கரூரில் நேற்று (மார்ச் 26) திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்டக் கூட்டத்தின் இடையே பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “செந்தில்பாலாஜி ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்”என்று பேசியிருந்ந்தார். அன்றே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக கரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை நேற்று (மார்ச் 27) பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப் பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில் அப்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மத்திய குற்றப் பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2011- 2015 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெற்றுத் தருவதில் அதிகாரிகளுடன் இணைந்து…
Read MoreMonth: March 2021
அதிமுக வேட்பாளர் வாக்குறுதி நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதாகக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் அதிமுக வேட்பாளருக்கு எதிரான புகாரை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜெயராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் என்.பி.நட்ராஜ் போட்டியிடுகிறார். அவர், தனக்கு வாக்கு அளித்தால், தனது உறவினர்களுக்குச் சொந்தமான மூன்று மருத்துவமனைகளில் இலவச மருத்துவச் சிகிச்சை வழங்குவதாகக் கூறி, வாக்குச் சேகரித்துவருகிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று(மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு…
Read Moreஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் – எடப்பாடி ஆவேசம்
சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார். முதல்வர் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடத்தில் எல்லாம் பொய்யாகப் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் எதாவது திட்டங்கள் செய்திருந்தால் தானே, அதைப் பெற்றி பேசுவார். பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். எடப்பாடி பழனிசாமி போலி விவசாயி என்கிறார். நானும் மண்வெட்டி பிடிக்கிறேன், அவரும் மண்வெட்டி பிடிக்கட்டும். களத்தில் தெரியும் யார் விவசாயி என்று. எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். மக்கள் தான் இறுதித் தீர்ப்பு கொடுக்கப் போகிறார்கள்” என்று பேசினார். தொடர்ந்து அவர், “திமுகவை வீழ்த்த என் தொண்டை போனாலும், உயிரே போனாலும் பரவாயில்லை. உயிரை கொடுத்தாவது…
Read Moreமதங்களுக்கு எதிரான கட்சியல்ல திமுக- முக ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் என பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், கழகத்தின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, பிரச்சாரத்துக்காகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலிருந்தும் மக்கள் இன்று (மார்ச் 26) திரண்டு வந்து பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர் மக்கள் வெள்ளத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ நேருவைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. அவரிடம் எந்த வேலையைக் கொடுத்தாலும், அதில் முத்திரை பதிக்கும் வகையில் செய்துவிடுவார். கடந்த 7 ஆம் தேதி, திருச்சியில், ’ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்’ என்ற நிகழ்ச்சியை…
Read Moreசசிகலாவை சுற்றும் அரசியல் நெருக்கடி மெளனம் கலைப் பாரா
சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் குடியிருந்துவரும் சசிகலா மௌனத்தைக் கலைக்கக் காத்திருப்பதால் தொடர் பயணத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுக்காலம் பெங்களூரு சிறையிலிருந்தவர் விடுதலையாகி, பிப்ரவரி 8ஆம் தேதி, சென்னைக்கு வந்தார். திடீரென மார்ச் 3 ஆம் தேதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக தெரிவித்தார். ஆனாலும் அவரது அரசியல் நடவடிக்கைகள் ஓயவில்லை என்பதை அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. கடந்த வாரம் தஞ்சைக்கு பயணம் மேற்கொண்ட சசிகலா அங்கே கும்பகோணம், ஒரத்தநாடு அமமுக வேட்பாளர்கள் தன்னை சந்தித்தபோது அவர்களுக்கு வாழ்த்து சொல்லி அவர்களோடு போட்டோவும் எடுத்துக்கொண்டார். அதன் பின் திருச்சி சென்றபோது அமமுக ஸ்ரீரங்கம் வேட்பாளரான சாருபாலா தொண்டைமான் சசிகலாவை சந்தித்தார். இந்த நிலையில்தான் திடீரென அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா பற்றிய தனது மாதக் கணக்கிலான மௌனத்தை…
Read Moreராகுல் பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார்
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மார்ச் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அதில் மதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் வந்த நிலையில்… இன்று மதிமுக வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைகோ கலந்துகொள்வார்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பத்து நாட்களுக்கு முன்பே திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தேதி வாங்கிவிட்டார். அதனால் அந்த தேதியில் வைகோவால் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. வைகோவுக்கு பதிலாக மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கலந்துகொள்வார் என்று மதிமுக வட்டாரத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேசிய அளவிலான தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளும் கூட்டத்தில் கூட்டணியின் எல்லா கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள…
Read Moreஅமலாக்கதுறை மீது நீதிவிசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு
கேரளத்தில் தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுதாரியான ஸ்வப்னாவின் சர்ச்சைக்குரிய வாக்குமூலத்தால், மாநில அரசுக்கு அமலாக்கத் துறை மூலம் நெருக்கடி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் மீதும் சேர்த்து நீதிவிசாரணை நடத்த அந்த மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று (மார்ச் 26) கூடிய அமைச்சரவையில், ஓய்வுபெற்ற நீதிபதி மோகனன் தலைமையில் இந்த நீதி விசாரணை ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, திருவனந்தபுரத்தில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தூதரகம் மூலம் தங்கமும் டாலர்களும் கடத்தப்பட்டதாகவும் அதில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் ஸ்வப்னா வாக்குமூலம் அளித்தார் என்று தகவல்கள் வெளியாகின. அவருடன் குற்றம்சாட்டப்பட்ட சரித் என்பவரும் இதேபோல வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் கசிந்தன. இருவரும் அமலாக்கத் துறையின் மிரட்டலால்தான் அவ்வாறு வாக்குமூலம் அளித்தனர் என பின்னர்…
Read Moreபுதுச்சேரியில் தேர்தலை ஏன் ஒத்திவைக்க கூடாது – உயர்நீதிமன்றம்
புதுச்சேரி பாஜக சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து பிரச்சாரம் செய்யப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் தொடர்ந்த வழக்கில், “வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்பதால் ஆதார் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு புலன் விசாரணைக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘இதுபோன்று மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு முன்னரே உரிய அனுமதி பெறவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.…
Read Moreவருமானவரித்துறை சோதனையை தவிடுபொடியாக்கிய எ.வ.வேலு
அரசியல் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்காக வியூகம் வகுத்துள்ளது போலவே, மத்திய அரசின் வருமான வரித்துறையும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பு வியூகம் அமைத்துள்ளது. இந்தியாவிலேயே தேர்தல் நேரத்தில் பணம் அதிகம் விளையாடும் என்ற ரெக்கார்டு தமிழகத்துக்கு ஏற்கனவே இருக்கிறது, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், கடந்த நாடாளுன்றத் தேர்தலில் வேலூர் என பணத்தால் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட வரலாறு தமிழகத்துக்கு உள்ளது. அதனால் இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டை அதிகம் எதிர்பார்த்திருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தலின் போது நடக்கும் பண விளையாட்டைக் கட்டுப்படுத்தவும், கண்டறிந்து தடுக்கவும் இரு சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம். அதில் ஒருவர் வருமான வரித்துறையில் தென்னிந்திய அளவிலான உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன். இவரது தனிச் சிறப்பு என்னவெனில் இவரது பதவிக் காலத்தில்தான்…
Read Moreஉதயநிதி ஸ்டாலின் செங்கலை திருடியதாக புகார்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இரு பெரும் தலைவர்கள் இல்லாத இந்த தேர்தல் அனைத்து தரப்பினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பரபரப்புக்கும், சுவாரஸ்யத்துக்கும், குறைவில்லாமல் இருக்கிறது இந்த தேர்தல் களம். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாதது குறித்து கடுமையாக விமர்சித்தார். அடிக்கல் நாட்டிய தோடு கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், ”அதிமுக அரசும் பாஜக அரசும் இணைந்து மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்துள்ளேன்” என்று கூறி ஒரு செங்கல்லைத் தூக்கிக் காட்டினார். பொதுமக்கள் மத்தியில் உதயநிதியின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.…
Read More