என் வானம் நீயே பாடல் தாய்களுக்கான அர்ப்பணிப்பு

“என் வானம் நீயே” பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல். இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி. ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் வானம் நீயே”. பாடலின் கரு பற்றி, “என் வானம் நீயே என்பது ஒரு தாய் நமக்குக் கொடுக்கும் பேராசீர்வாதங்களில் ஒரு சிறிய துளி. தாய்மார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அழகான பாடல்கள் இதுவரை வந்துள்ளன, அவற்றில் நாங்களும் ஒரு துளி சேர்க்க விரும்பினோம்.” இந்தப் பாடல் ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணிப்பு, “அம்மா, இது உனக்காக ♥” மனதை நெகிழவைக்கும் இசை படைப்பின் சிறப்பு அம்சமாக, நடிகர் ரவி மோகன் முதன்முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். திரையில் தனது உணர்வூட்டும் நடிப்புகளால் அறியப்பட்ட அவர், இப்போது சொற்களின் உலகில்…

Read More

திருப்பங்களும் கொண்டாட்ட மகிழ்ச்சியும் சந்திக்கும் Bharat Binge Festival – புதிய கதைகள், பன்மொழி வெளியீடுகள் மற்றும் சிறப்பு தீபாவளி சலுகைகள் ~

இந்தியா, அக்டோபர் 13, 2025:
இந்த தீபாவளி, ZEE5 உங்கள் திரைகளை வியப்பூட்டும் கதைகளால் ஒளியூட்ட அழைக்கிறது – அதன் புதிய பண்டிகை பிரச்சாரம் “இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” மூலம். இந்த பிரச்சாரத்துடன் தொடங்குகிறது Bharat Binge Festival, இது கதைகளாலும் கலாட்டாவாலும் நிறைந்த பண்டிகையாக இந்த சீசனை மாற்றுகிறது. இந்த பிரச்சாரம் இந்திய பார்வையாளர்களின் ஆர்வத்தை உணர்ந்துள்ளதின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது – அதாவது, மக்கள் தற்போது அதிக ஈடுபாட்டையும் வேகத்தையும் கொண்ட, வகைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். குடும்ப நாடகங்களும் காதல் கதைகளும் எப்போதும் பரவலாகப் பார்க்கப்படும் நிலையில், திரில்லர்கள், மர்மங்கள் மற்றும் குற்றத் துப்பறியும் கதைகள் தற்போது பல்வேறு மொழி பகுதிகளிலும் பெரிதும் விருப்பம் பெற்றுள்ளன. Bharat Binge Festival இதை கருத்தில் கொண்டு, பார்வையாளர்களின்…

Read More

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்

வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவர், தனது வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க ஒரு வாரிசை நியமிக்கப் போராடுகிறார். அவர் குடும்பத்தையும், தனது சாம்ராஜ்யத்தையும், மிக முக்கியமாக தனது பாரம்பரியத்தையும் காப்பாற்ற போராடுகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸாக குடும்ப கேங்ஸ்டர் மற்றும் வாரிசுரிமையை மையமாகக் கொண்டு நகரும் தமிழ் சீரிஸ் ‘லெகஸி’. ஆர். மாதவன், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கி இருக்கிறார். இது குறித்து இயக்குநர் சாருகேஷ் சேகர் பகிர்ந்து கொண்டதாவது, “‘லெகஸி’ எனக்கு மிகவும் பர்சனல். நான் நினைத்ததை கொண்டு வர படைப்பு சுதந்திரம் கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு நன்றி. மனித உறவுகளின் சிக்கல் மற்றும் உணர்ச்சிகள் குறித்தான கதை எப்போதும்…

Read More

“எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love”- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

திறமையான இளம் ஸ்டார்ட்டப் நிறுவனரான தாராவின் பயணம் மென்மையான அதேசமயம் துணிச்சலான முதலீட்டாளரான மேத்யூவுடன் இணையும்போது இன்னும் வலுவடைகிறது. நம்பிக்கை அடிப்படையிலான டேட்டிங் செயலியை தாரா ஆதரிக்கும் அதே வேளையில், கெமிஸ்ட்ரி அடிப்படையிலான ஒரு டேட்டிங் செயலியை மேத்யூ ஆதரிக்கிறார். இந்த விவாதத்தை தீர்த்து வைக்க அவர்கள் ஒருவருக்கொருவர் சவால் விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸாக பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கிறது #Love. இதுகுறித்து இயக்குநர் பாலாஜி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “எதிரெதிர் துருவம் ஈர்க்கும் என்பது காலங்காலமாக காதலின் எழுதப்படாத விதி. ஆனால், இந்தக் காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் டேட்டிங் செயலிகளில் அது எப்படி மாறியிருக்கிறது என்பதை புதிய திருப்பத்துடன் சொல்லி இருக்கிறோம். இன்றைய டேட்டிங் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தக் கதை, காதல்…

Read More

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் ‘ஸ்டீபன்’ உண்மைக்கு நெருக்கமான கதை!

தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தொடர் கொலையாளியை ஒரு மனநல மருத்துவர் மதிப்பிடுகிறார். இதன் மூலம் அதிர்ச்சி, வஞ்சகம் மற்றும் உளவியலை கையாளுதல் ஆகியவற்றின் வலையை அவிழ்க்கிறார். கொலையாளி உண்மையிலேயே குற்றவாளியா அல்லது இருண்ட விளையாட்டில் பாதிக்கப்பட்ட மற்றொருவரா என்ற கேள்வி எழுகிறது. அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள இந்த ‘ஸ்டீபன்’ படம் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது.   இதுகுறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்துகொண்டதாவது, “‘ஸ்டீபன்’ கதை ஒரு அமைதியான, கால்குலேட்டட் தொடர் கொலையாளியைப் பற்றியது. அவர் அமைதியற்ற தனிப்பட்ட ரகசியங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து கோமதி சங்கர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநராக இந்தப் படம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. முடிந்தளவு உண்மைக்கு நெருக்கமாகவும் அக்கறையுடனும் இந்தக் கதையை எடுத்துள்ளோம். இதுபோன்ற ஜானரில் கதை சொல்ல…

Read More

டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில் இன்று நடைபெற்றது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, “மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது. இந்த படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாழ்த்துக்கள். இதைப்போல பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ என ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். திறமையாளர்கள் மற்றும் நல்ல கதைகளை ஏஜிஎஸ் நிறுவனம் எப்போதும் ஆதரிக்கும். அந்த வகையில், இந்தப் படத்தின் சிறு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” என்றார். பின்னணி பாடகர்கள் திப்பு & ஹரிணி, “இந்தத் தருணம்…

Read More

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்தது. “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக மின்னல் வேகத்தில், வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை…

Read More

கதைகள் எப்போதும் பார்வையாளர்களை மகிழ்விக்கும், சில்லிட வைக்கும், எண்டர்டெயின் செய்யும்…அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகளை அறிவித்துள்ளது நெட்ஃபிலிக்ஸ்!

*அக்டோபர் 13, 2025:* நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அதேபோல, நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியலில் 14 வாரங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், தென்னிந்திய படங்களான ‘புஷ்பா2’, ‘அமரன்’, ‘லியோ’ மற்றும் ‘தேவரா’ போன்ற படங்களும் ஆங்கிலம் அல்லாத டாப் 10 படங்களில் உலகளவில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் ஒரிஜினல் கதைகளுக்கு எந்தளவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’, ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’ ஆகிய ஒரிஜினல் வெளியீடுகளைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு புதிய படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாக…

Read More

உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் !!

உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் !! ஹைதராபாத்தில் நடைபெற்ற தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி, தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து ஊக்கமூட்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற முக்கியமான செய்தியுடன், அவருடைய கருத்துக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியைத் தொடங்கிய சாய் துர்கா தேஜ், அனைவருக்கும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக ஓட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்..,“அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வேகமாக ஓட்டாதீர்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்,”என்று கூறிய அவர், தனது உயிருக்கு ஆபத்தான விபத்துக்குப் பிறகு வாழ்க்கை குறித்து தன் கண்ணோட்டம் மாறியதை…

Read More

மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு;

2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியாக “மகாசேனா” என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது. இந்த படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் நடிகர் சூரி மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோரால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. காடு மற்றும் ஆன்மீக நிழல்களில் உருவான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி, இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கும் மகாசேனா படம், இயற்கை, ஆன்மீகம் மற்றும் புராணக் கூறுகளை இணைக்கும் ஒரு காடு சார்ந்த ஆக்சன்-திரில்லர் ஆகும். மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் இடையிலான நிலையான மோதலை, குடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய இடங்களில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் 90% பகுதி உண்மையான…

Read More