மழை பிடிக்காத மனிதன் – விமர்சனம்.. 3/5

கதை… படம் தொடங்கியவுடன் இரண்டு நிமிடங்களில் வரைபடத்துடன் வாய்ஸ் ஓவரில் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். ஒரு அடாத மழையினால் தன் காதல் மனைவி இழக்கிறார் விஜய் ஆண்டனி.. இதனையடுத்து விஜய் ஆண்டனியை எவருக்கும் தெரியாத வகையில் அந்தமானுக்கு கொண்டு செல்கிறார் இவரது நண்பர் சரத்குமார். அதே சமயம் நடந்த சம்பவத்தில் விஜய் ஆண்டனி இறந்து விடுகிறார் என மக்களை நம்ப வைக்கிறார்.. அப்படி அவர் சொல்ல என்ன காரணம் என்பது கிளைமாக்ஸ் இல் தெரியும். அந்தமானுக்கு சென்ற விஜய் ஆண்டனி அங்கு ஒரு பிரச்சனையில் தன் நண்பனுக்காகவும் தன் காதலிக்காகவும் களம் இறங்குகிறார்.. அடுத்தது நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகனாக விஜய் ஆண்டனி.. சமீப காலமாக ரோமியோ உள்ளிட்ட படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக மாறி இருந்தார் விஜய் ஆண்டனி.. ஆனால்…

Read More

பேச்சி விமர்சனம்: 4/5… நரபலி

கதை… நாயகன் தேவ்.. நாயகி காயத்ரி.. மலைப்பகுதிகளில் ட்ரக்கிங் செல்ல ஆசைப்படும் இரண்டு காதல் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு செல்கின்றனர்.. இவர்கள் கூடவே இவர்களின் போட்டோகிராப் நண்பரும் இணைந்து கொள்கிறார்.. இவர்களுக்கு வழி துணையாக டூரிஸ்ட் கைட் பால சரவணன் இணைகிறார்.. அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது இது தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு பலகையை காண்கின்றனர்.. அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற அறிந்து கொள்ள காயத்ரி திட்டமிடுகிறார்.. இது எங்கள் கிராமம் இந்த காடு பற்றி நன்கு அறிந்தவன் நான்.. அங்கு ஒரு மர்மம் இருக்கிறது.. அங்கு செல்லக்கூடாது சென்றால் நமக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார் பாலசரவணன்.. ஆனாலும் அவரின் எதிர்ப்பை மீறி அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகின்றனர். அந்த பகுதியில் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர்.. தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்பது…

Read More

நண்பன் ஒருவன் வந்த பிறகு – விமர்சனம்

 கதை… ஆனந்தம் காலனி என்ற ஒரு காலனியில் தன் சிறு வயது முதலே வளர்ந்து வருகிறார் நாயகன் ஆனந்த்.. அந்தக் காலணியில் வசிக்கும் பல நண்பர்கள் இவருடேனே அதே பள்ளியில் அதே வகுப்பில் படிக்கின்றனர்.. கல்லூரி செல்லும் போது கூட இவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் இணைந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்குகின்றனர். மேலும் BECOME A STAR என்ற மொபைல் ஆப் ஒன்றையும் தொடங்குகின்றனர். ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.. ஆனால் மாதங்கள் செல்ல செல்ல வருமானம் இல்லாததால் நண்பர்கள் பிரிந்து செல்கின்றனர்.. குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நாயகன் NOVP என்ற நிறுவனத்தை நம்பியே இருக்கிறார்.. இதனால் நாயகியும் அவரை விட்டு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதன்…

Read More

BOAT போட் விமர்சனம் 3/5.. நடுக்கடலில் பயணம்

கதை… 1943 ஆண்டு.. இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டம் அது.. அப்போது சென்னை மீது ஜப்பான் நாட்டு அரசு குண்டு போட திட்டமிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் குண்டுகளிடமிருந்து தங்கள் உயிரைப் பாதுகாக்கவும் யோகி பாபு தன் அம்மா லீலா உடன் தன்னுடைய சொந்த படகில் நடுகடலுக்கு செல்ல திட்டமிடுகிறார். அவர் செல்லும் போது திடீரென கௌரி அவரின் தந்தை சின்னி ஜெயந்த், எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், ஷாரா, மதுமிதா, அக்க்ஷத் உள்ளிட்டோரும் படகில் ஏறி விடுகின்றனர். இந்தப் படகில் 7 நபருக்கு மேல் செல்ல முடியாது என யோகி பாபு எச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வேறொரு படகில் பயணம் செய்து கொண்டிருந்த ஆங்கிலேயன் (அவரின் படகு விபத்துக்குள்ளானதில்) ஜெஸ்ஸி இவர்களை மிரட்டி இந்த படகில் ஏறி கொள்கிறான். இந்த சூழ்நிலையில் ஆங்கிலேயன்…

Read More

வாஸ்கோடகாமா திரை விமர்சனம் – நெகட்டிவ் உலகம்

கதை… நல்லவனுக்கு பெண் கொடுக்க மாட்டோம்.. நல்லவனாக இருந்தால் வாழ விடமாட்டோம் என்ற நோக்கத்தில் ஊரில் எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. பிக் பாக்கெட் அடிப்பவன் கற்பழிப்பவன் கொள்ளை அடிப்பவன் கொலைகாரன் உள்ளிட்டவர்கள் மட்டுமே வாழும் நாட்டில் நல்லவனுக்கு பெண் தர மறுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நகுலுக்கு கல்யாணம் கட்டி வைக்க தீர்மானித்து முனிஷ்காந்த் திட்டம் போடுகிறார். அதன்படி ஆனந்தராஜின் மகள் அர்த்தனா பினுவை பெண்பார்க்க செல்கிறார்.. அங்கு இவன் மோசமானவன் அக்மார்க் அயோக்கியன் என்று கூறி கட்டி வைக்க முயல்கிறார்.. திருமணத்தின்போது நகுல் அயோக்கியன் அல்ல நல்லவன் என்று தெரிந்து விடுகிறது. இதனால் திருமணம் நின்று போகிறது.. அதன் பிறகு அவன் ஜெயிலுக்கு செல்கிறார்.. அங்கு திருடர்கள் எல்லாம் நல்லவர்களாகவும் போலீஸ் எல்லாம் மகா கெட்டவர்களாக இருக்கிறார்கள். வரும் கைதிகளுக்கு கற்பழிப்பது எப்படி? கொள்ளை அடிப்பது கொலை…

Read More

ஜமா விமர்சனம் – தெருக்கூத்து

‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல்லாகும்.. நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. கதை… கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன்.. இவரது உறவினர்கள் பலரும் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் படத்தை எதார்த்தமாக இயக்கி நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார்.. பாரி இழவழகன் இவரது தந்தை தயா.. தெருக்கூத்து பார்க்க சென்ற தயா ஒரு கட்டத்தில் அதில் ஆர்வமாகி அவரே தெருக்கூத்து கலைஞராகி விடுகிறார்.. ஜமா என்ற பெயரில் நாடகக் கலைக் குழுவை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் தனது நண்பரின் பொறாமையால் இவரது கலைக்குழு கைவிட்டு போகிறது.. ஒரு கட்டத்தில் மரணமும் அடைகிறார்.. தன் தந்தையை கைவிட்ட ஜமா குழுவை மீண்டும் கைப்பற்ற மகன் பாரி இளவழகன் போராடும் போராட்டமே…

Read More

Deadpool & Wolverine – விமர்சனம்

எக்ஸ் மென் பட வரிசையில் இது 11வது படமாகும்.. எக்ஸ்-மென் வரிசையைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ரசிக்கவே முடியாமல் புரியாமல் கூட போகலாம்.. கதை… எரிபொருள் டேங்கிற்குள் தீ வைத்து வேட் வில்சன் தற்கொலை செய்ய முயல்கிறார்.. அப்போது முதல் படம் தொடங்குகிறது… பொதுவாகவே ஆங்கில படங்களை டப்பிங் செய்யும் போது தமிழில் ஏகப்பட்ட வசனங்கள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்காக காமெடிக்காக சேர்க்கப்படும்.. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.. காமெடி என்ற பெயரில் அடல்ட் ஒன்லி ஜோக்குகளை வைத்து குழந்தைகளை பார்க்க விடாமல் செய்து விட்டனர்.. அதிலும் ஏகப்பட்ட கேரக்டர்கள் பேசுகிறது பேசுகிறது.. பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.. கேன்சர் நோயாளி வேட் வில்சன் (ரையான் ரெனால்ட்ஸ்), தன் காதலியோடு (மொரேனா பாக்கரின்) குழந்தை பெற திட்டமிடுகிறான். அதற்குள் அவரின் காதலியை எதிரிகள் கொன்றுவிட, தானும் இறக்க…

Read More

ராயன் விமர்சனம் : ரணகளம் செய்யும் தனுஷ்

கதை… தனுஷ் சந்திப் கிஷன் காளிதாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய நால்வரும் அண்ணன் தங்கை.. சிறுவயதிலேயே இவர்கள் பெற்றோரை இழந்து விட்டதால் தன் தம்பிகளையும் தங்கையையும் பாதுகாப்பாக பார்த்து வளர்த்து வருகிறார் தனுஷ்.. இவர்களின் நிலை அறிந்த செல்வராகவன் அவர் குடும்பத்திற்கு உதவுகிறார்.. இதனால் செல்வா மீது தனுஷ் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்.. தந்தை ஸ்தானத்திலிருந்து செய்து வருகிறார்.. இவர்கள் இரவு நேர ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வாழ்ந்து வருகின்றனர் காளிதாஸ் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஆனால் சந்திப் தவறான பழக்க வழக்கங்களால் நிறைய பிரச்சனைகளை வீட்டிற்கு கொண்டு வருகிறார்.. இதனால் அடிக்கடி அண்ணன் தனுஷுக்கும் தம்பி சந்திப்புக்கும் மோதல்கள் வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு பாரில் பிரச்சனை செய்யும் போது தவறுதலாக வில்லன் சரவணன் மகனை கொன்று விடுகிறார் சந்தீப். இதனால் சரவணன்…

Read More

பிதா 23 : 23 – சினிமா விமர்சனம்

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட ஒரு தொழில் அதிபரையும், தனது அக்காவையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை… ஒரு தொழில் அதிபரை அவரது டிரைவருடன் கடத்தி வைத்து விட்டு அவரது மனைவியிடம் 25 கோடியை கேட்கின்றனர் ஆதேஷ் பாலா சாம்ஸ் & மாரீஸ் ராஜா.. இவர்களை கடத்திக் கொண்டு போகும் வழியில் நாயகி அனு-வையும் கடத்திக்கொண்டு அவரையும் அடக்கி வைத்து இருக்கின்றனர்.. தன் அக்காவை தேடி மாஸ்டர் ஹர்ஷித் அங்கு வருகிறான்.. அவன் என்ன சாகசங்கள் செய்தான்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர்கள் அனைவரும் தங்கள் பணிய சிறப்பாக செய்திருக்கின்றனர்.. ஒரே இரவில் நடக்கும் கதையை…

Read More

தண்டுபாளையம் திரை விமர்சனம்

உண்மை சம்பவத்தை திரையில் பார்த்தாலே மனம் கதையோடு இன்னும் நெருக்கமாகி விடும். இதுவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வீடு புகுந்து நடத்தும் வன்முறைக் கதை. அதை திரைப்படுத்திய விதத்தில் மனதுக்குள் திகில், அதேநேரம் விழிப்புணர்வுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆணியடித்து சொல்லியிருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் வீடு புகுந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவத்தை ஈவிரக்கமே இ்ல்லாமல் தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துகிறது. அந்த கூட்டத்தை போலீஸ் அதிகாரி கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார். மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார் அவரால் அந்த கூட்டத்தின்ஆணிவேரை அறுக்க முடிந்ததா என்பது ரத்தம் தெறிக்கும் திகுதிகு…

Read More