தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு அன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. இதற்கான உபகரணங்களை, தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி வெப்ப நிலையை பரிசோதிக்கும் ‘தெர்மல் ஸ்கேனர் கருவி’, முழு உடற்கவச உடை, 3 அடுக்கு முககவசம், காட்டன் முககவசம், 2 வகையான கையுறை, 3 வகையான கிருமிநாசினி, முக பாதுகாப்பு கவசம், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பெட்டகம் உள்பட 13 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஒவ்வொரு வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதுடன், கிருமிநாசினி கொண்டு கை…
Read MoreMonth: March 2021
பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரானோ தொற்று இல்லை
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 18-ந்தேதி தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதிசுடன் விருத்தாசலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, விருத்தாசலத்தில் தங்கி, தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வேட்புமனு தாக்கலின்போது சுதீசுடன் இருந்த பிரேமலதா விஜயகாந்த், தொகுதி பொறுப்பாளர் ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதன்அடிப்படையில் சுகாதாரத்துறை குழுவினர் நேற்று விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட செராமிக் தொழிற்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்திடம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என…
Read Moreகருத்துகணிப்பு முடிவுகளால் அலட்சியம் வேண்டாம் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது ஊடகங்களில் – பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் திமுக. தலைமையிலான கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. இவையெல்லாம் நமக்கு, நமது உழைப்புக்கு, நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் அதே வேளையில், முன்பைவிட நாம் அதிகமான கவனத்துடன் உழைக்க வேண்டும்!. என்ற எச்சரிக்கை உணர்வையும் இணைத்தே ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனை மட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப்போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை என்பதை தலைவர் கருணாநிதி அடிக்கடி நினைவூட்டுவார். மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும். தேர்தல் என்பது ஒவ்வொரு வாக்குக்கும் உள்ள ஜனநாயக…
Read Moreவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மின்னணு தபால் வாக்குபோட அனுமதி இல்லை
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் அளித்த பதில் வருமாறு:- வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மின்னணு தபால் ஓட்டு போட வசதியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் செய்யும் யோசனையை தேர்தல் கமிஷன் முன்வைத்தது. அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால், 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதியை அளிப்பது சாத்தியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Read Moreஉருமாறிய கொரோனா – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை (இன்சாகாக்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கியது. அந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இதுவரை 771 உருமாறிய கொரோனாவை ‘இன்சாகாக்’ குழுமம் கண்டுபிடித்துள்ளது. இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை. 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில், சர்வதேச பயணிகள், அவர்களுடன்…
Read Moreபழனி புதியமாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிச்சாமி வாக்குறுதி
பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திறந்த வேனில் முதல்வர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “ஸ்ரீரங்கம் கோயில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் ஆகிய இடங்களில், திருநீறு கொடுத்தபோது அதைக் கீழே கொட்டி மக்களின் கடவுள் நம்பிக்கையை அவமதித்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். இவ்வாறு மதங்களை அவமதித்து வந்த ஸ்டாலின் தற்போது வேலை கையில் எடுத்திருக்கிறார். இதுதான் பழனி முருகனின் சக்தி. தமிழகத்தின் சிறந்த புண்ணியத் தலம் பழனி, எனவே பழனியைத் திருப்பதி போலத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு…
Read Moreதேசத்தை விற்றுவிடுவார்கள்- நாம் தமிழர்சீமான்
நோட்டுக்கு வாக்கை விற்காதீர்கள், அவர்கள் வாக்கைப் பெற்றுக்கொண்டு நாட்டை விற்றுவிடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களைக் கொண்டு வந்து, வாழ்வதற்கு வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடினால் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்கின்றனர். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் கழிவுகளைக் கடலில் கொட்டுகிறார்கள். இதனால் மிக பெரிய பாதிப்பைச் சந்திக்கிறோம். கல்பாக்கம் அணு உலையால் சுற்றுவட்டார 14 கிராமங்களில் பத்திரப்பதிவே செய்ய முடியாத நிலை உள்ளது. அணுக்குண்டு மேல் அமர்ந்திருப்பதும் அணு உலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். காற்றாலைகள் கடற்கரை…
Read Moreஅடுத்துவரும் பத்து நாட்கள் அதிமுக்கியமானவை – கமல்ஹாசன்
திமுக, அதிமுக என்ற இருபெரும் சக்திகளுக்கு இடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தானும் ஒரு கூட்டணியை நகர்த்திக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறார். தீவிர பிரச்சாரத்துக்கு இடையே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களுக்காக நேற்று (மார்ச் 24) ஒரு ஆடியோ மெசேஜை வாட்ஸ்அப் வழியாக வெளியிட்டிருக்கிறார். அடுத்த பத்து நாட்களில் என்ன செய்ய வேண்டுமென்பதை அதில் விளக்கியிருக்கிறார் கமல். “வணக்கம். நல்லா இருக்கீங்களா… தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கு. நாம இத்தனை வருஷம் செய்த உழைப்புக்கும், பட்ட கஷ்டத்துக்கும் பலன்களை அறுவடை பண்ண வேண்டிய காலம் இது. கவனமா இருந்து பயிர்களையும் காப்பாத்தணும். அடுத்த பத்து நாட்கள் சொந்த வேலைகளை எல்லாம் ஒத்தி வைச்சுட்டு, தமிழ்நாட்டை தத்து எடுத்துக்கங்க. மிக மிக உற்சாகத்தோட உழைக்கணும். என்ன…
Read Moreசசிகலாவை கட்சியில் இணைக்க எடப்பாடி – பன்னீர் ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருவதாக அதிமுகவில் சலசலப்புகள் எழுந்து அடங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் நேற்று (மார்ச் 24) தேர்தல் பரப்புரை செய்வதற்காக முதல்வரின் மாவட்டமான சேலத்துக்கு வந்தார் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். சேலம் மாநகரில் பிரச்சாரம் செய்த ஓ.பன்னீர்செல்வம் பின் முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடிக்குச் சென்றார். அங்கே முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமிக்காக வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வெகுவாகப் புகழ்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். “தற்போது நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் அண்ணனின் ஆட்சி தொடர வேண்டும். அம்மா வழியில் தமிழகத்தைத் தடம்பிறழாது வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று பேசிய ஓ.பன்னீர் தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக செய்திருக்கும் சாதனைகளையும் பட்டியலிட்டார். குறிப்பாக தொழில்துறையில் சுமார் 26,000…
Read Moreசோழவந்தானில்கழக வேட்பாளர்களை திணறடிக்கும் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமி
மதுரை மாவட்டத்திற்குள் வரும் சோழவந்தான்(தனி) தொகுதியில் தேமுதிக வேட்பாளராக ஜெயலட்சுமி போட்டியிடுகிறார் வேட்பு மனு வாபஸ் வாங்குவதற்கான கடைசி நாளான நேற்று மாலை 3 மணிவரை திமுக- அதிமுக- தேமுதிக தரப்பில் பரபரப்பும்- பதட்டமும் நிலவியது காரணம் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் ஜெயலட்சுமி தான் கடந்த ஐந்து சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக தரப்பில் இந்த தொகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த கட்சிகள் வாய்ப்பு கொடுத்திருக்கின்றன அதில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வெற்றிபெற்றார் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பவானி குறைந்த வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார் இந்த தேர்தலில் தொகுதியில் அதிமுக- திமுக இரு கட்சியிலும் இருப்பவர்கள் போட்டியிட விருப்பமனுகொடுத்திருந்த போதிலும் வழக்கம்போல வெளி தொகுதி ஆட்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது திமுக – அதிமுக இரு கட்சிகளுமே இதில் இருந்து வேறுபட்டு…
Read More
