Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்தது. “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக மின்னல் வேகத்தில், வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை…
Read Moreகதைகள் எப்போதும் பார்வையாளர்களை மகிழ்விக்கும், சில்லிட வைக்கும், எண்டர்டெயின் செய்யும்…அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகளை அறிவித்துள்ளது நெட்ஃபிலிக்ஸ்!
*அக்டோபர் 13, 2025:* நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அதேபோல, நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியலில் 14 வாரங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், தென்னிந்திய படங்களான ‘புஷ்பா2’, ‘அமரன்’, ‘லியோ’ மற்றும் ‘தேவரா’ போன்ற படங்களும் ஆங்கிலம் அல்லாத டாப் 10 படங்களில் உலகளவில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் ஒரிஜினல் கதைகளுக்கு எந்தளவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’, ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’ ஆகிய ஒரிஜினல் வெளியீடுகளைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு புதிய படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாக…
Read Moreஉங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் !!
உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் !! ஹைதராபாத்தில் நடைபெற்ற தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி, தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து ஊக்கமூட்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற முக்கியமான செய்தியுடன், அவருடைய கருத்துக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியைத் தொடங்கிய சாய் துர்கா தேஜ், அனைவருக்கும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக ஓட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்..,“அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வேகமாக ஓட்டாதீர்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்,”என்று கூறிய அவர், தனது உயிருக்கு ஆபத்தான விபத்துக்குப் பிறகு வாழ்க்கை குறித்து தன் கண்ணோட்டம் மாறியதை…
Read Moreமருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு;
2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியாக “மகாசேனா” என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்த படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் நடிகர் சூரி மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோரால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. காடு மற்றும் ஆன்மீக நிழல்களில் உருவான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி, இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கும் மகாசேனா படம், இயற்கை, ஆன்மீகம் மற்றும் புராணக் கூறுகளை இணைக்கும் ஒரு காடு சார்ந்த ஆக்சன்-திரில்லர் ஆகும். மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் இடையிலான நிலையான மோதலை, குடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய இடங்களில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் 90% பகுதி உண்மையான…
Read Moreவிஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர். ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார். கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த பிரமாண்டமான…
Read Moreவில் – திரை விமர்சனம்
தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை தனது வாரிசு களான இரண்டு மகன்களுக்கு சரிசமமாக பிரித்து உயில் எழுதி வைக்கிறார். அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை மட்டும் ஒரு பெண்ணின் பெயருக்கு உயில் எழுதியிருக்கிறார். அவரது இறப்புக்கு பின் வழக்கறிஞர் மூலம் இந்த தகவல் குடும்பத்துக்கு தெரிய வர… யார் என்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மொத்த குடும்பமும் வேலை செய்கிறது. வேறு ஒரு பெண்ணை பேசி வைத்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். அந்தப் பெண் போலி என கண்டுபிடிக்கும் நீதிபதி, பெரியவர் யாருக்கு தன் வீட்டை எழுதி வைத்தாரோ அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கோர்ட் டில் நிறுத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிடுகிறார். போலீஸ் அதிகாரி அந்த பெண்ணை கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்தினாரா? எழுதி வைக்கும்…
Read Moreசிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’…
Read Moreநடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்! சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில் வெளியாகியுள்ளது !
தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த *நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”*வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம். அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் குறித்து நடிகர் அருள்நிதி கூறியதாவது…, “முத்தையா சார் கிராமத்து கதைகளை எடுப்பதில் மிகுந்த திறமைசாலி. இந்த முறை அவர் நகர வாழ்க்கை பின்னணியில் ஒரு கதை சொல்ல நினைத்தபோது, அவருடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி…
Read Moreஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும் “காட்டாளன்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது. பான்-இந்தியா ஹிட் ஆக்ஷன் திரில்லர் *“மார்கோ”*விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெரும் முயற்சியாக அமைந்துள்ளது. புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில்…
Read Moreநிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள படங்களின் பிரமாண்ட வரிசை!
முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடையதிரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது. இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் பட வரிசையைக் கொண்டுள்ளது. முதலில், 2025 கிறிஸ்மஸில் வெளியாகவிருக்கும் “சர்வம் மாயா” என்ற ஹாரர்-காமெடி திரைப்படம் மூலம் நிவின் பாலி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜு வர்கீஸுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரேமலு படக்குழுவின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” என்ற ரொமான்ஸ் காமெடி படம் வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஒரு முழுமையான நிவின் பாலி…
Read More