தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.., நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது.., ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், ஆனால் இறைவன் காத்திரு கடவுள் உடன் நடிக்கலாம் என சொன்னார். அது இப்போது நடந்துள்ளது. இப்படத்தில் ஒரு துறவியாக நடித்துள்ளேன். எனக்கு இயக்குநர் போயபாடி சீனு ஒரு அற்புதமான ரோல் தந்துள்ளார். தமிழில் ஏ பி நாகராஜ் போல படம் எடுக்க ஆளில்லை என்ற ஏக்கத்தை போக்க வந்திருக்கிறார்…
Read More“நாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்” – இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்!
நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று படம் வெளியாகிறது. இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் ஒரு நேர்மையான, கிராமப்புறக் கதையை பெரிய திரைக்குக் கொண்டுவருகிறார். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைப்படும்போது குடும்பத்தில் எப்படி மோதல் வெடிக்கிறது என்பதை இந்தக் கதை பேசுகிறது. கேட்பதற்கு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் அடையாளம், கண்ணியம், பெண்மை மற்றும் ஒரு குடும்பத்திற்குள் உணர்ச்சிபூர்வமான பேச்சு என மனதைத் தொடும் கடினமான கதையாக இது இருக்கும்.…
Read Moreஇயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம் படத்தின் போஸ்டர்!
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக நடிகர் – நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார். 🔗https://youtu.be/1DR3_njj8Q4?si=6L0kPWhNc8NZmU6P
Read More‘திரெளபதி2’ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி சின்மயி தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்க வலியுறுத்தும் இயக்குநர் மோகன் ஜி!
வெளியாகவிருக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் முதல் தனிப்பாடலான ‘எம் கோனே’ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலைப் பாடிய சின்மயி வெளியிட்டுள்ள கருத்தால் பாடலை சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக் இயக்குநர் மோகன் ஜி பதிலளித்துள்ளார். இந்த பாடல் வெளியான பின்பு பாடலை பாடிய சின்மயி, மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதாவது, அந்த பாடலை பதிவு செய்யும் நேரத்தில் படத்தின் சித்தாந்த பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்றும், தெரிந்திருந்தால் பாடலை பாடியிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். சின்மயி வெளியிட்டிருக்கும் இந்தப் பதிவிற்கு இயக்குநர் மோகன்.ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடலுக்கு சின்மயி குரலை தனிப்பட்ட முறையில் தான் தேர்ந்தெடுத்ததாகவும், இசையமைப்பாளர் இல்லாமல் பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாடலுக்குத் தேவையான பாணி குறித்து மட்டுமே சின்மயியிடம் விளக்கப்பட்டதாகவும்…
Read More‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் மன்னிச்சிரு என்று தொடங்கும் பாடல் இன்று வெளியானது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகள்…
Read Moreடிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி
டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ ‘ராம் in லீலா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவிற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் ‘ராம் in லீலா ‘ எனும் திரைப்படத்தில் ரியோ , வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். சஞ்ஜெய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றும்…
Read Moreதிரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன்,மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!
சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர், மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெறர சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகிய இருவரும் இணைந்து ஒரு அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் ( Bharat Dharshan) இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி (Maheswara Reddy Mooli) தயாரிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது. சிவம் பஜே ( Shivam Bhaje ) வெற்றிக்குப் பிறகு, இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இன்று படத்தின் தலைப்பு “ ஓ…
Read Moreஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’
வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தினை கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் இப்படத்தினை படமாக்கி உள்ளனர். இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவோ கதை சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட அம்சமாக ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் பெட்டின்…
Read More“அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது”- நடிகை கீதா கைலாசம்!
நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திறமையான நடிகர்கள் கீதா கைலாசம், சரண் சக்தி மற்றும் ’நாடோடிகள்’ புகழ் பரணி ஆகியோர் இடம்பெற்றுள்ள டிரெய்லரும் படம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்களுடன் படக்குழுவினரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று…
Read Moreபிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு செயலி, (FANLY APP)ஃபேன்லி-யை நடிகர் திரு.சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மஸ்ரீ திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சேம்பியன் குகேஷ், காக்னிசண்ட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் திரு. லட்சுமி நாராயணன், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு மற்றும் திரு.ஸ்ரீனிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்குபெற்று சிறப்பித்தனர். பத்மபூஷண் விருது பெற்றவரும், தன்னுடைய வசீகரமான நடிப்பால் மக்கள் மத்தில் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்த செயலியை தொடங்கி வைத்தது பொழுது போக்கு செயலிகள் தளத்தில் புதிய உற்சாகத்தை வழங்கியுள்ளது. ஃபேன்லி(FANLY APP) என்பது இதுவரை இல்லாத அளவில் நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்களோடு ஒருங்கிணைக்கும் தளமாகும். செயலிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தொடக்கம், ஒரே இடத்தில் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்கள் மற்றும் நாயகிகள் ஒரே தளத்தில் இணைப்பதோடு, …
Read More