நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ்…

Read More

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ‘சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

சென்னை: தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது . சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக இருக்கும். நடிகர் சந்தீப் கிஷனை இந்தத் திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம். மொழி எல்லைகள் கடந்து ரசிகர்கள் மத்தியில்…

Read More

மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !!

The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க். 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., நடிகை ருஹானி சர்மா பேசியதாவது.., எல்லோருக்கும் வணக்கம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது.…

Read More

குனீத் மோங்கா கபூரின் சீக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இணையும் புதிய தமிழ் படம்!

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது. குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ’தி லஞ்ச்பாக்ஸ்’, ’மசான்’, ’பாக்லைட்’ மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற ’காதல்’ போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில்…

Read More

கிறிஸ்டினா கதிர்வேலன் — திரை விமர்சனம்

தலைப்பை பார்த்ததுமே இரு மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள். இவர்களுக்கு திருமணம் என்று வரும்போது அவரவர் மதங்கள் முட்டி மோதிக் கொள்ளும் என்று தோன்றுகிறது அல்லவா. அதுதான் இல்லை. படத்தில் மதத்துக்கு எந்த ஒரு இடத்திலும் மதம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம் அதுவே படத்தை வேறு கோணத்தில் அழகாக இட்டுச் சென்று விடுகிறது. கதை இதுதான். கல்லூரி மாணவி கிறிஸ்டினாவை அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் கதிர்வேலன் விரும்புகிறான். ஆரம்பத்தில் இது விஷயத்தில் அசிரத்தையாக இருந்த நாயகி, போகப் போக நாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகிறாள். இந்த சூழலில் இதே கல்லூரியின் இன்னொரு காதல் ஜோடிக்கு ரகசியமாய் பதிவு திருமணம் நடத்த சக மாணவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த கல்யாணத்துக்கு சாட்சியாக நாயகன் நாயகி இருவரும் தங்கள் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கிறார்கள். ஆனால்…

Read More

23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னையில் இன்று நிறைவடைந்தது !!

நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (Asia Masters Athletics – AMA) தலைமையிலான ஏற்பாட்டில், Masters Athletics Federation of India – MAFI நடத்திய இந்த மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப், ஆசியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் தடகள வீரர்கள் கலந்து கொண்டனர் இன்று நடைபெற்ற போட்டி நிறைவு நிகழ்வினில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் இயக்குனர் திரு. SJ சூர்யா, நடிகர், இசையமைப்பாளர் திரு. விஜய் ஆண்டனி, நடிகர் அதர்வா, தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன், திரு.M. செண்பகமூர்த்தி – தலைவர், MAFI, திரு. T. கிருஷ்ணசாமி வாண்டையார் – Vice President TAA, திரு. டி.…

Read More

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

இளம் நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிப்பில், “புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான சிவம் பஜே ( Shivam Bhaje ) விமர்சகர்களிடம் பெரும் பாராட்ட்டுக்களைப் பெற்றது. தற்போது கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இயக்குநர் பரத் தர்ஷன் எழுதியுள்ள மற்றொரு சுவாரஸ்யமான, பொழுதுபோக்கு கதையை தயாரிக்கவுள்ளது.…

Read More

டிஸ்னியின் ‘ஜூடோபியா 2’ படத்தில் தைரியமான காவல்துறை அதிகாரி ஜூடி ஹாப்ஸிக்கு இந்தியில் குரல் கொடுத்திருக்கிறார் நடிகை ஷ்ரதா கபூர்!

டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நவம்பர் 28 அன்று வெளியாகும் ‘ஜூடோபியா 2’ படத்தின் இந்தி வெர்ஷன் அறிவிப்புக்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சிறப்பு சந்திப்பில், தைரியமான காவல்துறை அதிகாரியான ஜூடி ஹாப்ஸூக்கு இந்தியில் குரல் கொடுத்தது பற்றிய தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார் நடிகை ஷ்ரதா கபூர். இந்த சந்திப்பில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தான் ஆழமாக உள்வாங்கிக் கொண்டது பற்றி ஷ்ரதா பேசினார், “ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவள் தன் நிலையில் உறுதியாக இருந்ததை நிச்சயமாக என்னால் புரிந்துகொள்ள முடியும். அவள் அதிகாரம் மிக்கவள், தேவைப்படும் தருணத்தில் மென்மையாகவும் இருப்பாள். ஜூடியாக இருந்தது மகிழ்ச்சி!” மேலும் ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் கிரியேட்டிவ் புராசெஸ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். வேடிக்கையாகவும்…

Read More

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!!

டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம். நாயகன் மதி…

Read More

வெள்ளகுதிர: “கலைஞர் ஆட்சியில் அந்த சட்டம் இருந்துச்சி” – மேடையில் பாக்கியராஜ் வைத்த கோரிக்கை!

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது.. சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது.. இவ்விழாவினில், திரு பாக் கியராஜ், ஆர்கே செல்வமணி திரு தனஞ்செயன் திரு டி.சிவா, இயக்குனர் ஆர் வி உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அஜயன் பாலா, திரு குகன், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் ஜெயபிரகாஷம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.. நடிகர் விதார்த் பேசுகையில், வெள்ள குதிர யை தாண்டி இந்த படத்தின் கதாநாயகனான ஓரிக்கும் எனக்கும் உள்ள நட்பு…

Read More