இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது. மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஒரு சாதாரண டிராமா மட்டுமல்ல, வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கும்…
Read Moreஅம்மாவின் பெயரில் அன்னதான விருந்து, எளியோரை உருக வைத்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ் !!
தமிழக மக்கள் தங்கள் வீட்டு சொந்தமாக கொண்டாடும் அளவிற்கு, சமூகப்பணிகளால் எல்லோரது நேசத்தையும் பெற்றவர் மாஸ்டர் ராகவா. ஒரு திரைத்துறை பிரபலமாக அல்லாமல், அவர் செய்து வரும், ஒவ்வொரு உதவிகளாலும், சமூகப் பணிகளாலும் மக்கள் மனதில் ஆழப்பதிந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ், தற்போது அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளார். தானத்தில் சிறந்தது அன்னதானம், பசித்தவனுக்கு உணவு தருபவனே கடவுள், அதிலும் சுவையறியா ஏழை எளிய குழந்தைகளுக்கும், மக்களுக்கும், அறுசுவை உணவளிக்கும் வகையில், அவர் இந்த ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தை துவக்கியிருக்கிறார். இந்த அன்னதான விருந்து குறித்து மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கூறுகையில்.., பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உயர்தர அறுசுவை உணவை, ஏழை குழந்தைகளும் சாப்பிட வேண்டும், பசியில் யாரும் வாடக்கூடாது, எனும் நோக்கத்தில் தான், என் அன்னையின் பெயரில்…
Read More‘கிஸ்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது, “படம் ஜாலியாக இருக்கும். நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்” என்றார். எடிட்டர் ஆர்.சி. பிரணவ், “இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்கள் இந்தப் படத்தில் ரொம்பவே ஜாலியாக வேலை பார்த்தோம். சதீஷ், கவின் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது” என்றார். கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன், “ஜாலியான டீமாக சேர்ந்து எல்லோரும் நல்ல படம் எடுத்திருக்கிறோம். எல்லோரும் ‘தி பெஸ்ட்’ கொடுத்திருக்கிறார்கள். அது டிரெய்லர்…
Read Moreபாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.
இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார். இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு…
Read Moreதேஜா சஜ்ஜா நடிப்பில், “மிராய்” திரைப்படம் – உலகளவில் 100 கோடி வசூல், அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து சாதனை !!
தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த “மிராய்” திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் – கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. “மிராய்” வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும். புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இப்படம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அத்துடன், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $2 மில்லியன் கிளப்பைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்குப் பிறகு, இந்த…
Read Moreநடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம் ‘கண்மணி அன்னதான விருந்து’!
என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான ‘கண்மணி அன்னதான விருந்து’ இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அந்த பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை தர வேண்டும். இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது. உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறவுடன் தொடர்வேன் என நம்புகிறேன். அன்புடன், லாரன்ஸ்
Read Moreதணல் – திரை விமர்சனம்
காவல்துறையில் புதிதாக காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் அன்று இரவே ரோந்து பணிக்கு அனுப்பப் படுகிறார்கள். அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயல… அந்த நபர் தப்பித்து ஓட… அவரை துரத்தியபடி ஓடும் ஆறு பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது தான் அவர்கள் திட்டமிட்டு கடத்தப்பட்டு இருப்பது தெரிய வர,. அங்கு அஸ்வின் தலைமையிலான ஒரு குழுவினர் மிகப்பெரிய சதிதிட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் 6 பேரும் அவர்களை விசாரிக்க முயற்சிக்க, அஸ்வின் தனித்தனியாக சிக்கும் 3 காவலர்களை கொன்று விடுகிறார். அவர்களிடம் இருந்து நாயகன் அதர்வா உள்ளிட்ட மற்ற காவலர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொள்கிறார்கள். காவலர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, அஸ்வின்…
Read Moreஇளையராஜாவுக்கு பொன்விழா எடுத்த தமிழக முதல்வருக்கு, என் கோடான கோடி நன்றிகள்…- நடிகர் அப்புக்குட்டி!
இளையராஜா இசையில் சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் முதல் முதலாக கதையின் நாயகனாக நடித்த அப்புக்குட்டி, ‘தேசிய விருது’ பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்புகுட்டி கூறுகையில்… நான் பெற்ற தேசிய விருதுக்கு இளையராஜா அவர்கள் மிக முக்கிய காரணம். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஒரு கேரக்டர் செய்திருந்த என்னை, கதையின் நாயகனாக ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் மாற்றியவர் சுசீந்திரன் அவர்கள். அந்தப் படத்தில் ‘குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி என் மனச காட்டுதே… என்ற பாடலை இளையராஜா அவர்கள் எனக்காக இசையமைத்து, பாடிய அந்தப் பாடலை, படத்தில் வாய் அசைத்து நடித்த எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும் அந்தப் படத்தின் எமோஷனலான காட்சிகளில் நான் நடிக்கும் போது, அதற்கு இளையராஜா அவர்கள் அமைத்திருந்த பின்னணி இசை டெல்லி வரை கேட்டு, ‘எனக்கு தேசிய…
Read Moreபிளாக் மெயில் – திரைப்பட விமர்சனம்
ஒரு குழந்தை கடத்தல் தான் கதையின் கரு. அதை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த்-பிந்து மாதவி தம்பதிகளின் பெண் குழந்தை கடத்தப் பட்டதிலிருந்து படத்தை தொடங்குகிறார்கள். இன்னொரு புறம் கொரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது பாஸ் கொடுத்த பார்சல் ஒன்றை உரியவரிடம் சேர்க்கப் போகும் இடத்தில் திருடர்களிடம் பார்சலோடு சேர்த்து வேனையும் பறி கொடுக்கிறார். அந்த பார்சலில் விலையுயர்ந்த போதைப்பொருள் இருந்ததை ஜிவி தான் திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்படும் உரிமையாளர், ஜிவியின் காதலியை கடத்துகிறார். பார்சலை கொடுத்துவிட்டு காதலியை மீட்டுப் போ என்கிறார். அந்தக் குழந்தையைக் கடத்தியது யார்? கடத்தப்பட்ட குழந்தை ஜிவியுடன் எந்த விதத்தில் சம்பந்தப்படுகிறது? ஜிவி தன் காதலியை மீட்டாரா? கேள்விகளுக்கு விடை அதிரடி திருப்பங்களுடன் கூடிய சஸ்பென்ஸ் கதை. இரவுக்கு ஆயிரம் கண்கள்,…
Read Moreஉருட்டு உருட்டு – திரை விமர்சனம்
நாயகன் கஜேஷ் நாகேஷ் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர். அவரையும் ஒரு பெண் விரும்புகிறாள். காதல் கிடைத்த பிறகு காதல் போதை தானே வரவேண்டும் ஆனால் நாயகனுக்கு மது போதை தான் முன்நிற்கிறது. காதல் நாயகி ரித்விகா ஸ்ரேயாவுக்கு காதலரின் குடிப் பழக்கம் கவலை தர, காதலனை திருத்த முயற்சி எடுக்கிறார். ஆனால், நாயகனோ குடிபோதையில் இன்னும் தீவிரமாகிறார். போதை இறங்குவதற்குள் மறுபடியும் குடித்துக் குடித்து காதலியை எரிச்சல் படுத்துகிறார். இதற்கிடையில் தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், மாது போதையை மது போதை வென்று விட… அதை தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதுகிறார் நாயகி. இந்நிலையில் காதலனை வெளியூரில் உள்ள தன் மாமா வீட்டுக்கு அழைத்து செல் கிறார். அங்கும் காதலன் குடியை விடுவதாக இல்லை. இதனால் காதலனை மதுவிடம்…
Read More