வசீகரமான தோற்றம், திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான நடனம் என பான் இந்திய ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவரது வலுவான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் குறித்தான தனது மகிழ்வான அனுபவங்களை ஸ்ரீலீலா பகிர்ந்து கொண்டுள்ளார். ”’பராசக்தி’ திரைப்படம் எனக்கு ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை மறக்க முடியாத பல அழகான நினைவுகளையும் பரிசளித்துள்ளது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் எல்லோரும் மகிழ்வுடன் பணியாற்றினோம். என் சினிமா கரியரில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்ததற்காகவும் என் மீது வைத்த நம்பிக்கைக்கும் இயக்குநர் சுதா கொங்கரா மேடத்திற்கு நன்றி” என்றார். மேலும், “சிவகார்த்திகேயன் சாரின் வெற்றி வெறும்…
Read Moreஅனலி – திரை விமர்சனம்
நாயகி சிந்தியா லூர்டே தனது 10 வயது மகளுடன் தனது தோழியை சந்திக்க ஊரிலிருந்து சென்னை வருகிறார். தோழியின் வீட்டுக்கு கோயம்பேட்டில் இருந்து ஆட்டோவில் புறப்படுபவர், ஆட்டோ டிரைவர் செய்த குளறுபடியால் நகரின் ஒதுக்குப்புறத்தில் சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்யும் சக்திவாசுவின் வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அந்த கும்பல் நடத்திய அதிரடி தாக்குதலில் மகளை தொலைத்து விடுகிறார். அதோடு கையோட கொண்டு வந்த விலைமதிப்பற்ற கைப்பை ஒன்றையும் மிஸ் செய்து விடுகிறார். இப்போது அவர் வெளியே எங்கேயும் போக முடியாது. மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடிக்க வேண்டும். மகளுக்கு நிகரான அந்த கைப்பையையும் கண்டுபிடித்தாக வேண்டும். இரண்டும் அவருக்கு சாத்தியமானதா என்பதற்கு பதில் சொல்கிறது பரபரப்பான கிளைமாக்ஸ். ஹீரோயினாக ‘அனலி’ என்ற…
Read More‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்
நடிகை பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா,ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார்.…
Read MoreBeyond Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு..!
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ப்ரோமோவுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்; அதே உற்சாகத்துடன் திரைக்கு கொண்டு வருவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். Beyond Pictures நிறுவனத்திற்காக ஜெயவர்தன் தயாரித்துள்ள இந்தப் படம், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகும் (Production No.1). அது அனைத்து வயதினரையும் கவரும் ஒரு முழுமையான ‘ஃபீல்-குட்’ பொழுதுபோக்கு படமாக ‘ஹேப்பி ராஜ்’ உருவாக்கப்பட்டுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், நம்பிக்கை, மென்மையான உணர்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டாடக்கூடிய தருணங்களை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட நேரப்படி.. குறித்த காலப் படி.. படப்பிடிப்பு சீரும் சிறப்புமாக நிறைவடைந்தது. நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம்…
Read More“பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்” – நடிகர் ரவி மோகன்!
வில்லனாக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகனின் ’பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் ரவி மோகன் ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி ரவி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ சாதாரண படம் அல்ல! எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பால் உருவான தலைசிறந்த படைப்பு இது. என் மீது நம்பிக்கை வைத்து மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா பயணத்தின் இந்த தருணத்தில் நான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பினர். நான் ’பராசக்தி’…
Read Moreபெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம் – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !!
“பெங்களூர் மெட்ரோவில் பிறந்தநாள் கொண்டாட்ட மரியாதை பெற்ற முதல் நடிகர் – ராக்கிங் ஸ்டார் யாஷ் !! பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர் யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர். வரும் ஜனவரி 8 அன்று நடிகர் யாஷ் பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒரு நடிகருக்கான பிறந்த நாள் களமாக மாறியது. வழக்கமான பயணமாகத் தொடங்கிய ஒரு மெட்ரோ பயணம், அந்த நாளில் ஒரு கலாச்சார…
Read More“வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி!
வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ்தான். ‘பராசக்தி’ படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. ஸ்ரீலீலாவும் உற்சாகமான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீலீலாவின் திறமையான நடிப்பும் நடனமும்…
Read More‘ஹால் (Haal)’ திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் திரையிடல் மறுப்பு – PVR Cinemas மீது CCKTDFD-க்கு அதிகாரப்பூர்வ புகார்
புகார் அளித்துள்ளவர், தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராகவும், CCKTDFD அமைப்பின் செயலில் உள்ள விநியோகஸ்தர் உறுப்பினராகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையின் நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து முழுமையான அறிவுடன் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘ஹால்’ திரைப்படம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள PVR திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், வர்த்தக ரீதியாக திருப்திகரமான வசூலையும் பெற்றுவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் திரையிடல் மறுக்கப்பட்டிருப்பது கேள்விக்குறியாகியுள்ளது. பலமுறை தொடர்புகொண்டும், நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், PVR தமிழ்நாடு நிர்வாகம் எந்தவொரு திரையிடலையும் வழங்க மறுத்துள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, PVR தமிழ்நாடு நிரலாக்க பொறுப்பில் உள்ள திரு. பாலு, பேச்சுவார்த்தைகளின் போது மிகுந்த தொழில்முறைமையற்ற மற்றும் மரியாதையற்ற அணுகுமுறையைக் காட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. “நான் முடிவு செய்தால் மட்டுமே ஒரு படம் தமிழ்நாட்டில்…
Read More“சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, கனவுகள் மற்றும் உண்மையான உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’”- நடிகர் கிஷோர்!
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும். இந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘மெல்லிசை’ இணைய உள்ளது. பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார். அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை ’மெல்லிசை’ பேசுகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான்…
Read Moreயாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்திலிருந்து, மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக திரையில் தோன்றுகிறார். இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது, முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற ருக்மிணியின் அறிமுகம், கீதுவின் உணர்வுப்பூர்வமான, கதைசொல்லலுக்கும், உலகத் தரத்திலான இந்திய திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற யாஷின் கனவுக்கும் வலுவான அடையாளமாக இருக்கிறது. முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா…
Read More