2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், பத்து ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகத்துக்கு வந்திருக்கிறார்கள். முதல் பாகத்தின் இறுதியில் அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்கு பதிலாக மகன் கருணாகரன் அரசியலுக்குள் வருவார். அதனால் இந்த இரண்டாம் பாகத்தை அவரிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு குருவான மிர்சி சிவா சிறையில் இருந்து வெளிவந்து தன்னுடைய கற்பனை காதலி சாவுக்கு காரணமான கருணாகரனை பழி வாங்க துடிக்கிறார். அதே நேரம் அவரை பிடிக்க காவல்துறை அதிகாரி யோக் ஜேபி தருணம் பார்த்து காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் தனது கட்சி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆக வேண்டிய நேரத்தில் மயங்கி விழுந்து கோமாவுக்கு போன வாகை சந்திரசேகர் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கண் விழிக்கிறார். அப்போது அரசியல்…
Read MoreCategory: விமர்சனம்
அந்த நாள் – திரை விமர்சனம்
திரைப்பட இயக்குனரான ஆர்யன் ஷியாம் தனது புதிய படத்தின் டிஸ்கஷனுக்காக இரண்டு பெண் உதவி இயக்குனர்கள் உட்பட நாலு பேர் கொண்ட குழுவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களா செல்கிறார். இரவில் அந்த பங்களாவில் சில மர்மமான சம்பவங்கள் நடக்க, திகிலில் உறைந்து போகிறது படக்குழு. உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அங்கிருந்து அவர்கள் தப்பிக்க முயல, ஆனால் அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை. இந்நிலையில் பங்களாவுக்குள்ளேயே மர்ம மனிதர் ஒருவர் வந்து ஆயுதத்தால் அவர்களை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது தான் அதற்கு முந்தின நாள் வந்து தங்கிய ஒரு குடும்பம் இந்த மர்ம மனிதனால் கொல்லப்பட்ட விஷயம் தெரிய வர, இவர்கள் நிலை என்ன ஆகிறது? அமானுஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து அவர்கள் தப்பினார்களா? அல்லது உயிர் விட்டார்களா…
Read Moreதென் சென்னை -திரை விமர்சனம்
மனைவியின் மறைவுக்கு பிறகு சென்னை வரும் தொழிலதிபர் தேவராஜன் ஹோட்டல் தொழிலில் பிரபலமாகிறார். இந்நிலையில் மதுரையில் ஒரு விழாவுக்கு சென்றவரை அங்கு சாப்பிட்ட உணவின் ருசி வெகுவாய் கவர, அந்த உணவை சமைத்த அண்ணன் தங்கையையும் தன்னோட அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார். அவர்களை தனது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.தேவராஜன் மறைவுக்கு பிறகு அவரின் பேரன் ரங்கா ஹோட்டல் தொழிலை சிறப்புற நிர்வகிக்கிறார். அதே ஹோட்டல் மாடியில் பிளாக் காட் என்ற பெயரில் ஒரு செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அவ்வப்போது சட்டவிரோத செயல்கள் சைலண்ட்டாக நடந்து வருகிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் கைக்குள் ரங்காவின் ஹோட்டல் சென்று விடுகிறது. தங்கள் ரகசிய பண பரிமாற்றத்தை நடத்தும் இடமாக ஹோட்டலை பயன்படுத்துகிறார்கள். இங்கு பணம் கை மாறுவது தெரிந்த ஒரு கொள்ளை கும்பல்…
Read Moreஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் –திரை விமர்சனம்
-கிட்னி பாதிப்பால் உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற ஆட்டோ டிரைவர் பரத் போராடுகிறார். கிட்னி வழங்க டோனர் கிடைத் தும் ஆப்ரேஷனுக்காக சில லட்சங்கள் புரட்டியாக வேண்டிய நிலை. இந்த நேரத்தில் அவருக்கு ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. பணத்துக்காக ஒரு உயிரைக் கொல்ல வேண்டிய அசைன்மென்ட் அந்த நேரத்தில் தேடி வர, பணத்துக்காக அந்த காரியத்தை செய்தாரா? மனைவியின் உயிரைக் காப்பாற்ற அவரால் முடிந்ததா? -கணவன் இல்லாமல் தனி ஒருத்தியாக தன் வாரிசை வளர்க்க வேண்டிய கட்டாயம் துப்புரவு தொழிலாளி அபிராமிக்கு. சோதனையாக மகனாக வளர்ந்தவன் திருநங்கையாக மாறிய நிலையில் தன் ஒரே வாரிசை டாக்டர் ஆக்கி பார்க்கும் ஆவலில் வட்டிக்கு கடன் வாங்குகிறார். கடன் கொடுத்தவனோ சொன்ன தேதிக்குள் பணம் வராததால் அபிராமியின் வாரிசுக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுக்கிறான். இந்த நேரத்தில் அபிராமிக்கு…
Read Moreதூவல் – திரை விமர்சனம்
தூவல் என்பது மூங்கில் மூலம் மீன் பிடிக்கும் ஒரு முறையாகும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ள சிங்காரப்பேட்டை கிராமம் தான் கதைக்களம். அந்த ஊரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் வரும் மீன்களை தூவல் முறை மூலம் பிடிப்பதே இவர்களது தொழில். இந்த தொழில் அந்த ஊரின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாகவும் ஆகிவிடுகிறது. இந்நிலையில் தூவல் முறை மூலம் பிடிக்கும் மீன்களை விட வெடி வைத்து பிடித்தால் அதிக மீன்களை அள்ளலாமே என்று பேராசை கொள்ளும் ஊர் பெரியவர் ஒருவர் மீன்களை வெடி வைத்து பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் இதுவே பிரச்சனையாகிறது. ஏற்கனவே அந்த ஊரின் வனச்சரகர் காட்டு வளங்களை எப்படி எல்லாம் சுரண்ட முடியுமோ அப்படி எல்லாம் சுரண்டுகிறார். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கூட தேடிப் பிடித்து மாமூலை பெற்றுக் கொள்கிறார். இந்நிலையில் இவரது கவனம் ஆற்று…
Read Moreபேமிலி படம் – திரை விமர்சனம்
திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் நாயகன் உதய் கார்த்திக், பல தேடல்களுக்கு பிறகு தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்கிறார். இவர் சொன்ன கதை பிடித்து போக, படத்தை தயாரிக்க முன்வருகிறார் அந்த தயாரிப்பாளர். ஆனால் படத்தில் இன்றைய முன்னணி நடிகரான தன் தம்பி தான் நாயகன் என்கிறார். ஆனால் கதைபிடித்த தயாரிப்பாளரின் தம்பியோ புது இயக்குனருக்கு சரி வர இயக்க தெரியுமோ என்னவோ… அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தன் அண்ணனிடம் சொல்லி விட, சிதைந்து போகிறது உதய் கார்த்திக்கின் இயக்குனர் கனவு. மூத்தஅண்ணன் வழக்கறிஞர். அடுத்த அண்ணன் ஐ டி துறையில் என குடும்பத்தில் சம்பாதிப்பவர்களாக இருக்க, கடைசி தம்பி மட்டும் இயக்குனர் கனவில் ஏக்கத்துடன் கனவுகளை சுமந்து திரிய… இந்நிலையில் தான் திடீர் திருப்பம். உதய் கார்த்திக் இயக்கும் படத்தை தயாரிக்க அவரின்…
Read Moreபுஷ்பா தி ரூல் – திரை விமர்சனம்
புஷ்பா முதல் பாகத்தில் செம்மரம் மட்டும் கூலி தொழிலாளியாக இருந்து படிப்படியாக செம்மர கடத்தல் கும்பல் தலைவனாக மாறுவார் அல்லு அர்ஜுன். இந்த இரண்டாம் பாகத்தில் அவரது தலைமை பொறுப்பை தட்டி பறிக்க திட்டமிடும் தொழில் எதிரிகளிடம் இருந்து எப்படி அதை மீட்டுக் கொள்கிறார் என்பதை கோடிகளை கொட்டி சொல்லி இருக்கிறார்கள். இந்த கதைக் களத்துக்குள் மனைவியின் புகைப்பட ஆசையை நிறைவேற்ற முதலமைச்சரையே மாற்றும் புஷ்பா, தனது குடும்ப அடையாளத் துக்காக அண்ணனிடம் அவமானப்படுவது, அதே அண்ணன் மகளுக்கு ஆபத்து என்றதும் உயிரைப் பணயம் வைத்து மீட்க புறப்படுவது போன்ற கிளை க் கதைகளும் பிரமாதம் சொல்ல வைக்கின்றன. ஒற்றைக் காலில் கயிற்றைக் கட்டி தலைகீழாக தொங்க விடப்பட்டிருக்கும் முதல் காட்சியிலேயே தனது வீர தீர பிரதாபத்தில் புஷ்பா, ரசிகர்களை தனக்கு நெருக்கமாக்கி கொள்கிறார். பெண் வேடமிட்டு…
Read Moreமாயன் – திரை விமர்சனம்
ஐடி துறையில் பணியாற்றும் வினோத் மோகன் அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரர். குறிப்பாக சகிப்புத்தன்மை மிக்கவர். அலுவலகத்தில் சிற்சில நேரங்களில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டாலும் அதை சிரித்த முகத்தோடு கடந்து போகிறவர். அவரது ஒரே லட்சியம் சொந்தமாய் ஒரு வீடு வாங்கி அதில் தனது அம்மாவை குடியமர்த்துவது தான். இந்நிலையில் நாயகனுக்கு வரும் மின்னஞ்சல் ஒன்றில், 13 நாட்களில் இந்த உலகம் அழியப்போகிறது மாயனின் பிள்ளை என்பதால் உனக்கு இதை தெரியப்படுத்துகிறோம். எக்காரணம் கொண்டும் இந்த தேவ ரகசியத்தை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என அதில் கண்டிஷனும் போடப்பட்டு இருக்கிறது. முதலில் இதை வினோத் மோகன் நம்பவில்லை. ஆனால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அவரை நம்ப வைக்கிறது. இதனால் எப்படியும் உலகம் அழியப்போகிற இந்த கொஞ்ச நாட்களுக்குள் எத்தனை மகிழ்ச்சியாக வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து விடுவோம் என்ற…
Read Moreதிரை விமர்சனம் – எமக்குத் தொழில் ரொமான்ஸ்
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அசோக் செல்வன் அவரது நடிப்பில் எமக்கு தொழில் ரொமான்ஸ். மற்றும் நடிகை அவந்திகா , ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அசோக் செல்வனின் நடிப்பும், அவந்திகா மிஷ்ராவுடனான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக செயல்படுகின்றன. ஆனால், பொதுவாக கதை சிக்கல்களையும், திருப்புமுனைகளையும் சரியாக அமைத்திருந்தால், படம் இன்னும் ரசிக்கப்பட வாய்ப்பு மேலும் உள்ளது. அசோக் செல்வன் ஒரு ஜாலியான ரொமான்டிக் பையனாக மனதைக் கவருகிறார். அவந்திகா மிஷ்ராவுடனான காதல் காட்சிகள் ரொமான்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. ஊர்வசி, அழகு பெருமாள் , எம்.எஸ் பாஸ்கர் போன்றவர்கள் சிறந்த குணசித்திரங்களை கொடுத்து இருக்கின்றனர். அனைவரின் நடிப்பும் சிறப்பு. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசை நன்றாக…
Read Moreஜீப்ரா- திரை விமர்சனம்
வங்கியில் சேமிப்பது நல்லது என்ற கருத்தை உடைத்து நொறுக்கி இருக்கும் படம். நம் பணத்தை நcமக்கே தெரியாமல் வங்கி ஊழியர்களே எடுத்தாண்டு இருக்கும் காட்சிகள் அடி வயிறு வரை நம்மை கலங்க வைக்கின்றன. நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அங்கு தன் தேவைக்காக ரூ. 4 லட்சத்தை மோசடியாக எடுக்கிறார். அதே ரூட்டில் வங்கியில் 5 கோடி பணம் எடுக்கப்படுகிறது. அதை எடுத்தது யார்? அதன் மூலம் நாயகனுக்கு நேர்ந்த பாதிப்பு என்ன? கேள்விக்கான விடை பரபர கிளைமாக்ஸ். அவசர தேவைக்கு ஒரு தப்பை செய்துவிட்டு அதனால் ஏற்படும் இன் னல்களால் பாதிக்கப்படும் காட்சிகளில் சத்யதேவ் நடிப்பில் அனுபவம் பூத்துக் குலுங்குகிறது. நாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் கொஞ்சம் காதல் நிறைய பயம் என்று காட்சிகளில் நிரம்பி நிற்கிறார். நாயகனை சிக்கலில் மாட்டி விடும்…
Read More