மக்களவை தேர்தலில் 8 சதவீதம் கூட வாக்குகளை பெற முடியாததால் தேமுதிக மற்றும் பாமகவின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தானது. தமிழ் திரைப்படத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து, மக்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த். மக்கள் செல்வாக்கை பெற்ற அவர், 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கட்சி தொடங்கும்போதே, “நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி அமைப்பேன்” என்று விஜயகாந்த் கூறினார். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. புதிய கட்சி தொடங்கியதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். பின்னர் 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை…
Read MoreCategory: அரசியல்
அரசியல்
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு!
தமிழகத்தில் வரும் மே 19ஆம் தேதி நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தேர்தலன்று பொன்பரப்பியில் இரு தரப்புக்கு இடையே கலவரம் ஏற்பட்டதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார். அதிக பணப்பட்டுவாடா காரணமாக மதுரை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு தேனி மாவட்டத்துக்கு…
Read Moreமே 5 தமிழாற்றுப்படை வரிசையில் பெரியார் கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்!
தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர் – அவ்வையார் – கபிலர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – செயங்கொண்டார் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் – வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – கால்டுவெல் – பாரதியார் – பாரதிதாசன் – அண்ணா – கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் – கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – ஜெயகாந்தன் – அப்துல் ரகுமான் என்று 23 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். தமிழாற்றுப்படையின் நிறைவுக்கட்டுரையாக தந்தை பெரியாரை ஆய்வு செய்து திருச்சியில் அரங்கேற்றவிருக்கிறார். நாளை மே 5 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி, கலைஞர் அறிவாலயத்தில் விழா…
Read Moreவாகனங்களில் கட்சி கொடி கட்டி கொள்வதற்கோ, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வதற்கோ அனுமதியில்லை!
வாகனங்களில், கட்சி கொடி கட்டி கொள்வதற்கோ, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வதற்கோ, மோட்டர் வாகன சட்டபடி எவ்வித அனுமதியும் இல்லை என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், சாலைகள் இணைப்பு பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்., வளைவு பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்த வேண்டும். சாலை நடுவே அரளிச் செடிகள் நடப்பட வேண்டும்., ஆனால் இந்த பணிகள் முறையாக நடை பெறுவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கரம், மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் தடை செய்யப்பட்ட LED பல்புகளும், மேலும், இரண்டு பல்புகளை விட அதிக பல்புகளையும் சிலர் பொருத்தியிருப்பதால், எதிரே வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு, விபத்தும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்…
Read Moreகோடீஸ்வரர்களும், கேடிகளுமா நம் மக்கள் பிரதிநிதிகள்?
இந்தியாவில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டசபைகளிலும் கோடீஸ்வர எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பெருகிவிட்டார்கள். தற்போது நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் கோடீஸ்வரர்களின் பங்கு 82 விழுக்காடு. இது, 2004இல் 36 விழுக்காடாகவும், 2009இல் 53 விழுக்காடாகவும் இருந்தது. இது போதாதென்று, குற்றவியல் வழக்குகளைக் கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. குற்றவியல் வழக்கும் இருந்து, பெரும் செல்வந்தராகவும் இருந்தால், தேர்தலில் அவரின் வெற்றி வாய்ப்பு, அவர் போட்டியிடும் தொகுதியில் குறைந்த சொத்து மதிப்புள்ள வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைவிடச் சராசரியாக 50 விழுக்காடு அதிகம் என்பதை When Crime Pays: Money and Muscle in Indian Politics எனும் புத்தகத்தில் மிலன் வைஷ்ணவ் என்பவர் புள்ளிவிவரங்களோடு நிறுவியுள்ளார். தமிழகத்தை எடுத்துக்கொண்டால், இந்த நூற்றாண்டில் நடந்துள்ள மூன்று பொதுத்தேர்தல்களில் கோடீஸ்வர எம்.பி.க்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்தது.…
Read Moreதுரைமுருகன் கல்லூரி & திமுக பிரமுகர்கள் வீடுகளில் இருந்து கோடிக் கணக்கான பணம் பறிமுதல்!
தமிழகத்தின் எதிர்கட்சியான தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது. இவருடைய மகன் கதிர்ஆனந்த் காட்பாடியில் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார். கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு வருமானவரித்துறை அதிகாரிகள், துரைமுருகன் வீடு, அவரது மகன் நடத்தும் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்தில் சோதனை நடத்தினார்கள். விடிய, விடிய நடந்த இந்த சோதனையில் ரூ.10 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதேபோல் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படும் குடியாத்தம் அணங்காநல்லூரைச் சேர்ந்த கே.சக்கரவர்த்தி, வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில், வருமானவரி அதிகாரிகள் நேற்று மீண்டும் துரைமுருகன்…
Read Moreடி டி வி தினகரனின் பரிசுப் பெட்டி சின்னத்தை எப்படியெல்லாம் பிரபலப்படுத்தறாங்க!
சுப்ரீம் கோர்ட்டில் ஏகப்பட்ட செலவு செய்து தொடர் சட்ட போராட்டத்திற்கு பின், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.,விற்கு, ‘கிப்ட் பாக்ஸ்’ என்ற பொதுவான சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. லேட்டானாலும் லேட்டஸ்டாக ‘பொது சின்னம்; அதுவும் கிப்ட் பாக்ஸ் கிடைத்தது, எங்கள் அரசியல் வாழ்க்கைக்கு லிப்ட் தரும்’ என தினகரன் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள்; இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்டசபை தொகுதிகள்; புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி; இடைத்தேர்தல் நடக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கும், வேட்பாளரை நிறுத்தி உள்ளார்.தன் கட்சிக்கு, ‘குக்கர்’ சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில், தினகரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கட்சியை பதிவு செய்யாததால், ‘குக்கர்’ சின்னம் வழங்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும், பொது சின்னம் ஒதுக்க, பரிந்துரை செய்தது. இதனால்,…
Read Moreதிருப்பரங்குன்றம் தொகுதியில் AK போஸ்-ஸூக்கு ஜெ. வைச்ச ரேகை பொய்; அதனால் அவரின் வெற்றி செல்லாது!
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றிப்பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது! கடந்த 2016-ஆம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரி திமுக-வின் சரவணன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்புமனுவோடு இணைக்கப்பட்ட படிவங்களில் பொதுச் செயலாளர் என்ற வகையில் ஜெயலலிதாவின் கையெழுத்திற்கு பதில் கைரேகை இடம்பெற்றிருந்தது. இந்த கைரேகை ஜெயலலிதாவிடம் இருந்து முறையாக பெறவில்லை என தெரிவித்து தொடரப்பட்ட இந்த வழக்கில், இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.கே.போஸின் வேட்புமனுவையும், அவரது…
Read Moreமக்களவை + தமிழக இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
இந்திய மக்களில் பலர் எதிர்பார்த்திருந்த மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, 7ஆம் கட்ட தேர்தல் மே 17ஆம் தேதி முடிவடையும். மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் மார்ச் 25. தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். . நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில்…
Read Moreகமல் கட்சி சின்னம் ’டார்ச் லைட்’
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல், 39 கட்சிகளுக்கான சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில், கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். வெள்ளை நிறம் கொண்ட கொடியின் நடுவில் நட்சத்திரமும், அதை சுற்றி 6 கைகள் கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம்பெற்றது. கமல் தனது கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில்,…
Read More
