ஜி.வி. பிரகாஷ் குமாரின் பரபர சஸ்பென்ஸ் த்ரில்லர், ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்காக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், முதல் பார்வைக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பிற்காக பத்திரிகை ஊடகங்கள் மற்றும் ரசிகர்ளுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மர்ம பின்னணியில் ஜி.வி. பிரகாஷ்குமார் இருக்கும்படியான முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படம் மே 2025 இல்…

Read More

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில்.., நடிகர் கார்த்தி பேசியதாவது… சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து, உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது. அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக…

Read More

400 வருட பழமை வாய்ந்த இரண்டு வாள்களை நடிகர் ஆர்கேவுக்கு பரிசளித்து கௌரவித்த ATJEH DARISSALUM மன்னர்

‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்). தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 15 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் விஐபி நிறுவனத்தின் மூலமாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டவர் ஆர்கே.. குறட்டைக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் கூட இவரது நிறுவனம் தீர்வு கண்டுபிடித்தது. அதிலும் ஹைலைட்டாக ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்குத் தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை உலகிலேயே முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார் ஆர்கே. உலகத்திலேயே தங்கள் தலைமுடிக்கு டை அடிக்கும்…

Read More

‘சீயான்’ விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்!!

சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பில், மனம் நெகிழ்ந்த சீயான் விக்ரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம் கடந்த வாரம் வெளியான நிலையில், தமிழகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது. படத்தினைக்…

Read More

’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த…

Read More

எம்புரான்- திரை விமர்சனம்

கேரள முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கி விட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ படம் முடிவடையும். அதன் தொடர்ச்சியாக இதோ இரண்டாம் பாகம். முதல்வரான டோவினோ தாமஸ், மத அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம். இதனால், மறுபடியும் கேரளா வரும் மோகன்லால், தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார்? என்பது கதைக்களம். இதற்குள் அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் அனல் தெறிக்க தந்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இரண்டாம் பாகத்தில், மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடும் தேசிய கட்சிகளின் நடவடிக்கையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.குரேஸி ஆப்ராம்…

Read More

வீர தீர சூரன் – திரை விமர்சனம்

மதுரையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க பெரியவர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து கதை தொடங்குகிறது.அந்த பெரியவர் வீட்டில் வேலை பார்த்த கொண்டிருந்த தன் கணவரை காணோம் என்று ஒரு இளம் பெண் தன் குட்டி மகளுடன் பெரியவர் வீடு தேடி வந்து தகராறு செய்கிறாள். பெரியவரின் மூத்த மகன் அந்தப் பெண்ணை அடித்து துரத்துகிறான்.இதற்கிடையே பெரியவர் வீட்டுக்கு தன்னை தேடிப்போன மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று அவள் கணவன் போலீசில் புகார் தர…ஏற்கனவே பெரியவர் குடும்பத்தின் மீது தீரா பகையிலிருந்த அந்த ஏரியா எஸ்.பி. அருணகிரி, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார். பெரியவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது போல் போலியாக ஏற்பாடு செய்து பெரியவரையும் அவர் மகனையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுகிறார். இந்த தகவல் பெரிய வருக்கு தெரிய வர….மகன் ஒரு…

Read More

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா திரையில் !!

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. *நடிகை சுதா பேசியதாவது…* மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை, எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி. *நடிகை சாந்தி பேசியதாவது…* மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் இயக்குநருக்கு நன்றி, என் முதல் படம் என்னை நம்பி சான்ஸ் தந்ததற்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது, படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி *நடிகர் வைகுண்டம் பேசியதாவது பேசியதாவது…* இந்தப்படத்தில் வில்லன்…

Read More

அறம் செய் – திரை விமர்சனம்

தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்களுடன் சேர்ந்து போராடுகிறார், மருத்துவக் கல்லூரி மாணவரான பாலு s.வைத்தியநாதன். இதனால் அவருக்கு அந்த கல்லூரி தரப்பில் இருந்தும் அரசு தரப்பிலிருந்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல்கள் வருகின்றன. இன்னொரு பக்கம், நாயகி அஞ்சனா கீர்த்தி ‘அறம் செய்’ என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள் தரப்பில் பல இழப்புகளை சந்திக்கிறார். ஆனாலும் கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா? என்பது கிளைமாக்ஸ். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், சமூகப்பிரச்சனைப் பற்றி பேசுகிறார். தங்கள் மருத்துவக் கல்லூரி தனியார் வசம் போய்விடக்கூடாது என்பதற்காக சிறு மாணவர்…

Read More

தி டோர் – திரை விமர்சனம்

கட்டிடக்கலை நிபுணரான பாவனா வடிவமைக்கும் கட்டிட பணிக்காக சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது . கோவில் இடிக்கப்பட்ட அதே நாளில் பாவனாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதன் பிறகு பாவனாவை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. ஓரிரு முறை அவர் கண் முன் ஒரு அம்மாவும் பெண்ணும் ஆவி தோற்ற த்தில் அடிக்கடி வந்து போகிறார்கள். இதனால் பயந்து போகும் பாவனா, அந்த அமானுஷ்ய சக்தி பற்றி விசாரிக்க முயல்கிறார். அது தொடர்பாக அவர் யாரையெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாரோ அந்த நபர்கள் மறுநாளே இறந்து போன தகவல் தெரிய வருகிறது. அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கும் என்ன சம்பந்தம்?, அவரை பின் தொடரும் ஆவிகளின் பின்னணி என்ன? என்பதை திகிலும் திரில்லருமாய் சொல்லி இருக்கிறார்கள். தமிழில் கொஞ்சம் இடைவெளி விட்டு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் பாவனா,…

Read More