சாத்தான் தி டார்க் – விமர்சனம்

தெய்வ சக்திக்கு எதிரான தீய சக்தி… இதன் மூலம் சாகா வரம் பெற்று உலகை ஆள முடியும் என தீய சக்திகள் நம்புகின்றனர்.. இதற்கு சாத்தானை வழிபட்டு அவர்கள் பல வழிபாடுகளை செய்கின்றனர்..

இந்த மையக்கருவை வைத்து ஒரு த்ரில்லர் அனுபவத்தை வித்தியாசமாக கொடுத்துள்ளனர் படக் குழுவினர்..

கதை….

ஒரு கிராமத்தில் பல கொலைகள் நடக்கிறது.. மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.. அவர்களை கொலை செய்தது யார் என்ற விசாரணையின் போது தான் அவர்கள் சாத்தானுக்கு நரபலி கொடுக்கப்பட்டவர்கள் என்ற விவரங்கள் தெரிய வருகிறது.. இதனை செய்தவர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன அவர்களின் நோக்கம் என்ன என்பதுதான் மீதிக்கதை..

நடிகர்கள்…

பல படங்களில் சாந்தமான அம்மா அண்ணி அக்கா வேடங்களில் நடித்தவர் மோனா பத்ரே.. இவர் நாயகி ஐராவின் அம்மாவாக நடுத்திருக்கிறார் கிட்டத்தட்ட படத்தின் கதை நாயகியாகவே தோன்றியிருக்கிறார்.. இவரே இவர் பல்லை பிடுங்கிக் கொள்வது.. நாக்கை அறுத்துக் கொள்வது.. கண்களை கொடூரமாக குத்திக் கொள்வது.. சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது என வித்தியாசமாக செய்து ஒரு பயமுறுத்தும் ராட்சசியாகவே நடித்திருக்கிறார்..

நாயகனாக பள்ளி மாணவராக எஃப்.ஜெ.. அயிராவை ஒருதலையாக காதலித்து அவருக்கு உதவி செய்யும் முயற்சியில் ஸ்கோர் செய்கிறார்..

பள்ளி மாணவியாக ஐரா.. பயமுறுத்தும் அம்மாவிடம் மாட்டிக் கொண்டு தங்கையை காப்பாற்ற இவர் போராடும் முயற்சிகள் பார்வையாளர்களை பதற வைக்கும்..

சாந்தினி தமிழரசன்.. – இவரது கேரக்டர் கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில் வந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறார்..

ஐராவின் தோழி.. காவல்துறை அதிகாரிகள்.. ஊர் மக்கள்.. என அனைவரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.. போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது அந்த அறை அந்த பயம் அனைத்தையும் பதட்டத்தை உண்டாக்கும் வகையில் நடித்துள்ளனர்..


தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி.. ஒரு சின்ன வீட்டுக்குள் இத்தனை கேமரா கோணங்களில் படம் ஆக்க முடியுமா என அதிசயிக்க வைக்கிறார்..

அஷ்வின் கிருஷ்ணாவின் இசை பெரும் பலம்.. அதிக சத்தம் இருந்தாலும் ஹாரர் படத்திற்கு அது தேவை தான்.. அலற விட்டிருக்கிறார்..

மணிகண்டன் ராமலிங்கம் என்பவர் இயக்கியிருக்கிறார்.. படம் முழுக்க சீரியஸ் பாணியில் திரைக்கதை அமைத்து நம்மை நீண்ட நாளுக்கு பிறகு பயமுறுத்தி இருக்கிறார் இயக்குனர்..

சாத்தான் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்ற நம்பிக்கையில் இதில் ஒரு முடிவு இல்லாத திரைக்கதை அமைத்திருப்பது கொஞ்சம் வருத்தம் தான்..

Related posts

Leave a Comment