KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது. படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும்…
Read Moreடிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை திரைப்படம் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாக உள்ளது.
1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய இந்த திரைப்படத்தை பாலு மகேந்திரா எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் “கண்ணே கலைமானே”, “பொன்மேனி உருகுதே”, “பூங்காற்று புதிதானது” போன்ற என்றென்றும் நிலைக்கும் பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. நெகிழ்ச்சியான கதை சொல்லல், கவிதைநயம் மிக்க காட்சியமைப்பு மற்றும் மறக்க முடியாத உச்சக்கட்ட காட்சியால் இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் தனது சிறந்த நடிப்புகளில் ஒன்றை வழங்கியுள்ளார். அவருடன் இணைந்து ஸ்ரீதேவி தனது மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துணை…
Read More‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!
“பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகும் Love Oh Love திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும், உற்சாகமும் நேரத்தியும் நிறைந்த அட்டவணைக்குப் பிறகு வெற்றிகரமாக இன்று நிறைவு பெற்றுள்ளது. மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தனித்துவமான நகர்ப்புற அழகையும், நவீன காதல் கதைக்கான பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், படத்தின் First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது ஆதரவும் வாழ்த்துகளும், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. Zinema Media and Entertainment Ltd தயாரிப்பில், தினேஷ் ராஜ் மற்றும் Creative…
Read Moreகோலிவுட்டின் ‘ புதிய வரவு’ க்ரித்திக் மோகன்: அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட் – ஒரு அதிரடிப் பயணம்!
தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான் க்ரித்திக் மோகன்! கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘பிரேக்பாஸ்ட்’ திரைப்படம், இவரை ஒரு மெச்சூர்ட் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் ‘அச்சமின்றி’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை ‘படிப்பு தான் முக்கியம்’ எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார். கவனிக்க வைத்த கதாபாத்திரங்கள்: சுப்புராம் இயக்கத்தில், வெளியாகி கவனத்தை ஈர்த்த அஞ்சாமை திரைப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக/ விதார்த் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்களையும் கலங்க வைத்தார். இப்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், காதல் மனைவியிடம் அன்புப் போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து, காதல் காட்சிகளிலும், எமோஷனல்…
Read Moreநடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர்- இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர்…
Read MoreZee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.
ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த…
Read Moreபிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும் சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15…
Read More*’இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!*
சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது. இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும் குரலும் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பின்னர், இசை மெதுவாக அதிகமாகி உச்சத்துக்குச் செல்லும் போது, நாட்டுப்புற இசைக் கூறுகளும்…
Read Moreநடிகர் அஜித் குமார் பிறந்தநாளை ஸ்டைலா, ஸ்வாக்காக கொண்டாட மே 1 அன்று மீண்டும் வெளியாகிறது ‘பில்லா’ திரைப்படம்!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது. 2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அஜித் குமாரின் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸை மறுவரையறை செய்த இந்த படம், அவரை மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிக்க வைத்தது. இன்றும் அதன்…
Read Moreஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ திரையரங்குகளில் விரைவில் வெளியாகிறது
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், “அனைத்து தரப்பு ரசிகர்களும்…
Read More