சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்து கதை தொடங்குகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முத்துராம லிங்க தேவர், ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். அது சமயத்தில் ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். இதற்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் பயணி ப்பவர், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி, பார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைகிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்க தேவர், தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுக்கிறார். முத்துராமலிங்க தேவரின் வளர்ச்சியி ல் அச்சமடையும் காங்கிரஸ் தலைமை அவரை மீண்டும் காங்கிரஸில் இணைய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. அது முடியாமல் போக, அவர்…
Read MoreCategory: விமர்சனம்
ராம் அப்துல்லா ஆன்டனி — திரை விமர்சனம்
இளம் சிறார்களின் தடம் மாறிப் போன வாழ்க்கை. ராம் அப்துல்லா ஆண்டனி மூவரும் ஒரே பள்ளி மாணவர்கள். நண்பர்கள். மதங்களை தாண்டிய நட்பு இவர்களுடையது,. ஒரு நாள் மூன்று நண்பர்களும் ஒன்றிணைந்து தொழிலதிபர் வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் போட்டு விடுகின்றனர். இதனை போலீசாக வரும் சௌந்தரராஜன் கண்டுபிடிக்கிறார். கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கொலைக்கு பின்னான அதிர்ச்சி தகவல் தெரிய வர, சட்டம் தன் கடமையை செய்கிறது. 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு ஏன் போனார்கள் என்பது கிளைமாக்ஸ் வரையிலான மீதிக்கதை. நண்பர்களாக பூவையார், அர்ஜூன், அஜய் அர்னால் வருகிறார்கள். தலைவாசல் விஜய், சௌந்தரராஜன் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக காட்சிகளில்…
Read Moreஆண்பாவம் பொல்லாதது — திரை விமர்சனம்
இளம் தம்பதிகளின் இனிய இல்லற வாழ்க்கையில் ஈகோ புகுந்தால்… நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இளம் தம்பதிகளின் மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் திடீரென்று இடைப்படும் ஈகோ அவர்களை விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. கோர்ட்டில் மனைவி விவாகரத்து கேட்க, கனவனோ சேர்ந்து வாழவே விருப்பம் என்கிறான். இறுதியில், இருவரில் யார் வெற்றி பெற்றது ? என்பதை தற்போதைய காலகட்ட தம்பதிகளின் வாழ்க்கைக்கு நெருக்கமாக அதே நேரம் கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள். இளம் தம்பதிகளாக ரியோ ராஜ் மற்றும் மாளவிகா முழு படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான ‘ஈகோ கெமிஸ்ட்ரி’ வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து படம் அசுர வேகத்துக்கு தாவுகிறது. வருத்தமான வாழ்க்கையில் பொருத்தமான ஜோடியாக இவர்கள் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சின்னச்…
Read Moreஆரியன் — திரை விமர்சனம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவ்வளவு எளிதில் செய்தியாளர்களிடம் சிக்காத பிரபல நடிகரின் நேர்காணல் நடக்கிறது. அப்போது பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து அந்த நடிகரை சகட்டுமேனிக்கு திட்டியவாறு துப்பாக்கியால் அவரது காலில் சுடுகிறார். அதே வேகத்தில் பார்வையாளர்களாக வந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக்கி அதிர்ச்சியளிக்கிறார் காவல்துறை அவரது டிமாண்ட் என்ன என்று கேட்க, அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதோடு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரையும் விடுகிறார். பொதுமக்கள் கண் முன்னே இறந்தவர் எப்படி இந்த கொலைகளை செய்வார்? அந்த ஐவர் யார்? ஐவரும் கொல்லப்பட்டனரா என்ற கேள்விக்கு விடையே ஆரியன். தொடர் கொலைகளை தடுத்து நிறுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாக விஷ்ணு…
Read Moreமெஸஞ்ஜர் –திரை விமர்சனம்
காதலித்த பெண் மனிஷா ஜஸ்னானி ஏமாற்றியதால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முடிவுக்கு வருகிறார். அதற்காக தூக்கில் தொங்க முயலும் நேரத்தில் அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசேஜ் வருகிறது.தற்கொலை முடிவை தள்ளி வைத்து விட்டு மெசேஜை பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருக்கிறார்கள்” என்ற செய்தி இருக்கிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்பது தான். இறந்தவர் எப்படி மெசெஜ் அனுப்ப முடியும்? அவர் உண்மையில் இறந்து விட்டாரா ? என்பதை விசாரிக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு அவர் இறந்தது உண்மை தான் என்பது தெரிய வருவதோடு, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது ?…
Read Moreகேம் ஆப் லோன்ஸ் – திரை விமர்சனம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதன் மூலம் ஆன்லைன் ஆஃப் ஒன்றில் கடன் வாங்குகிறான் நாயகன். அந்த கடனால் அவன் எதிர்கொள்ளும் நெருக்கடியை கதை யாக்கி இருக்கிறார்கள். கடன் கொடுத்த வங்கியில் இருந்து தேடி வந்த இருவர் லட்சங்களில் இருக்கும் கடனை கட்ட முடியாவிட்டால் தற்கொலை ஒன்றே அதற்கு தீர்வு என்று மெதுமெதுவாக நாயகன் மனதை மாற்ற முயல் கிறார்கள். மனைவிக்ku தெரியாமல் வாங்கிய கடன் என்பதால் தற்கொலை செய்து கொண்டால் கூட அந்த கடனை மனைவி கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அழுத்தம் தருகிறார்கள். விடாப்பிடியான அவர்களின் வார்த்தை ஜாலத்தில் குழப்ப மனநிலைக்கு போன நாயகன், அவர்கள் தந்த அழுத்தத்தின் பேரில் தற்கொலை செய்து கொண்டானா? என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியானவர்…
Read Moreபைசன் — திரை விமர்சனம்
வன்முறை வாடிக்கை ஆகிப் போன தென் மாவட்ட கிராமம் ஒன்றில் இருந்து தடைகளை உடைத்து தனது லட்சியமான கபடி விளையாட்டில் தேசத்துக்கே பெருமை தேடித் தந்த ஒரு இளைஞன் கதை. தென் மாவட்டங்களில் 90-களில் நடந்த சமூக மோதல்கள் அந்தப் பகுதி மக்களை குறிப்பாக இளைஞர்களை ரொம்பவே பாதித்தது. பல இளைஞர்களின் எதிர்காலம் அரிவாள் வீச்சில் முடிந்து போனது. இப்படிப்பட்ட கிராமத்திலிருந்து தனது கபடி கனவை நனவாக்க போராடும் ஒரு இளைஞன் தான் கதையின் நாயகன். அந்த நாயகனாக துருவ் விக்ரம் படம் முழுக்க நடிப்பால் வியாபித்து நிற்கிறார். அவரை நடிகராக ஒரு காட்சியில் கூட பார்க்க முடியவில்லை. அந்த கபடி வீரன் கேரக்டரில் வீறு கொண்ட வேங்கையாக சீறிப் பாய்கிறார். கபடி விளையாடக்கூடாது என்று சத்தியம் வாங்கும் தந்தையி டம் அவர் சத்தியம் செய்யும்…
Read Moreகம்பி கட்ன கதை — திரை விமர்சனம்
அப்பாவி மக்களை ஏமாற்றி காசு பார்க்கும் நாயகன் நட்டி நட்ராஜ் கையில் பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்று கிடைக்க, அதை காட்டுப்பகுதி ஒன்றில் குழி தோண்டி புதைத்து வைக்கிறார். வைரக்கடத்தலு க்காக போலீஸ் அவரை கைது செய்கிறது. கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறது. சிறை வாசம் முடிந்து வெளியே வரும் நட்டிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடம் அரசியல்வாதி ஒருவரால் அபகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் கோவில் ஒன்றையும் அரசியல்வாதி கட்டி வைத்திருக்கிறார். இப்போது வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொள்கிறார். சாமியாராக இருந்து கொண்டே வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த முயற்சியில் அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பதை…
Read Moreடீசல் – திரை விமர்சனம்
2014-க்கு முந்தைய காலகட்டத்தில் கதை நடக்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து, வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அங்குள்ள மீனவ மக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட ராட்சத குழாய், மீனவர்களின் மீன் தொழிலையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. அந்த திட்டத்திற்கு எதிராக போராடியும் பலன் என்னவோ பூஜ்யம் தான். இதனால் அந்த கிராமத்தை விட்டே வெளியேறும் மீனவர்களில் சிலர், அதே கச்சா எண்ணெயை திருடுவதை தொழிலாக்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் திருட்டை வளர்த்துவிடும் சில பண முதலைகளின் சதித் திட்டத்தால், வட சென்னை முழுவதும் உள்ள மீனவ கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனை அறிந்து கொள்ளும் நாயகன் அந்த சதிதிட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவர் வெற்றி பெற்றாரா? சதி திட்டத்தின் பின்னணியில் இருக்கும் தொழில் அதிபரால்…
Read Moreடியூட் – திரை விமர்சனம்
காதலுக்கும் அதை போற்றும் அன்புக்கும் நடுவே போடப்பட்ட மெல்லிய முடிச்சு தான் இந்த படம். நாயகனின் மாமா அமைச்சராக இருக்கிறார். அவரது அழகு மகள் நம் நாயகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நாயகனோ, சிறு வயது முதல் நாம் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். எனவே உன் மேல் எனக்கு காதல் வராது’ என்கிறார். இதை ஏற்றுக்கொண்ட நாயகியும் கடந்து போகிறாள். ஆறு மாதம் கடந்து போன நிலையில் தன் மீது உயிராக இருக்கும் மாமா பெண்ணை மணந்தால் என்ன என்கிற எண்ணம் நாயகனுக்குள் எட்டிப் பார்க்க, மாமாவிடம் தன் விருப்பம் சொல்கிறான். அவருக்கும் தங்கை மகனுக்கு தன் பெண்ணை கொடுப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்க, இப்போது மாமா பெண் புதுசாக ஒரு கட்டையை போடுகிறாள். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை…
Read More