தீபாவளிக்கு பான் இந்தியா திரைப்படமாக வந்திருக்கிறார் இந்த லக்கி பாஸ்கர். கதை 1990 இல் தொடங்குகிறது. அதிகாலை வாக்கிங் முடித்து பால் பாக்கெட் வாங்க வரும் துல்கர் சல்மானை சுத்தி வளைக்கும் சிபிஐ. அப்படியே அவரை வங்கிக்கு அள்ளிக் கொண்டு போகிறது. அவரது வங்கிக் கணக்கை சோதனையிடும் சிபிஐ அதிகாரிகள் அதிர்ந்து போகிறார்கள். வங்கி கணக்கு இருப்பு மட்டும் 100 கோடிக்கு மேல் இருந்தால் அதிர்ச்சி சகஜம் தானே. ஒரு வங்கி உதவி பொது மேலாளர் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி என்ற வினாக் குறியுடன் தொடங்கி வியப்புக் குறியுடன் முடிகிறது படம். மும்பையில் பல பல வங்கியில் மாதம் ரூ. 6000 சம்பளத்தில் கேசியராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு கடனாக இருப்பதோ ரூ 16,000. அடுத்து வரவிருக்கும் உதவி மேலாளர் பிரமோஷனில் சம்பளம் டபுள் ஆகும்.…
Read MoreCategory: விமர்சனம்
பிளடி பெக்கர் – திரை விமர்சனம
தமிழ்த் திரைக்கு எப்போதாவது இம்மாதிரியான கதைக்களம் சிறப்பு சேர்க்கும். அப்படியொரு படம் இது. பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட நாயகனுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனும் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் கோடீஸ்வரர் ஒருவரின் நினைவு நாளையொட்டி 25 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடாகிறது. இந்த 25 பேரில் ஒருவனாக நமது நாயகனும் அழைக்கப்பட, போகிறான். அங்கே வயிறார சாப்பிட்டு முடித்த நேரத்தில் நாயகனுக்கு ஒரு ஆசை. இந்த பங்களாவுக்குள் ஒரு முறையாவது போய் வந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. பல கட்டுப்பாடுகளை தாண்டி அந்த பங்களாவுக்குள் நுழைகிறான் நாயகன். அங்கே ஒரு நிஜ பேயையும் சொத்துக்கு அடித்துக் கொள்ளும் சில பணப்பேய் களையும் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் நாயகன் அங்கிருந்து உயிரோடு திரும்பி வர முடிந்ததா என்பது திகு…
Read More