஜ் இயக்குனர் ஆகியிருக்கும் முதல் படம்.முதல் படத்திலேயே வெற்றி முத்திரை பதித்திருக்கிறார். மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள் திடீரென புதிய தொழிலுக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆயுதம் ஏந்தி ஒரு கொலையை நடத்தி முடிக்கிறார்கள். அதற்காக கிடைக்கும் ரூ. பத்து லட்சம் அவர்களை வன்முறை பாதையில் தொடர வைக்கிறது. இதனால் ஏற்படும் புதிய துணிச்சலில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும் பிரபல தாதாவின் மனைவியை தைரியமாக சீண்டுகிறார்கள். இதில் ஆவேசமான தாதா இருவரையும் அடித்து துவைக்கிறார். இதனால் வெறியான இளம் கொலையாளிகள் இருவரும் தங்கள் பழி வாங்கும் படலத்தை தொடங்குகிறார்கள். தாதாவின் குடும்பத்தில் உள்ளவர்கள், தாத்தாவின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் கடத்தல், கொலை என விபரீதம் தொடர்கிறது. இதற்கிடையே தாதாவின் மனைவி இவர்களிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகிறாள். இதன்…
Read Moreநிறங்கள் மூன்று – திரை விமர்சனம்
மூன்று மனிதர்களின் முகம் வேறு. செயல் வேறு. அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி வைக்கிறது என்பதை சொல்லியிருக்கும் படம். இயக்குனர் ஆக வேண்டும் என்ற வெறியுடன் திரியும் ஒரு உதவி இயக்குனர். சாதாரண புகார் என்றாலும் அதில் காசு பார்க்க துடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு பொறுப்பான பள்ளி ஆசிரியரின் மறுபக்கம்…இந்த மூன்று கதாபாத்திரங்களோடு காணாமல் போன காதலியை தேடி அலையும் ஒரு மாணவனும் இணைந்து கொள்ள…போகிற போக்கில் இந்த மூன்று குடும்பங்களும் ஒரே புள்ளியில் எப்படி இணைகிறது என்பது கதை. உதவி இயக்குனர் கேரக்டரில் கச்சிதமாக பொருந் ந்தியிருக்கிறார் அதர்வா. தனது கதை தன் கண்முன்னே பிரபல இயக்குனர் இயக்கத்தில் படமாவது கண்டு கொதிக்கும் இடங்களில் அந்த கேரக்டருக்கான நடிப்பு நியாயம் செய்து விடுகிறார் அதர்வா. ஆனால் பல இடங்களில் இவரை போதை…
Read Moreபராரி – திரை விமர்சனம்
இது காதல் கதை. அதை சமூகமும் இனமும் எப்படி பந்தாட முற்படுகின்றன என்பது இயல்பான திரைக் களம். தமிழ் சினிமாவில் சாதிச் சண்டைகள் தொடர்பான கதைகளுக்கு பஞ்சம் இல்லை. பராரியில் இப்படி சாதி சண்டைகள் தொடங்கி மொழிச் சண்டையாக வளர்ந்து முடிகிறது படம். இந்த இரு சண்டைக்குள்ளும் சிக்கி தவிக்கும் ஒரு ஆத்மார்த்தமான காதலை சொன்ன விதத்தில் இந்த பராரிமனதுக்குள் மத்தாப்பு. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளூர் கிராமத்தில் ஆதிக்க சக்தி மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இருப்பது ஒரே குலதெய்வம். வருடாவருடம் அதை கும்பிடக் கூட இரு தரப்பும் அடித்துக் கொள்கிறார்கள். இந்த இரு தரப்பின் மோதல் தெரிந்தும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹரி சங்கர் மீது காதல் ஆகிறாள் சங்கீதா. இந்தக் காதலை வேரறுக்க சங்கீதாவின் தந்தை தனது உறவு பையனுக்கு மகளை கொடுப்பதாக நிச்சயம் செய்து…
Read Moreநயன்தாரா பியாண்ட் தி பேரிடேல் — ஆவணப்பட விமர்சனம்
சிலருக்கு மட்டுமே வாழும் போதே வரலாறு அமையும். திரை உலகில் அப்படி ஒரு அமைப்புக்கு சொந்தக்காரர் நடிகை நயன்தாரா. கேரளாவில் திருவல்லா எந்த சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் டயானா. அப்பா பெயர் குரியன் என்பதால் டயானா குரியன். கல்லூரியில் படிக்க வாய்ப்பு வந்த போது சிஏ படிக்க விரும்பினார். அதற்காக மனு போட்ட நேரத்தில் மனோ போடாமலேயே தேடி வந்தது சினிமா வாய்ப்பு. 2003 ஆம் ஆண்டு சத்யன் அந்திக்கரே இயக்கத்தில் உருவான உருவான மனசுக்கிரே நான் நயன்தாராவின் முதல் படம் படத்தில் அவருக்கு ஜோடி ஜெயராம் இந்த படத்தில் நடித்த போதுதான் டயானா என்று அவரது பெயரை நயன்தாராவாக மாற்றினார் டைரக்டர் இப்படி அவர் நடிக்க வந்த காலம் தொடங்கி விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் காட் சிப்படுத்தி இருக்கிறது இந்த ஆவணம். தமிழில்…
Read Moreகங்குவா – திரைப்பட விமர்சனம்
முன்ஜென்ம கதையை தீவுவாசிகள் பின்னணி யில் சொல்லி இருக்கிறார்கள். 2024 இல் நிகழ் காலத்தில் கதை தொடங்குகிறது. போலீசால் கண்டுபிடிக்க முடியாத நபர்களை தனது தீவிர வேட்டையாடல் மூலம் கண்டுபிடித்து கொடுத்து அதற்கான அன்பளிப்பை காவல்துறையில் பெற்றுக்கொள்ளும் சூர்யா. அவருக்கு உதவியாக யோகி பாபு. இதே வேலையை பிழைப்பாக நாயகி திஷா பதானியும் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக ரெடின் கிங்ஸ்லி. இதற்கிடையே ஆய்வுக் கூடம் ஒன்றில் சிறுவர்களின் மூளைத் திறனை அதிகரிப்பதற்கான ஆய்வு நடக்கிறது. இந்த ஆய்வுக் கூடத்தில் இருந்து அதிசய மூளைத் திறன் கொண்ட சிறுவன் ஒருவன் தப்பி விட, ஆய்வுக்கூடம் அனுப்பி வைத்த அடியாட்கள் சிறுவனை வெறியுடன் தேட, அவனுக்கோ சூர்யாவை பார்த்த மாத்திரத்தில் இன்ப அதிர்ச்சி. சூர்யாவும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கும் தனக்குமான இனம் புரியாத அன்யோன்யத்தை உணர்கிறார்.…
Read Moreஅமரன் – திரை விமர்சனம்
2014 இல் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதை. அதை சினிமாவுக்கான சமரசம் இன்றி அதேநேரம் இதயம் நெகிழும் விதத்தில் தந்ததற்காக படக்குழுவுக்கு முதலில் ஒரு ஹாட்ஸ் ஆப். பள்ளியில் படிக்கிற காலம் தொட்டு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது சிறுவன் முகுந்த்தின் கனவு. கல்லூரி காலத்தில் அதை செயல்படுத்த முனையும் போது தான் ஒரு பக்கம் பெற்றோரின் எதிர்ப்பு. இன்னொரு பக்கம் முகுந்த் காதலிக்கும் மலையாள பெண்ணின் குடும்பம் இதற்காகவே பெண் தர மறுக்கிறது. எதிர்ப்பை சரி செய்து காதலியை ஒருவழியாக கரம் பிடிக்கும் முகுந்த், அடுத்தடுத்த பதிவு உயர்வுகளில் மேஜர் ஆகிறார். அன்பு மனைவி அழகு குழந்தை என மகிழ்ச்சியாய் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க இன்னொரு பக்கம் காஷ்மீர் தீவிரவாதிகளை களை எடுக்க…
Read More