சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு கொலை வழக்கில் கைதான கணக்கு (உதயா) என்கிற கைதியை போலீஸ் வேனில் அழைத்துப் போகிறார்கள். அவனை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போலீசாரில் வேந்தனும் ஒருவன். இந்த பயணத்தில் கணக்கை கொல்ல ஒரு ரவுடி கூட்டம் துரத்துகிறது. இன்னொரு பக்கம் உயர் போலீஸ் அதிகாரி தரப்பிலும் சேலம் போவதற்குள் கணக்கின் கணக்கை முடிக்க உத்தரவிடுகிறார். இருதரப்பு கொலை முயற்சியில் இருந்தும் கணக்கு தப்பினானா…யார் இந்த கணக்கு? என்ற கேள்விக்கு பரபரப்பும் விறுவிறுப்பும் இணைந்த திரைக்கதை பதில் தருகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, அவ்வப்போது பிளாஷ்பேக் மூலம் சொல்லும் திரைக்கதை உத்தியே அடுத்தடுத்த காட்சிகளை சுவாரசியமாக்கி விடுகிறது. கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும் துறுதுறுப்புமாக படம் முழுக்க வருகிறார். காதல் காட்சிகளில் ஒரு வெள்ளந்தியான…
Read Moreபடைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதே ஐபி கிளைம்ப் சேவையின் நோக்கம்
அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுப்படுத்தும் ஃபிப்செயின் டெக்னாலஜி, ஐபி கிளைம்ப் (IP Climb) எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. படைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ள இன்றைய காலகட்டத்தில் இதில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐபி கிளைம்ப் தொடங்கப்பட்டுள்ளது. திரைப்பட மற்றும் ஊடக அறிவுசார் சொத்துகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகை சட்ட உதவிகளையும் வழங்கும் ஐபி கிளைம்ப், படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை…
Read Moreபோகி – திரை விமர்சனம்
போகி பண்டிகையின் போது தேவையில்லாத வற்றை கொளுத்துவார்கள். இந்த போகி எதை கொளுத்துகிறது என்று பார்க்கலாமா… இந்தியாவை உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மறைத்து வைக்கப்படும் கேமராவின் மூலமாக பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கிறது மலேஷியாவை சேர்ந்த ஒரு கூட்டம். இன்னும் சிலர் மர்மான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த இரண்டு வழக்குகளையும் தீவிரமாகக் கண்காணிக்கிறது காவல்துறை. இந்தப் பிரச்சனையில் நாயகன் நபி நந்தி எப்படி உள்ளே வருகிறார் என்பது சுவாரசியத்துக்கு குறைவில்லாத திரைக் களம். படத்தின் நாயகி லப்பர் பந்து ஸ்வாசிகா இரண்டாம் பாதியில் தான் வருகிறார். ப்ளஸ்-2 வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவர் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் அக்கிரமத்தை தட்டிக் கேட்கும் வரை ‘நாங்கல்லாம் அப்பவே இப்படித்தான்’ என்று சொல்லும்…
Read Moreசரண்டர் – திரை விமர்சனம்
தேர்தல் போன்ற முக்கியமான காலகட்டங்களில் துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் ஒரு காவல் நிலையத்தில் தனது துப்பாக்கியை சரண்டர் செய்கிறார். அந்த துப்பாக்கி காணாமல் போகிறது. தேர்தல் முடிந்ததும் அந்த துப்பாக்கியை மன்சூர் அலிகானிடம் ஒப்படைக்க வேண்டும். அதனால் அதற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் காவலர் லால் சிக்கலில் மாட்டுகிறார். அதேநேரம், தேர்தல் பட்டு வாடாவிற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அரசியல்வாதியின் பத்து கோடி ரூபாய் காணாமல் போகிறது. அதிலும் காவல்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. துப்பாக்கியைத் தொலைத்த லால் நிலை என்ன? தொலைந்த 10 கோடி ரூபாய் பணத்தின் நிலை என்ன? இரண்டு கேள்விகளுக்கும் பரபரப்பான திரைக்கதை விடை தருகிறது. நாயகனாக பயிற்சி உதவி ஆய்வாளர் வேடத்தில்…
Read Moreஉசுரே – திரை விமர்சனம்
உசுரே -திரை விமர்சனம் காதலை புதிய கோணத்தில் சொல்லி இருக்கும் படம். எதிர் வீட்டில் புதிதாக குடி வரும் ஜனனி மீது காதலாகிறார் டிஜே அருணாசலம். ஜனனியோ இந்த காதலை கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் டிஜேவின் இந்த ஒரு தலைக் காதல் ஜனனி அம்மாவிடமிருந்து செருப்படியும் வாங்கித் தருகிறது. உண்மைக் காதலுக்கு செருப்படி கூட வெகுமானம் தான் என்று எண்ணும் வரிசையில் நமது காதலனும் இருக்க… தொடர்ந்து தனது காதல் முயற்சியை தொடர்கிறார். ஒரு கட்டத்தில் நாயகனின் இந்த விடாப்பிடியான காதலுக்கு ஓகே சொல்கிறார் ஜனனி. ஆனால் நாயகனை சந்திக்கும் போது , நான் சிறுவயதாக இருக்கும் போது அப்பா எங்களை விட்டு போய்விட்டார். அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார். அம்மாவுக்கு பணம் தான் எல்லாமே.ஒரு பத்து லட்ச ரூபாய் ரெடி பண்ணி அம்மா…
Read Moreகுட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’ ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து…
Read More“12x12x12 பயணம்” மையக் கருத்தாக 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
சென்னை, இந்தியா – தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில் தனது புதிய அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த புதிய விரிவாக்கம், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் வெற்றி மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்த நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணத்தை பிரதிபலிக்கிறது. இந்த தொடக்க விழா ஜூலை 19, 2025 அன்று நடந்தது. முக்கிய விருந்தினர்களாக Mr. Abhishek Mehta, அர்பன் ட்ரீ ஹோம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் Mr. Priyank Pincha, லைஃப்ஸ்டைல் ஹவுசிங் & இன்பிராஸ்டிரக்சர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வு, ஆர்சாப்டின் 12வது ஆண்டு விழாவையும் 12x12x12 பயணத்தை விழாக்கருத்தாகக் கொண்டு 12வது ஆண்டு விழா நடைபெற்றது 12 முன்னோடியான…
Read Moreநடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி & பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் மூன்று விருதுகள் வென்றுள்ளது!
சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதைக்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் என 3 பிரிவுகளில் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதை ’பார்க்கிங்’ திரைப்படம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் & பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்த ‘பார்க்கிங்’ படம் அதன் வெளியீட்டிற்கு பின்பு விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. தற்போது 71ஆவது தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்தது. அதில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை (தெலுங்கு படம் ‘பேபி’யுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது) மற்றும் சிறந்த துணை நடிகர் விருது எம்.எஸ். பாஸ்கர் அவர்களுக்கும் என மூன்று தேசிய விருதுகளை அள்ளியுள்ளது…
Read Moreவரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!
நடிகை வரலட்சுமி சரத்குமார், இலங்கையின் பிரமாண்டமான Cinnamon Life – City of Dreams இடத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் தனக்கே உரிய சீரான அழகையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். புகைப்படக் கலைஞர் கேசரா எடுத்த இந்த போட்டோக்கள், ‘கருப்பு வெள்ளை’ மற்றும் ‘பேஸ்டல்’ நிறங்களில் வரலட்சுமியின் இயல்பான பிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாகப் பதிவு செய்கின்றன. (Instagram: @kesara_art) மெல்லிய நிறங்களில் கட்டமைக்கப்பட்ட ஆடைகளில் தோன்றும் அவர், சினிமாவின் ஆழத்தையும், எக்காலத்திலும் மரையாத ஃபேஷனையும் கலந்து சுமந்திருக்கிறார். “கம்பீரமாக இரு , ஒவ்வொரு புகைப்படமும் ” எனும் அவரது விளக்கம், வெறும் வார்த்தையல்ல – திரைத்துறையிலும், வாழ்க்கையிலும் அவர் கட்டியெடுத்த தனி அடையாளத்தின் பிரதிபலிப்பாகும். ‘The Verdict’ போன்ற படங்களில் அவரின் அடக்கமும் ஆழமும் கலந்த நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு, தன்னிச்சையான…
Read More“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!
டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது. துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. “மதராஸி” படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில், நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு “சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும்…
Read More